ஸ்டார்ட்அப் மந்திரம் 19-21: பங்குச்சந்தை



Image result for startup fund at share market



ஸ்டார்ட்அப் மந்திரம் -19

 

-கா.சி.வின்சென்ட்

 

பங்குச்சந்தையில் இறங்குவதில் நிறுவனத்திற்கு பிளஸ்ஸும் உண்டு மைனஸூம் உண்டு.

 

பிளஸ்

 

வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், மக்கள் ஆகியோரின் மனதில் பிராண்டாக அடையாளம் கிடைக்கும். நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு வட்டியில்லாமல் கடன்களைப் பெறுவதோடு, புதிய திறமைகளை ஈர்க்கலாம்.

 

மைனஸ்

 

நிறுவனம் குறிப்பிட்ட வணிக வெற்றிகளைப் பெற்று பெரியதாக இருக்கவேண்டும். சரியான தலைமை இல்லாதபோது நிறுவனத்தின் பங்குகள் தள்ளாடி கீழிறங்கத்தொடங்கும். வளர்ச்சி மற்றும் லாபத்திட்டம் கச்சிதாக செயல்படுத்தாதபோது பிராண்டின் நம்பிக்கை குலையும்.

 

"பங்குச்சந்தையில் பெறும் முதலீடு, சப்ளிமெண்ட்டுகள் போல. பெறும் லாபத்தில் முதலீட்டாளர்கள் டிவிடெண்டுகள் வழங்கி பிராண்ட்டை மேம்படுத்தலாம்" என்கிறார் மைண்ட் ட்ரீ, ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவன இயக்குநரான அசோக் சூதா. நிறுவனம் முறையான வளர்ச்சி, லாபதிட்டங்கள் இன்றி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது ஆபத்து என எச்சரிக்கிறார் எக்ஸ்ஃபினிட்டி வென்ச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். "நிறுவனத்தின் லாப வளர்ச்சி, மாரத்தான் ஓட்டம் போல. முன்பே திட்டமிட்டு இறங்கவேண்டும்" என்கிறார்.

 

சார்ஜ்பீ நிறுவனத்தைச்சேர்ந்த கிரிஷ் சுப்ரமணியன் நிறுவன விற்பனை, முதலீடு தொடர்பாக பரிந்துரைக்கும் சில இணையதளங்கள்: Jamesclear.com, labs.openviewpartners.com, bothsideofthetable.com, firstround.com.

 

"இந்தியாவில் ஸ்டார்ட்அப் முனைவோர், குழுக்களை கட்டமைப்பதில் பின்தங்கியுள்ளனர். மற்றொரு பிரச்னை பலரும் புதிய தொழில்முனைவோராக இருப்பது. நிறுவன மதிப்பை சரியாக திட்டமிடாதபோது அதனை விளம்பரப்படுத்த அதிக செலவு செய்யும் கட்டாயம் உருவாகிறது" என்கிறார் முதலீட்டாளரான பேஜுல் சோமையா. தற்போது வால்மார்ட் நிறுவனத்திற்கு கைமாறியுள்ள ஃபிளிப்கார்ட் கடந்தாண்டு 2500 மில்லியன் டாலர்களை முதலீட்டு நிதியாக சாஃப்ட் பேங்கிடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பேடிஎம்,ஒன்97, ஓலா ஆகிய நிறுவனங்கள் பெருமளவு முதலீட்டு நிதியை ஈர்த்துள்ளன.

                                 

 


டிஜிட்டல் வாய்ப்பு

 

பணமதிப்பு நீக்கம் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தாலும் பேடிஎம், மொபிக்விக் ஆகிய நிறுவனங்கள் இத்தருணத்தை பயன்படுத்தி சந்தையில் நன்கு காலூன்றிவிட்டன. "டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையிலுள்ள பெரிய சவால், தகவல் கொள்ளையும் இதற்கு அளிக்கவேண்டிய பாதுகாப்புதான். அடுத்து POS மெஷின்கள் மற்றும் QR கோடு சார்ந்ததாக சில்லறை வணிகம் அமையும். இச்சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன்" என்கிறார் மொபிக்விக் இயக்குநரான பிபின்ப்ரீத் சிங்.



