லாலு பிரசாத் நேர்காணல்

நிதீஷூக்கு எனது ஆதரவு உண்டு.. ஆனால் அவரை எனது தலைவராக நான் ஏற்றுக்கொள்ளவில்லை

                                          
                                       லாலு பிரசாத் யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தள் தலைவரான லாலு பிரசாத் யாதவ் ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்தது, மதரீதியான கும்பல் அதிகாரத்தை வருவதைத் தடுக்கவும் கர்வாப்ஸி போன்றவற்றை செயல்படுத்தும் பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கவும் என்று கூறுவதோடு பல்வேறு விஷயங்களைக் குறித்தும் நம்மிடையே தனது இயல்பான தன்மையில் உரையாடுகிறார்.

                                ஆங்கிலத்தில்: நயீர் ஆஸாத்
                                தமிழில்: ரிச்சர்ட் மஹாதேவ், ஏ.எஸ்.










வரும் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ் குமாரை தேர்ந்தெடுக்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள நேர்ந்தது?

நிதிஷ் குமாரை எனது தலைவராக இன்றும் சரி இதன் முன்பும் நான் ஏற்றுக்கொண்டதில்லை என்பதை உங்களிடம் முன்பே தெரிவித்திருக்கிறேன். திரு. குமார் பீகாரின் முதலமைச்சர் அவருக்கு எனது கட்சியின் ஆதரவு உண்டு. மதவாத கும்பல் ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காகவே நாங்கள் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறோம். இந்த பிரச்சினை குறித்து நானும் குமாரும் பலமுறை பேசியிருக்கிறோம். பீகாரில் மட்டுமல்லாது நாடு முழுக்கவுமே மதச்சார்பற்ற கூட்டணி வேண்டும் என்பதை நியூ டெல்லியில் சந்தித்து பேசியிருக்கிறோம். அப்போது சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவை எங்களது தலைவராக கருத்தில் கொண்டிருந்தோம். கட்சிகள் இரண்டும் ஒன்றாக இணையச்செய்யவும் நினைத்தோம். அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் பி.ஜே.பி. கட்சியை எதிர்க்க ஒன்றிணைய முடிவெடுத்தோம்.  இதுதான் எங்களது திட்டம். திரு. குமார் மதச்சார்பற்ற ஒரு தலைவராவார். நியூடெல்லியில் நாங்கள் முலாயம் சிங் யாதவை சந்தித்தபோது இது குறித்து விவாதித்து திரு. குமாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க முடிவெடுத்தோம்.

நான் விஷம் குடிக்கவும் தயார் என்று தாங்கள் கூறியிருப்பதற்கு சரியான அர்த்தம்தான் என்ன? திரு. குமாருக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட கசப்புணர்வின் வெளிப்பாடுதானா அது?

திரு. குமார் அவர்களின் உறவில் எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் இதற்கு முன்பும் பலமுறை ஒன்றாக இணைந்து செயல்பட்டிருக்கிறோம். 1988 ஆம் ஆண்டு கபூரி தாக்குர் இறந்தபோது திரு. குமார் எனக்கு எதிரான தலைவராக உருவானார். எனது திட்டம் ஒன்றே ஒன்றுதான். மதச்சார்பான சக்திகளை தடுக்கவேண்டும் என்பதுதான். எல்.கே. அத்வானி ரத ஊர்வலம் நடத்தும்போது அதனை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்யவேண்டும் என்று கூறியவன் நான். இம்முறையில் தொடர்ந்து இதற்காக போராடி வருகிறேன். பி.ஜே.பியின் கார் வாப்ஸி செயல்பாடுகளை தடுக்க முன்னுரிமை அளித்து விஷம் குடிக்கவும் தயார் என்று கூறினேன். இந்த செயல்பாட்டிற்காகவே நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.

மக்கள் உங்களையும் திரு. குமாரையும் ஒரே மேடையில் பார்க்க காத்திருக்கின்றனர். இதனை கிடைத்த சந்தர்ப்பங்களிலும் அவர் செய்திருக்க முடியுமே?

நாங்கள் எங்கள் கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்கிறோம். வரும் தேர்தல்களில் நிச்சயமாக இருவரும் ஒன்று சேர்ந்து மேடைகளில் தோன்றுவோம். இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும். எங்களுடைய திட்டம் செயல்பாடுகள் தெளிவாக இருக்கின்றன. நாங்கள் இருவரும் சேர்ந்து பீகார் மக்களிடம் சென்று பிரதமர் நரேந்திரமோடி பெற்றுத்தந்துவிடுவதாக வாக்களித்த கருப்புபணம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பேசப்போகிறோம்.

பி.ஜே.பி. கட்சி பீகாரில் சட்டம் ஒழுங்கு சீரழிந்ததற்கு உங்களைத்தான் குற்றம் காட்டியுள்ளது. உங்களை காட்டாட்சி நடத்துபவர் என்று கூறியுள்ளதே?

இது பி.ஜே.பி.  எங்கள் எதிராக தொடுக்கும் சுலோகன் ஆகும். காட்டாட்சி என்று சொல்லி பீகாரை கெடுக்க அக்கட்சி முயல்கிறது. பீகார் மிக மோசமான நிலையிலிருக்கிறது அங்கு செல்லாதீர்கள். வெளியே வேலைக்கு சென்றிருக்கும் பீகாரிகள் இங்கு எந்த முதலீடும் செய்யவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்றும் எதிர்மறையான பிரசாரத்தை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். பி.ஜே.பி தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி செய்துவருகிற சூழலில் அங்கே என்ன நிலை உள்ளது? மக்கள் பகலிலேயே கொல்லப்படுகிறார்கள், கனிம வளங்கள் நிறைந்த அம்மாநிலத்தில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க வருவதில்லையே?

பி.ஜே.பியின் பிரசாரத் திட்டங்கள் அனைத்தும் தனக்கான சுயநல பலன்களைக் கொண்டவையே. பீகாரில் சட்ட ஒழுங்கு சீரழிந்ததற்கு உதாரணத்தை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் பீகாரைச்சேர்ந்த நீங்களே காட்டாட்சி எங்கே நடைபெறுகிறது என்று கூறுங்களேன். அவர்கள் காட்டாட்சி என்று கூறும் மனிதர்தான் இன்று பீகார் வளர்ந்திருப்பதற்கு காரணம். பி.ஜே.பி என்னை வெறுப்பதற்கு காரணம் நான் பிற்படுத்தப்பட்ட, ஏழை, மற்றும் சிறுபான்மையினரின் நலன்களைக் குறித்து வெளிப்படையாக பேசுவதுதான். லாலு யாதவ் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை.

ரகுவன்ஸ் பிரசாத் சிங், திரு. குமார் முதலமைச்சர் வேட்பாளராக நிற்க தகுதியானவரல்ல என்று கூறும்போது அதை நீங்கள் தடுக்கவில்லையே ஏன்?

     ரகுவன்ஸ்பிரசாத் சிங் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. கட்சித்தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே அவர் பேசினார். நாங்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்த மனிதர்கள். திரு. குமாருக்கு நாங்கள் எதிரானவர்களல்ல. இப்போது நானோ எனது குடும்பத்தை சேர்ந்தவர்களோ முதலமைச்சராக வரும் ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை மேலும் திரு. குமார் பீகாரின் முதலமைச்சராக இருந்து வருபவரும் கூட. ரகுவன்ஸ்பிரசாத் சிங் திரு. குமார் குறித்து தேர்தலுக்கு முன்னர் ஆலோசனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியதில் தவறென்ன இருக்கிறது? இதில் என்மீது இன்னொரு தவறான கருத்து கூறப்படுகிறது நான் காங்கிரஸ் கட்சிக்குஅழுத்தம் கொடுத்தேன் என்று. திரு. குமார் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு வந்த பின்பு என்னைச் சந்தித்து ஆலோசித்தார். ராகுல்காந்தியோடு திரு. குமார் சந்தித்த சந்திப்பு குறித்து நான் கவனம் கொண்டே இருக்கிறேன். பிறகு டெல்லியில் நாங்கள் ஆலோசனை செய்தபோது ஒருமித்த முடிவாக திரு. குமார் முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானித்தோம்.

