கோமாளிமேடை ஸ்பெஷல் - ரோனி பரௌன்



டான்ஸ் இந்தியா டான்ஸ்!

இந்தியர்களுக்கும் என்டர்டெயிண்மென்டுக்குமான உறவு,  இதயமும் அது பம்ப் செய்யும் ரத்தமும் போல. பிராமிஸாக பிரிக்கவேமுடியாது. .பியிலும் அப்படித்தான் ஜாலி டான்ஸில் கொலக்குத்து டான்ஸ் போட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா முழுக்க சர்ச்சையாகியுள்ளது. குத்து டான்ஸில் குழப்பமா?

உத்தரபிரதேசத்தின் மிர்ஸாபூரில் திருவிழா நடந்தது. விழாவுக்காக அங்குள்ள தொடக்கப்பள்ளிக்கு லீவு கொடுக்கப்பட்டு, அதன் சாவியை பஞ்சாயத்து தலைவர் முதல்நாளே சூதானமாக வாங்கிவைத்துவிட்டார். எதற்கு தன்மகனின் பர்த்டே ட்ரீட்டுக்காகத்தான். அப்புறம் என்ன? அடுத்தநாள் ஐட்டம் கேர்ள்ஸ்களை கூட்டிவந்து பஞ்சாயத்து தலைவர் தன் மகனுக்கு பிறந்தநாள் பார்ட்டி டான்ஸ் நடத்தியதில் ஊரே மிரண்டு போனது. பிரச்னை பார்ட்டி அல்ல. நடத்திய இடம்
ஸ்கூல் என்பதால் பலரும் ஷாக்காகி மூக்கு விடைக்க, கல்வி அதிகாரிக்கு பெட்டிஷனோடு வீடியோவையும் அட்டாச் செய்து அனுப்பிவிட்டனர். என்கொய்ரி  ஆன் தி வே. பிள்ளைகளுக்கு டான்ஸ் கிளாஸ் எடுத்தோம்னு சொல்வாங்களோ?  


 ரோல்மாடல் போலீஸ் சச்சின்

இன்றைய வைரல் உலகில் ஒரே ஒரு போட்டோ போதும் நீங்கள் ஃபேமஸாகி புகழைக்குவிக்க. மத்திய பிரதேசத்தின் கிரிக்கெட் வீரர் போட்டோவும் அப்படித்தான் நேஷனல் வைரலாகிவருகிறது. ஆனால் அதோடு அவர் சொன்ன சோஷியல் மெசேஜூம் செம ஹிட். யார் அவர்? என்ன சொன்னார்?

மத்திய பிரதேசத்தின் சச்சின் அதுல்கர்தான் அந்த வைரல் மனிதர். ஜிம் பாடியில் கிரிக்கெட் பேட்டை கையில் வைத்திருக்கும் போட்டோக்கள் அகில உலக ஃபேமஸ்.  சச்சின் தொட்டது அனைத்தும் துலங்க, அனைத்திலும் கோல்ட் மெடல் ஹிஸ்டரி. தற்போது தன் 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகியும் ஆகிவிட்டார் என்பதுதான் அறியவேண்டிய நியூஸ். முதலிலேயே சச்சினின் கிளாமர் லுக்கில் சரண்டராகி புகழ்ந்தவர்கள் இன்னும் சாம்பிராணி போட, "ஒருவரின் தோற்றம் என்பதைவிட முக்கியமானது அவரின் செயல்பாடுகள்தான். தனிநபர் வழிபாட்டை கைவிட்டு ஒன்றிணைந்து நம் தேசத்தை வலுப்படுத்துவோம்" என பதிவிட்டு ஆர்வக்கோளாறுகளை சைலண்ட் செய்தார். பார்த்தியா எங்க ஹீரோவை? மணிமணியாக பேசுறாரு என அவரின் கமெண்டும் மாஸ் அப்பீல். அப்புறம் என்ன ரசிகர்மன்ற கொடி ஆர்டர் பண்ணுங்க பாஸ்!
��ஸ் கிளாஸ் எடுத்தோம்னு சொல்வாங்களோ?  

