தாய்ப்பால் அருந்தினால் உடல் பருமனை தடுக்கலாமா?




Image result for breast feeding




தாய்ப்பால் கொடுப்பது உடல் பருமனைத் தடுக்குமா?


நிச்சயம் தடுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். போர்ச்சுக்கல் தேசிய சுகாதார நிறுவனமும், உலக சுகாதார நிறுவனமும் ஒன்று சேர்ந்து செய்த ஆராய்ச்சியில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் அருந்தாத 22 சதவீத குழந்தைகள் உடல் பருமன் பிரச்னைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.


இதுகுறித்து ஒபேசிட்டி ஃபேக்ட்ஸ் எனும் இதழில் செய்தி வெளிவந்துள்ளது. 22 நாடுகளிலுள்ள 30 ஆயிரம் சிறுவர்களை சோதித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் பதினாறு ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்கும். தாய்ப்பால் கொடுப்பது இன்றைய பொருளாதார சூழலில் தவிர்க்கப்பட்டு வருகிறது. காரணம், பெண்களும் வேலைக்கு செல்லும் சூழல்தான். குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறுமாதம் தாய்ப்பால் தருவது அவசியம். இந்த காலகட்டத்தின் அளவு குறைந்தால் அவர்கள் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் மாற்றாக பசுவின் பாலை அருந்துகிறார்கள். இதிலுள்ள புரதம் உடலின் கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும் இன்சுலின் சுரப்பை மறைமுகமாக தூண்டுகிறது.


தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றா நோய்களின் ஆபத்துகள் இதோ இருக்கிறது. இதனை மக்களுக்கு பிரசாரம் செய்யப்போகிறோம் என்கிறார் மருத்துவர் ஜோவோ பிரெடா.

ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் தரும் தாய்மார்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத த்திற்கும் அதிகமாக உயர்த்த உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நன்றி: ஈகோவாட்ச்

பிரபலமான இடுகைகள்