ஜிதன் ராம் மான்ஞ்சி மதச்சார்பற்ற உங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று விரும்பினீர்கள். ஆனால் அவர் புது டெல்லியில் உள்ள பி.ஜே.பியின் அலுவலகத்தின் கதவைத் தட்டியுள்ளார். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

அவர் எங்கள் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வராமல் பி.ஜே.பிக்கு சென்று தன்னை இணைத்துக்கொண்டது  குறித்து எனக்கு அவரின் மீது எந்த வெறுப்புமில்லை. ஜிதன் ராம் மான்ஞ்சி தவறான வாய்ப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரை பி.ஜே.பி. நன்கு பயன்படுத்திக்கொள்ளும். திரு. குமாருக்கு உதவி செய்வதாக என்னை அவர் குற்றம் சாட்டுகிறார். மார்ச்க்குப் பிறகு  திரு. மான்ஞ்சி நான் எனது கட்சி ஆதரவை வேறு எந்த தலைவருக்கும் தராமல் ஒருங்கிணைந்த ஜனதாதள் கட்சிக்கு கொடுத்தபிறகு அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் எடுத்த முடிவு அவரது சொந்த முடிவாகும். ஆனால் அவரைத் தடுத்து நிறுத்துவது எங்களது கடமை.

உங்களது கூட்டணியான ஒருங்கிணைந்த ஜனதாதள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பி.ஜே.பிக்கு அச்சுறுத்தலாக அமையுமா? அவர்கள் பக்கம் இரு தலித் தலைவர்கள் ராம்விலாஸ் பஸ்வான், இப்போது ஜிதன் ராம் மான்ஞ்சி இருக்கிறார்கள். உங்களது முஸ்லீம், யாதவர், தலித் கூட்டணி சிதறிப்போகும் வாய்ப்புள்ளது என்று நினைக்கிறீர்களா?

முஸ்லீம், யாதவர், தலித் கூட்டணி இதற்கு முன்பும் வலிமையானதாக நின்றுள்ளது. எது நடந்தாலும் இந்த கூட்டணி உடையாமல் இருக்கும்.

பப்பு யாதவ் குறித்து கூறுங்கள்.

ஆமாம், சிலர் பப்பு யாதவ் குறித்து தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். நீங்களே கூறுங்கள், அவரை அவ்வளவு தீவிரமான ஒருவராக நாம் கொள்ளவேண்டுமா என்ன? அவருக்கு என்ன ஆதரவு இருக்கிறது கூறுங்கள். யாதவர்கள் அரசியல்ரீதியாக வலிமையான ஜாதியாக உள்ளார்கள். எது சரி, எது தவறு என்பதை அவர்கள் அறிவார்கள். நாங்கள் அமைத்துள்ள கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியை நிச்சயம் தகர்த்தெறியும். முன்பு நடந்த தேர்தல்களில் அக்கட்சி பலன் பெற்றதற்கு காரணம் நானும் திரு. குமாரும் ஒன்றாக இணையாததே காரணம். ஆனால் இன்று இருவரும் இணைந்திருக்கும் வேளையில் எங்கள் இருவருக்குமாக சேர்ந்து கிடைக்கும் வாக்குகள் பி.ஜே.பியை கடுமையாக சேதப்படுத்தும். இம்முறை நிச்சயமாக தோற்றுப்போவார்கள்.

திரு. மான்ஞ்சி குறித்து….

திரு. மான்ஞ்சி ஒரு முக்கியமான காரணமாக கொள்ளவேண்டியதில்லை. ராம்விலாஸ் பஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியில் மான்ஞ்சியை இருக்க விடுவார் என்று நினைக்கிறீர்களா என்ன?

