ஸ்மார்ட் ரோபாட்டுகளின் வரலாறு!




ஸ்மார்ட் ரோபாட்டுகளின் வரலாறு!

1800 ஆம் ஆண்டுகளிலேயே நெசவு ஆலைகளில் மெஷின்கள் இயங்கத்தொடங்கிவிட்டன. 1960 ஆம் ஆண்டுகளிலேயே மெஷின்கள் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இயங்கத்தொடங்கியதோடு, ராணுவத்திலும் இரண்டாம் உலகப்போர் சமயத்திலிருந்தே பயன்படத்தொடங்கிவிட்டன.

எலிசா(1966)
இன்று ஃபேஸ்புக் சாட்பாட்டுக்கு முன்னோடி எலிசா. உளவியல் நிபுணரிடம் கேள்வி கேட்டு பதில் பெறுவது போல இதனை பயன்படுத்தலாம். மிகச்சிறந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் சரியானபடி ஸ்க்ரிப்ட் செய்தால் மிக புத்திசாலித்தனமான மெஷின்தான் இது.

விர்ச்சுவல் கிரியேச்சர்(1994)
கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர் மற்றும் கலைஞரான கார்ல் சிம்ஸ் என்பவர் கண்டறியந்த ரோபாட் இது. ஜெனடிக் அல்காரிதம் மூலம் நீந்த, குதிக்க ஆகிய விஷயங்களை செய்தது.

டீப் ப்ளூ(1977)
ரஷ்யாவின் கேரி காஸ்பரோவை தோற்கடித்த சூப்பர் கம்ப்யூட்டர் இதுமுதல்முதலாக மனிதனின் மூளையை  கணினி வென்ற நிகழ்விது. இந்த வெற்றிக்கு காரணம் இதனை திறமையாக வடிவமைத்த பொறியாளர் குழுவும் விளையாட்டில் இது கையாண்ட முறைகளும்தான். செஸ் கடந்து பெரியளவில் இந்த கணினி கொண்டாடப்படவில்லை.

ஐபிஎம் வாட்ஸன்(2011)

ஐபிஎம் வாட்ஸன் என்பது அமெரிக்காவின் க்விஸ் ஷோவில் போட்டியாளர்களை வென்ற முதல் AI சிஸ்டம் இது. சிஸ்டத்தில் சேமிக்கப்பட்டிருந்த விஷயங்களில் இருந்து கேட்கப்பட்டவற்றை நேர்த்தியாக சொன்னாலும் அடிப்படையான கேள்விகளில் தடுமாறி அவுட் ஆனது.

டீப் க்யூ நெட்வொர்க்(2015)

ஆல்பாகோ கம்ப்யூட்டருக்கு முன்பு கண்டறியப்பட்ட கணினி இது. ஜப்பானிய விளையாட்டான Go விளையாட்டில் அதில் வல்லவரானவர்களையே தோற்கடித்தது. விளையாடும் நுணுக்கங்களை ப்ரோகிராமர்களை அணுகாமல் ஸ்கீரினைப் பார்த்தே கற்றுக்கொண்டது பிளஸ்பாய்ண்ட்.

 தொகுப்பு: பொன்மலர், மஹாதேவ் சாகர்
  


பிரபலமான இடுகைகள்