 களவு போன 1800 கோடி!

திருடு போனது உண்மைதான். ஆனால் யாரிடமிருந்து? பழங்குடி மற்றும் ஆதிதிராவிட மக்களிடமிருந்து. ஐந்து, பத்தல்ல, சுளையாக 1800 கோடி!

மகாராஷ்டிராவில் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்காக அரசு ஒதுக்கிய மானியத்தொகைதான் அது. 2008 -2014 வரை மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவித்தொகை எங்கே போனது என சிறப்பு விசாரணைக்குழு என்கொய்ரி செய்து வருகிறது. சந்திரபூர், புனே, ஆஸ்மனாபாத், சோலாபூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 25(மொத்தம் 68) கல்வி நிறுவனங்கள் இந்த ஊழல் ஹிட் லிஸ்டில் உள்ளன.  2015 ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏ அதுல் பட்கால்கர், 8 ஆயிரம் போலி மாணவர்களின் பெயரில் மானியத்தை அமுக்கிய பள்ளி குறித்த குற்றச்சாட்டை எழுப்பியதன் பேரில் சிறப்பு விசாரணைக்குழு 2016 இல் அமைக்கப்பட்டது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சமூகநலத்துறை 2800 கோடி ரூபாயை 17 லட்சத்திற்கும் அதிகமான எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குகிறது.  


ang=TA>  

 700 கேரட் நேர்மை!

ஏழைகளை அவர்களின் பாக்கெட்டிலுள்ள பணத்தை  வைத்துத்தான் உலகமே கணிக்கிறது. ஆனால் அவர்களின் இதயம் வெள்ளை என்பதற்கு இந்த சம்பவமே சாம்பிள். ஏழைச்சிறுவனின் கையில் பல லட்சரூபாய் வைரக்கற்கள் கிடைத்தால் என்ன ஆகும்?

குஜராத்தின் மதிதாபுரத்திலுள்ள பிளஸ்டூ மாணவர் விஷால் உபாத்யாய்தான், அந்த திடீர் டயமண்ட் அதிபதி. கிரிக்கெட் விளையாடிபோது, ஃபிளாட்டின் பார்க்கிங் ஏரியாவில் யாரோ தவறவிட்ட டயமண்ட் பாக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார். மதிப்பு 40 லட்சம். "ஒருமுறை டெய்லரான என் அம்மா, அன்றைய சாப்பாட்டிற்கான 50 ரூபாயை தொலைத்துவிட்டார். அன்றைக்கு நாங்கள் பட்டினி கிடந்ததை மறக்கமுடியாது" என்று நெகிழ்ச்சியான விஷால், வைர விஷயத்தை பெற்றோரிடமும் சொல்லாமல் வைரக்கற்களுக்கான ஓனரை பரபரப்பாக தேடியிருக்கிறார். "வைரக்கற்கள் கிடைக்காவிட்டால் கடனுக்காக என் வீட்டையே விற்கும் நிலை" என ஆனந்த கண்ணீர் விட்ட வைரவியாபாரி மன்சுக் சாவலியா, சிறுவனின் ஹானஸ்டியை பாராட்டி அளித்த  அன்பளிப்பு ரூ. 41 ஆயிரம். நேர்மைக்கு விலையில்லை சேட்ஜி!

 மணிப்பூரின் முதல் பெண் பைலட்!