ஸ்டார்ட்அப் மந்திரம் 20!

 

-கா.சி.வின்சென்ட்

 

சூழலை உருவாக்குங்கள்!

 

வியாபாரிகளுக்கு ஸ்மார்ட்போனில் பேசுவது, இமெயில் கடந்து பணம் செலுத்த முடியும் என்பதை நம்ப வைக்க சிரமப்பட்டாலும் பின்னாலும் அச்சவாலிலும் பிபின் ஜெயித்தார். தற்போது நிதிசார்ந்த சேவைகளில் கவனம் குவித்திருக்கிறது மொபிக்விக்.

 

ஒரு ஸ்டார்ட்அப் பிஸினஸைத் தொடங்க எத்தனை நாட்களாகும்? இந்தியாவில் 29 நாட்கள் தேவைப்படுகிறது. இந்தியாவில் எது பிளஸ்? வரி. வரி கட்டுவதற்கான எளிய எலக்ட்ரிக் கருவிகள், இணையத்தில் அனுமதி வழங்குவது ஆகியவை ஸ்டார்ட்அப் முயற்சிகளை ஊக்கப்படுத்துகின்றன.

 

குறையும் முதலீடு!

 

2018 ஆம் ஆண்டில் 372 ஒப்பந்தங்கள் மூலம் 3 பில்லியன் டாலர்களை இந்தியா முதலீடாக பெற்றுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது முதலீடுகளின் எண்ணிக்கையில் 17%(13.5 பில்லியன் டாலர்கள்-885 ஒப்பந்தங்கள்), முதலீட்டுத்தொகையில் 47% குறைவு.

 

Blume Ventures

டெல்லியைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ப்ளூம் வென்ச்சர்ஸ், பிட்ஸ்டாப்(பெங்களூரு), டிஹெச்பி(குருகிராம்), தி வெட்டிங் பிரிகேட்(மும்பை) ஆகிய நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் டாலர்கள் வரை நிதியளித்து உதவுகிறது.  

Accel Partners

1983 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதலீட்டு நிறுவனம். ஸ்டார்அப்களின் தொடக்கம், விரிவாக்கம் ஆகியவற்றுக்கான நிதியை(50 மில்லியன் டாலர்கள் வரை) வழங்கிவருகிறது. ப்ரௌசர்ஸ்டேக், ஸைனியர், விக்கிடு ரைட் உள்ளிட்ட ஸ்டார்ட்அப்களுக்கு உதவுகிறது.

Sequoia Capital India

மில்லியனியத்தில் பெங்களூருவில் தொடங்கப்பட்ட  நிறுவனம், முதலீடுகளை அளித்து ஸ்டார்ட்அப்களுக்கு உயிர்கொடுக்கிறது. 100 மில்லியன் டாலர்களை முதலீடாக அளிக்கும் நிறுவனம் டெய்லிநின்ஜா, ரா பிரஸ்ஸரி ஆகிய ஸ்டார்ட்அப்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.

IDG Ventures

1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமெரிக்க முதலீட்டு நிறுவனம். பத்து மில்லியன் வரை முதலீடு அளிக்கும் இந்நிறுவனம், சிக்ட்யூபில், கிரிஸ்டல்.ஏஐ ஆகியவற்றுக்கு நிதியளித்துள்ளது.

Nexus Venture Partners

2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம். பத்து மில்லியன் டாலர்களை வரை நிதியளிக்கும் இந்நிறுவனம் ஹசுரா, ஜோவியோ உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

இந்தியா முழுக்க 200க்கும் மேற்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் பெரு, சிறு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. 2015 ஆம்ஆண்டு 650 முதலீட்டாளர்கள் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளதை ஒப்பிட்டால் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 14% குறைந்துள்ளது.