திரு. குமார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் யாதவ வாக்குகள் சிதறும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இப்போது அது சிதறிப்போகுமா? பி.ஜே.பி தலைவர் சுஷில்குமார் மோடி, தலித் மற்றும் யாதவர்கள் பி.ஜே.பியின் பக்கம் ஆதரவு தந்து உங்களை விட்டு விலகி மோடியின் பக்கம் வருவார்கள் என்று கூறியிருக்கிறாரே?

ஒரு யாதவர் கூட பி.ஜே.பி க்கு செல்லமாட்டார். அவர் தவறான பிரசாரத்தை பரப்புகின்றார். நான் முன்னரே கூறியபடி யாதவர்கள் ஜாதி அமைப்பில் வலிமையான இனக்குழுவாகும். ஜே.பி இயக்கத்திலிருந்து அவர்கள் என்னுடன் வலிமையாக இணைந்து பயணிக்கின்றன. அந்த இயக்கத்தில் பணியாற்றிய சுஷில்குமார் மோடிக்கு யாதவர்கள் எங்கள் மீது கொண்டுள்ள அபிமானம் தெரியும். முஸ்லீம்கள் மற்றும் யாதவர்கள் எங்களை விட்டு வேறெங்கும் செல்லமாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ பீகார் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஏன்? இந்த தேர்தல் அவ்வளவு கடினமானதாக அவர்களுக்கு இருக்கும் என்பதும், தங்கள் பயத்திலிருந்து வெளியே வரவும் முயல்கின்றனர்.

மோடி தரும் வரிசையான வாக்குறுதிகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்? இந்த வாக்குறுதிகள் அறிவிப்புகள் உங்களுடைய வாக்குவங்கியை சரிக்கும் என்று நினைக்கிறீர்களா?

(சிரிக்கிறார்)தவறான வாக்குறுதிகளைத் தரும் பி.ஜே.பி க்குத தக்க பாடம் கற்றுத்தர மக்கள் காத்திருக்கின்றனர். அவர் கடும் கோபத்துடன் இருக்கின்றனர். எங்கே கறுப்பு பணம்? மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் பணம் வந்து சேரும் என்று அவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதனை அவர்கள் அரசியல் ஜூம்லா என்பார்கள். ஏழை மக்களிடம் இப்படி ஏமாற்றும் வாக்குறுதிகள் தர மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது? இதைப்போலவே பி.ஜே.பி  நம் நாட்டின் விவசாயிகளையம் ஏமாற்ற முனைகிறது. பெரும் முதலாளிகளின் பின்னணியில் செயல்படும் பி.ஜே.பி அரசு அந்த தொழில் முதலாளிகளுக்காக விவசாயிகளின் நிலத்தை பிடுங்கித்தரும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. நாம் எப்படி இதனை அனுமதிப்பது? அவர்களது திட்டத்திற்கு எதிராக நாம் போராடியே ஆகவேண்டும்.

தேர்தலில் நிற்பதற்கான இடங்கள் குறித்து ஏதேனும் ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளதா? எத்தனை இடங்களில் போட்டியிட உங்கள் கட்சி முடிவெடுத்துள்ளது?

     அதைக் குறித்து இன்னும் ஆலோசித்து வருகிறோம். கட்சியின் கமிட்டி இதனை தீர்மானித்து அறிவிக்கும். இது ராஷ்டிரிய ஜனதாதள், ஒருங்கிணைந்த ஜனதாதள் மட்டும்  சார்ந்ததல்ல எங்களுடன் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேசிய காங்கிரஸ் கட்சி குறித்ததுமாகும். விரைவில் இவை முடிவு செய்யப்பட்டுவிடும். தேர்தல் இடங்கள் குறித்து எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்த முடியாது என்று உறுதியாக கூறுகிறேன். எங்களது ஒரே செயல்திட்டம் பி.ஜே.பியினை தடுத்து நிறுத்துவது மட்டும்தான்.

நன்றி: டெக்கன் கிரானிக்கல், 14 ஜூன் 2015






  

பிரபலமான இடுகைகள்