'மியான்மரில் ரோஹிங்கயாக்களுக்கு நடந்தது மாபெரும் அநீதி'




முத்தாரம் நேர்காணல்
'மியான்மரில் ரோஹிங்கயாக்களுக்கு நடந்தது மாபெரும் அநீதி'
பேராசிரியர் அஸீம் இப்ராஹிம்
தமிழில்: .அன்பரசு


மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லீம் மக்கள் ராணுவத்தினரால் தாக்கப்படும் நிகழ்வால் அவர்கள் இடம்பெயர்ந்து வங்கதேசம், இந்தியா இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. இதில் இந்தியா அகதி மக்களை ஏற்க மறுப்பது, ரோஹிங்கயா சிறுபான்மையினரின் வாழ்வு உள்ளிட்டவற்றைப் பற்றி அமெரிக்க ராணுவக்கல்லூரியில் புள்ளியில் துறை பேராசிரியராக பணியாற்றும் அஸீம் இப்ராஹிமிடம் இது குறித்து பேசினோம்.

ரோஹிங்கயா விஷயத்தில் ஆங் சன் சூகி எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

சூகி அதிக நாட்கள் அமைதி பேண முடியாது. மிலிட்டரி, புத்த மதத்தினர் என இருவருக்கும் எதிரியாக அவர் விரும்பவில்லை. எனவே மௌனம் காத்துநிற்கிறார். இருதரப்பு வன்முறைக்கும் அவரே பொறுப்பேற்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது துரதிர்ஷ்டவசமான நிலை. சூகியின் ஆதரவாளர்களே ரோஹிங்கயா பிரச்னையில் முடிவெடுக்காததை கோழைத்தனமாகவும் அநீதியாக நடவடிக்கையாக கருதுகிறார்கள்.

சூகி ரோஹிங்கயா விவகாரத்தால் தனது நோபல் பரிசை திருப்பி அளித்துவிடுவாரா?

நோபல் பரிசு சூகி முன்னர் செய்த செயல்களுக்கு வழங்கப்பட்டது. ராணுவத்திற்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாக சூகி முன்னர் செயல்பட்டது உண்மை. பிபிசியில் இன அழிப்பு நிகழவேயில்லை என்றாலும் மியான்மரில் நடந்த உண்மையை உலகம் அறிந்துவிட்டது.

இதில் இந்தியாவின் நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

சூகியை அண்மையில் சந்தித்த பிரதமர் மோடியின் எதிர்வினை பெரிய ஏமாற்றம். ஜனநாயக நாட்டின் தலைவரிடம் இதுபோன்ற தன்மையை நான் எதிர்பார்க்கவில்லை. ரோஹிங்கயா இனத்தவர் மீதான படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா அழுத்தம் தந்திருக்க முடியும். ஆனால் இந்தியா மியான்மர் அகதிகள் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இருந்தது.

ரோஹிங்கயா பிரச்னைக்கு காரணம் என்ன?

.நா சபையால் அழிந்துவரும் இனத்தவர் என்று அறிவிக்கப்பட்ட ரோஹிங்கயா பிரச்னை இரண்டாம் போரிலிருந்து தொடங்குகிறது. அப்போதுதான் ஜப்பானியர்கள் பர்மாவுக்கு வந்தனர். பர்மா புத்த மதத்தினர் ஜப்பானுக்கு, ரோஹிங்கயாக்கள் ஆங்கிலேயருக்கும் ஆதரவு தந்தனர். ஜப்பான்- ஆங்கிலேயர் என இருதரப்பினர் போரில் ஆங்கிலேயர் வென்றனர். 1948 ஆம் ஆண்டு மியான்மர் சுதந்திரமடைந்த பிறகு புத்தம், ரோஹிங்கயா என இரு இனத்தவரும் வளர்ச்சி பெறத்தொடங்கினர். 1968 ஆம் ஆண்டு ராணுவ ஜெனரலான நே வின்ஆட்சியைக் கைப்பற்றி, கம்யூனிச வரைவுகளை அமுல்படுத்தினார். நாட்டின்  பொருளாதாரம் சிதைந்ததோடு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் முதன்முதலாக தொடங்கின. புத்த மதத்தினர் மியான்மர் நாட்டினர் என்று பகிரங்கமாகவே அவர் கூறியது கடும் பகையை இரு தரப்பினரிடையே ஏற்படுத்தியது.

ரோஹிங்கயா மக்களின் வெளியேற்றம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

.நா அறிக்கைப்படி, 3 லட்சம் ரோஹிங்கயா இன மக்கள் வங்கதேசம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ரோஹிங்கயாக்கள் 1942 ஆம் ஆண்டு மியான்மருக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்பது ராணுவத்தின் உறுதியான எண்ணம். புது டெல்லியிலுள்ள இந்திய தேசிய இனங்கள் பற்றிய தொகுப்பில், 1824 ஆம் ஆண்டிலிருந்து மியான்மரில் ரோஹிங்கயாக்கள் வாழ்ந்து வந்த தற்கான பதிவு உள்ளது. மியான்மர் அரசு, புத்த மதத்தை அனைத்து சிறுபான்மையினர் மீதும் மேலாதிக்கம் செய்ய விரும்புகிறது.


நன்றி: Pratigyan Das,TOI

தொகுப்பு: ஹரி பன்னா, சுஷி குர்மா   




பிரபலமான இடுகைகள்