 



21


ஸ்டார்ட்அப் மந்திரம் 21

 

கா.சி.வின்சென்ட்

 

தொழிலில் நல்ல லாபம். ஆனாலும் வேலையில் சுயதிருப்தி கிடைக்கவில்லை. அப்போது டிஜிட்டல் வரைபட கண்காட்சியைப் பார்வையிட, ராகேஷ் தலையில் பல்ப் பளிச்சென எரிந்தது. "இந்தியாவில் வளர்ச்சியடையும் முக்கிய பிஸினஸாக மேப்களை நினைத்தோம். கோககோலா, மோட்டரோலா, எஸ்ஸார் டெலிகாம் ஆகிய நிறுவனங்களே முதல் வாடிக்கையாளர்கள். கூகுள்மேப் உருவாகாத நிலையில் ரூ.100கோடி பிஸினஸை எட்டியபின் 2005 இல் மேப் மை இந்தியா என சேவைக்கு பெயர் வைத்தோம்" என புன்னகைக்கிறார் ராகேஷ்.

 

இணைய இணைப்பின்றி ஜிபிஎஸ் சேவையை வழங்கத்தொடங்கி இந்நிறுவனம், 2007 இல் இதற்கான கருவிகளையும் விற்கத் தொடங்கியது. "இன்று சந்தையில் நிலைத்திருக்க எதிர்காலத்தை திட்டமிட்டு சவால்களையும் தடைகளையும் விருப்பத்துடன் எதிர்கொண்டால்தான் ஸ்டார்ட்அப்பில் வெற்றியும் மனதில் திருப்தியும் கிடைக்கும்" ன்கிறார் ராகேஷ்.

 

 


ஆச்சரிய அலிபாபா!

 

மொபைல் வழி பரிவர்த்தனை - 90%

 

ஆர்டர்களின் எண்ணிக்கை -812 மில்லியன்

 

அலிபே நிறுவன பரிவர்த்தனை அளவு - 1.5 பில்லியன்

 

டெலிவரி ஆட்கள் எண்ணிக்கை - 3 மில்லியன்(600 நகரங்கள்)

 

புனே, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட பகுதிகளின் பாரம்பரிய ஆட்டோமொபைல் தொழில்களையும் புதிய தலைமுறையினர் இணைய உதவியுடன் உலகளவிலான வியாபார களமாக மாற்றியுள்ளனர். கோவையில் உள்ள Ampere எலக்ட்ரிக் வாகன நிறுவனம் இதற்கு உதாரணம்.

 

"மோட்டார் தொழில்நுட்பத்தில் கோவை சிறந்தது என்பதால் எனது தொழிலை இங்கேயே தொடங்கினேன்" என்கிறார் நிறுவனர் ஹேமலதா அண்ணாமலை. இன்று பொருட்களை உருவாக்குவதற்கு குறையாத கவனத்தை அதனை மார்க்கெட்டிங் செய்வதற்கு கொடுக்கவேண்டும் என தொழிலதிபர்கள் முதல் சிறு குறுவணிகர்களும் உணர்ந்துள்ளது நமக்கு பெரும் பலம். மோட்டார் தொழிலுக்கு மட்டுமல்ல, செலவு என்பது மருத்துவ சேவைகளுக்கும் பொருந்தும். காந்த் நாதெள்ளா இதே கோணத்தில் யோசித்து ஐதராபாத்தில் கால்ஹெல்த் என்ற மருத்துவ சேவை நிறுவனத்தை தொடங்கினார். "மும்பையில் நோய் கண்டறியும், கதிர்வீச்சு சோதனைகளுக்கு கட்டணங்கள் அதிகம். ஆனால் ஹைதராபாத்தில் மிதமாக கட்டணத்தில் நல்ல சேவையை அளிக்கிறார்கள்" என்கிறார் காந்த். வாசிக்க வேண்டிய நூல்:  The Innovator’s Dilemma -Clayton M. Christensen.