ஜாலி பிட்ஸ்!
கோடையில் அதிகரிக்கிறதா
ஆக்சிஜன்?
ஒவ்வொரு சீஸன்களுக்கும்
பருவம் மாறினால் ஒட்டுமொத்த சூழல்களும் மாறுகிறது என்றே அர்த்தம். 1992 ஆம்
ஆண்டு கொலராடோவின் போல்டர் நகரிலுள்ள அமெரிக்க தேசிய வானிலை ஆராய்ச்சிமையம் ஒவ்வொரு பருவகாலத்திலும் ஆக்சிஜன் அளவு உயர்ந்து
குறைவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் கடலில் ஏற்படும்
வெப்ப மாறுபாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. "தாவரங்கள்
வெளியிடும் ஆக்சிஜன் அளவோடு, கடலின் ஆக்சிஜன் அளவும் இணையும்போது,
மாறுபாடு தெரிய வந்திருக்கிறது. இது சிறிய அளவு
என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு பெரியளவு முக்கியத்துவம் தரவில்லை" என்கிறார் அறிவியலாளர் லே நேடால்.
லக்காய் மாட்டிக்கிச்சு! -ரோனி
லக்காய் மாட்டினாலும்
தீராத கிக்காய் ஷாப்பிங் செய்வதுதானே பெண்களின் உலக வழக்கம். யுனிவர்சிட்டி
பெண் ஒருவருக்கு ராங் ரூட்டில் லக்காய் கிடைத்த பணம் என்னாச்சு தெரியுமா?
தென் ஆப்பிரிக்காவின்
வால்டர் சிசுலு பல்கலையில் நடந்தது சிம்பிள் தவறுதான். விளைவு?
அரசே தவிக்கும் அவலம்.கடந்த ஜூனில் தனியார் நிறுவனம்
ஒன்று அரசு கல்விக்கடனில் உணவுக்காக தரவேண்டிய தொகை 107 டாலர்களை மாணவி ஒருவருக்கு
மாற்றும்போது திடீர் குளறுபடி செய்ய, தவறுதலாக ஒரு மில்லியன்
டாலர்கள் மாணவியின் வங்கிக்கணக்கில் ஏறிவிட்டது. எங்கே தப்பு
என அரசு தவறை என்கொய்ரியில் கண்டுபிடித்து விட்டதுதான். ஆனால்
என்ன புண்ணியம், பார்ட்டி, ஆப்பிள்போன்,
டிசைனர் ட்ரெஸ் என 61 ஆயிரம் டாலர்களை காலி செய்துவிட்டார்
அந்த மாணவி. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா தேசிய மாணவர் கல்விநிதி
ஆணையம், குவியும் கல்விக்கடன் அப்ளிகேஷன்களால் தள்ளாடி வரும்
நிலையில் இந்த விவகாரம் அரசின் திறனுக்கு ஸ்வீட் சாம்பிள்.
சூயிங்கம் செங்கல் - ரோனி
சூயிங்கம்மை வாங்கி
மெல்கிறோம் அடுத்து என்ன? இனிப்பு போனதும் சிம்பிளாக ஓரத்தில்
துப்பிவிட்டு அடுத்த சோலியைப் பார்ப்போம். பினிஷ் தேசாய்,
சூயிங்கம் மென்று முக்கிய சூழல் கண்டுபிடிப்பாளராக மாறியிருக்கிறார்
எப்படி?
சிலநாட்கள் மென்று
ஒட்டிய சூயிங்கம்மை எடுக்காமல் விட, அது அப்படியே உலர்ந்து இறுகிவிட
'சூப்பர் ஐடியா கிடைச்சிருச்சு' என வேஸ்ட் பொருட்களை
ரீசைக்கிள் செய்து பொருட்களைத் ரெடி செய்யத்தொடங்கிய பினிஷின் வயது அன்று
16. ஹைதராபாத், மகாராஷ்டிரா, குஜராத் என குப்பைகளின் மூலமே டாய்லெட்டுகளை உருவாக்கியுள்ளார் தேசாய்.
கடந்தாண்டு தொடங்கிய இகோ எக்லெக்டிக் டெக்னாலஜி மூலம் சூழலுக்கு உகந்த
40 க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறார். "நம்மால் ஒன்றிலிருந்து புதிய பொருட்களை உருவாக்கும்போது வேஸ்ட் என்பது எப்படி
உருவாகும்?" எனும் பினாய், 'புனர் அவ்ருதி' என்ற திட்டத்தின் மூலம் பள்ளி கல்லூரிகளில்
ரீசைக்கிள் பொருட்களை தயாரிப்பது குறித்து கற்றுத்தருகிறார். டைமிங் ஐடியா!
கால்பந்தில் முதல்
பெண் ரெஃப்ரீ!-ரோனி
இன்று ஆண்கள் கோலோச்சும்
அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு, புல்லட் வேகத்தில் அதிகரித்து வருவது
பெருமைக்குரிய ஒன்று. ஐரோப்பாவின் முக்கிய கால்பந்து போட்டியில்
உலகின் முதன்முறையாக பெண் ஒருவர் ரெஃப்ரீயாகிறார் என்பது பலரும் கவனிக்காத புது நியூஸ்.
ஜெர்மனியைச் சேர்ந்த
முன்னாள் போலீஸ் அதிகாரியும் நீச்சல் வீராங்கனையுமான பிபியானா ஸ்டெய்ஹாஸ் அந்த முதல்
பெண் ரெஃப்ரீ.
அண்மையில் ஜெர்மனி கால்பந்து சங்கமான(DFB) பெர்லின்
ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிக்கு பிபியானாவை ரெஃப்ரீயாக அஃபீசியலாக அறிவித்து
உலகெங்கும் அப்ளாஸ்களை அள்ளியுள்ளது. "நான் அறிமுகமாகும்
பண்டெஸ்லிகா லீக் போட்டியை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்" என்று மகிழ்ச்சி கரைபுரள பேசும் பிபியானா இதற்கு முன்பே சில விளையாட்டு போட்டிகளுக்கு
ரெஃப்ரீயாக இருந்திருக்கிறார். ஐரோப்பாவின் டாப் 5 கால்பந்து போட்டிகளில் ஒன்றான பண்டெஸ்லிகாவில் பிபியானா அறிமுகமானது போட்டியின்
ஆக்ரோஷ டெம்போவை எகிறவைத்துள்ளது.
தொகுப்பு: ஜஸீலா பானு, குமார் பானர்ஜி