மணிப்பூரின் பூமாய் நாகா பழங்குடியைச் சேர்ந்த பெண், முதல்முறையாக விமானத்தின் ஸ்டீயரிங் பிடித்திருக்கிறார். யெஸ், அரிய இந்த சாதனையை செய்தவர், ரோவெய்னய் பூமாய் என்ற பெண்

மணிப்பூரில் சனபட்டி மாவட்டத்தைச் சேர்ந்த புருல் ரோசோஃபில் என்பவரின் தவமகள்தான் பூமாய். ஆஸ்திரேலியாவின் சவுத்வேல்ஸில் விமான பயிற்சிக் கல்லூரியில் கமர்ஷியல் ஃபிளைட்  ஓட்டும் பயிற்சிக்கு ட்ரெய்னிங் எடுத்த கையோடு, வானில் 8 போட்டு காட்டி லைசென்ஸூம் வாங்கிய தைரிய நாகாமங்கைதான் பூமாய். ஜெட்ஏர்வேஸின் விமானத்தை ஒன் டூ த்ரீ சொல்லி விரைவில் வானில் ஓட்டவிருக்கும் பூமாய்க்கு, செய்தி அறிந்ததும் உலகமே வாழ்த்துகளை குவித்து வருகிறது.  
 மாஸ்டர்பீஸ் எஞ்சினியர்!

எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் லைஃபில் கண்டிப்பாக ஒரு மாஸ்டர்பீஸ் உண்டு. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எஞ்சினியரின் வீட்டில் கிடைத்த க்ரைம் மாஸ்டர்பீஸ் பலரையும் திகிலில் ஆழ்த்திவிட்டது.

1999 ஆம் ஆண்டு அனுபமாவை மேரேஜ் செய்து அமெரிக்காவில் வாழ்ந்த எஞ்சினியர் ராஜேஷ் குலாத்தி பின்னாளில் உத்தராகண்டின் டேராடூனில் குடியேறினார். முதலில் இனித்த திருமணம், ராஜேஷூக்கு கிடைத்த பெண்தொடர்பால் கசந்துபோனது. 2010 ஆம் ஆண்டு வாக்குவாதத்தில் ராஜேஷால் தாக்கப்பட்ட அனுபமா, மூர்ச்சையாகிவிழ, பீதியானவர் மின்சார ரம்பத்தால் வொய்ஃபை பல பீஸ்களாக்கி பாலிதீனால் உடல் பாகங்களை கட்டி ஃப்ரீசரில் வைத்துவிட்டு, மனைவி தாய்வீட்டுக்கு சென்றுவிட்டதாக சொல்லிவிட்டார். பின் பாலிதீனை நகரின் பலபுறமும் டிஸ்போஸ் செய்த ராஜேஷ், அனுபமாவின் சகோதரர் அனுபமாவை பார்க்க இவரது வீட்டுக்கு வந்தபோது மனைவியின் கட்பீஸ் தலையோடு மாட்டிக்கொண்டார். தற்போது சிறையில் இருக்கிறார் க்ரைம் எஞ்சினியர்!

 மெகா சீட்டிங் தேர்வு

பறக்கும்படை ஓவர்டைம் பார்த்தாலும் எக்ஸாமில் அக்கம் பக்கம் அரியர் தீர்க்கும் சிலர் ஆல் ஓவர் உலகிலும் உண்டுதான். அதற்காக கல்லூரியின் அத்தனை மாணவர்களும் அதேபோல இருந்தால் எப்படி? அண்மையில் நடந்த எக்ஸாமில்தான் இந்த காப்பியடிக்கும் காட்சி.

பீகாரின் அந்த கல்லூரி வராண்டாவில் அத்தனை மாணவர்களும் புக்கை புரட்டி ஐயம் தெளிந்து தேர்வு எழுதும் காட்சி சோஷியல் தளங்களில் ஷேர் ஆகி, மாநிலத்தின் மானமே கிழிந்துவிட்டது. வீர்குன்வர்சிங் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம்பெற்ற கல்லூரி அது என கண்டுபிடித்த மிக லேட்டாக கண்விழித்து கண்டுபிடித்த மாநிலஅரசு, பிரஷர் கொடுக்க சர்ச்சை தேர்வு செல்லாது என கூறப்பட்டுவிட்டது. "கேன்சலான பிஏ இரண்டாம்தாள் தேர்வுக்கு முன்னரும் தேர்வில் ஆள்மாறாட்ட புகார்கள் வந்தன. எனவே தேர்வை வேறுதேதிக்கு தள்ளிவைத்துள்ளோம்" என பதிலளித்திருக்கிறார் பல்கலையின் துணைவேந்தர் சையது மும்தாஸூதின். கடந்த 2015 ஆம் ஆண்டிலும் பீகாரில் இதுபோல காப்பி முயற்சி நடந்துள்ளது. மீண்டும் மீண்டும் அவமானம்!

