சிப்கோ இயக்கதில் பங்கு பெற்றதுதான் சூழல் பற்றிய எனது முதல் அனுபவம்! - சுனிதா நரைன், சூழலியலாளர்
சுனிதா நரைன்
சூழல் மற்றும் அறிவியல் மையத்தைச் சேர்ந்த சுனிதா நரைன், பூச்சிக்கொல்லிகள், தேன் கலப்படம் என பல்வேறு விஷயங்களுக்கு எதிராக போராடி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறார். 2002ஆம்ஆண்டு அனில் அகர்வால் இறந்தபிறகு, அவர் தொடங்கிய நிறுவனத்தை ஆராய்ச்சி மற்றும் போராட்டங்களில் பங்கேற்க கூடியதாக சுனிதா மாற்றியிருக்கிறார்.
இவருக்கு சூழல் மீது ஆர்வம் கொள்வதற்கான சூழல் தற்செயலாக ஏற்பட்டது. 1979ஆம்ஆண்டு பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தார். அப்போது சூழல் தொடர்பான பயிற்சி பட்டறையை காந்தி அமைதி அறக்கட்டளை நடத்தியது. அதில் பங்கேற்றவருக்கு சிப்கோ இயக்கம் பற்றி தெரிய வந்தது. 1973இல் உத்தர்காண்டில் தொடங்கிய இயக்கம் அது. இதனை உருவாக்கியவர் சுந்தர்லால் பகுகுணா. கார்த்திகேய சாராபாயுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இவர்கள் அகமதாபாத்தில் உருவாக்கிய விக்ரம் சாராபாய் டெவலப்மெண்ட் இன்ட்ராக்சன் என்ற நிறுவனம் உலகளவில் முக்கியமானது. 1981இல் அனில் அகர்வாலை சுனிதா சந்தித்தார். பினாங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மலேசியா அரசுக்கு சூழல் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் பணியில் இருவரும் இணைந்தனர். அதுதொடங்கி அனில் மறையும்வரை சுனிதாவும் அவருடன் இணைந்தே சூழல் போராட்டங்களிலும் ஆராய்ச்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறார்.
கௌசிக் தேகா
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக