உலகம் முதல் உள்ளூர் பிரச்னை வரை உட்கார்ந்து பேசுவோமா? - பிரேக் தி டிவைட் அமைப்பு பற்றி தெரிஞ்சுக்கோங்க

 







அபய்சிங் சாச்சல் தனது சகோதரருடன்...


உலக பிரச்னைகளை உட்கார்ந்து பேசும் பள்ளி மாணவர்கள்! 


உலகில் ஏற்பட்டு வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உண்டு. இதற்கு பிரச்னையை எதிர்கொள்ளும் தரப்புகள் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும். இந்த வகையில் உலக நாடுகளிலுள்ள பள்ளி மாணவர்கள், சமூகப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க உருவானதுதான் பிரேக் தி டிவைட் என்ற நிகழ்ச்சி. இதனை பிரேக் தி டிவைட் (Break the divide) என்ற தன்னார்வ அமைப்பு நடத்துகிறது. 2016ஆம் ஆண்டு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அபய்சிங் சாச்சல் என்ற பள்ளி மாணவர், இந்த அமைப்பைத் தொடங்கினார். 

அபய்சிங் சாச்சல், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது அபய்யின் சகோதரர் சுக்மீத், ஆர்க்டிக் பகுதிக்கு சென்றிருந்தார். அபய்சிங், தனது சகோதரர் சுக்மீத்துடன் வீடியோ அழைப்பு வழியாக பேசத் தொடங்கினார். இருவரும் தொடக்கத்தில் டிவி நிகழ்ச்சி, திரைப்படம் என்று தான் பேசினார்கள். பிறகு மெல்ல சமூகப் பிரச்னைகளைத் தீவிரமாகப் பேசி விவாதிக்கத் தொடங்கினார். 

அபய்சிங் சாச்சல், படித்த சீகுவாம் பள்ளி மாணவர்களும் விவாதத்தில் இணைந்தனர். அவர்கள் பகுதியில் இருந்த குடிநோயாளிகளால் ஏற்படும் பிரச்னை, அதிகரிக்கும் தற்கொலை ஆகியவற்றைப் பற்றியும்  ஆர்க்டிக்கில் இருந்த சுக்மீத்திடம் பேசத் தொடங்கினர். அபய், சுக்மீத் இந்த உரையாடலை தொடர நினைத்தனர். அபய்யின் பள்ளி நண்பர்கள் தம் முயற்சி பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட, பிரேக் தி டிவைட் அமைப்பின் செயல்பாடு புகழ்பெறத் தொடங்கியது. 

இதில் உலகம் முழுவதுமுள்ள பள்ளிகள் தம்மை இணைத்துக்கொண்டு, இன்னொரு நாட்டிலுள்ள பள்ளி மாணவர்களோடு உரையாடலாம். தைவான், தென் ஆப்பிரிக்கா, பொலிவியா ஆகிய நாடுகளில் பிரேக் தி ட்வைட் அமைப்பிற்கு, கிளைகள் உள்ளன. தற்போது பிரேக் தி ட்வைட் அமைப்பை ஆப் வழியில் அணுக செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. 

http://breakthedivide.net/about/

https://www.readersdigest.in/mind/story-screen-pals-127491

படம் - ரீடர்ஸ் டைஜெஸ்ட் இந்தியா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்