 இந்தியன்போலீசின் வீரச்செயல்!

மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் சிதோரா கிராம பள்ளி அது. பள்ளி அருகே வெடிகுண்டு ஒன்று தட்டுப்பட, உடனே 100 க்கு போன் வந்துவிட்டது. உடனே கிளம்பி வந்தது போலீஸ் படையிலிருந்த ஹெட் கான்ஸ்டபிள் என்ன செய்தார் தெரியுமா?

வெடிகுண்டை குழந்தைபோல தூக்கி தோளில் வைத்த அபிஷேக் படேலை ஆளைக்காணோம். மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார். எங்கே? வெடிகுண்டை டிஸ்போஸ் செய்யவேண்டுமே, அதற்குத்தான் அந்த 1 கி.மீ தடதட ஓட்டம்."400 குழந்தைகள் படிக்கும் பள்ளி அது. குடியிருப்பும் அருகிலிருந்தன. எனவே வெடிகுண்டை அப்புறப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே என் மனதிலிருந்தது" என்கிறார் ஹெட் கான்ஸ்டபிள் அபிஷேக் படேல். அருகில்தான் ராணுவப்பயிற்சி தளம் உள்ளது. எனவே அங்கிருந்து தவறுதலாக வெடிகுண்டு கிராமத்தின் பள்ளி அருகே விழுந்திருக்கலாம் என தகவல் சொல்கிறார் ஐஜி சாகர் சதீஷ் சக்சேனா. வடஇந்தியா துரைசிங்கம்!
� அவமானம்!

 காதலுக்காக கிரீடம் துறக்கும் இளவரசி!

அரசர் குடும்பம் என்றாலும் இங்கிலாந்தும் ஜப்பானும் வேறுபடுவது மேரேஜ் மேட்டரில்தான். கேட்மிடில்டன் சாதாரண பெண் என்றாலும் இளவரசர் வில்லியமை மணந்து அரச குடும்பத்தில் ஒருவராக மிங்கிளானார். ஆனால் தன்னுடன் படித்த சக மாணவரை மணப்பதற்காக ராயல் கிரீடத்தை விரைவில் துறக்கவிருக்கிறார் ஜப்பான் இளவரசி.

ஜப்பான் அரசரான அகிகிட்டோவின் 4 பேரப்பிள்ளைகளில் ஒருவரான மாகோ, விரைவில் தன் உடன் படித்த சக மாணவரை மணக்கவிருக்கிறார் என்பதை இம்பீரியல் ஹவுஸ் அறிவித்துள்ளது. மாகோவின் காதலரான கேய் கொமுரோ, சட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறார். 1817 ஆம் ஆண்டு இயற்றப்பட்டதிலிருந்து முதல்முறையாக  சட்டத்தின் மூலம் அரசர் அகிட்டோ பதவி விலகுவதற்கான திருத்தத்தை சட்டநிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். இளவரசி மாகோ, காதலரான கொமுரோ இருவரும் இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் பல்கலைக்கழக மாணவர்கள். லெய்ஷ்டர் பல்கலைக்கழக டிகிரி பெற்ற மாகோ, மியூசியம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். காதல் இனிது!
o_Valluvan'> 
தொகுப்பு: சிராஜூதின், விஸ்வா சுந்தர்
நன்றி: குங்குமம் வார இதழ் 

amily:TAUN_Elango_Valluvan'>