நூல்விமர்சனம்!-தாம்பூலம் முதல் திருமணம் வரை-யுவகிருஷ்ணா




தாம்பூலம் முதல் திருமணம் வரை...யுவகிருஷ்ணாசூரியன் பதிப்பகம்





பொதுவாக தமது ஜாதியில் நடைபெறும் திருமண சடங்குகளின் காரண காரியங்கள் எத்தனை பேர்களுக்கு தெரியும்? பிற இனக்குழுக்களின் சடங்குகளுக்கும் திருதிருவெனத்தான் விழிப்போம். தமிழ்நாட்டின் பல்வேறு இனக்குழுக்களின் திருமணவிழா, அதற்கான சடங்குகள், எதற்கு அந்த சடங்குகள் என்பதை துல்லியமான தகவல்களோடு எழுதியிருக்கிறார் யுவகிருஷ்ணா செல்லச் சுருக்கமாக லக்கி. 

விவரங்கள் டேட்டாக்கள் என கண்சோர வைக்காமல புன்னகையுடன் படிக்க வைக்கும் யுவகிருஷ்ணாவின் மொழி ஆச்சரியமானது. கவுண்டர், செட்டியார்,நாடார்,அய்யாவழி திருமணம் என பல்வேறு திருமணங்களை பட்டியலிட்டவர் சுயமரியாதை திருமணம், இஸ்லாம்.கிறிஸ்துவ திருமணங்களுக்கும் இட ஒதுக்கீடு தந்திருக்கிறார். அதோடு  நம் தலைமுறைக்கு முக்கியத் தகவலாக எப்படி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வது, ஜாதகத்தில் குரு பெயிலானால், ராகு கபடி விளையாடினால் என்ன பரிகாரம் என்பது வரையிலான தகவல்கள் அட்டகாசம். 

தாலியின் டிசைன், நாடார் திருமணங்களில் பிராமணர்களுக்கு தடை ஏன்? என பல நுட்ப நுணுக்க காரணகாரியங்களை அலசி ஆராய்ந்து உதவி செய்தவர்களுக்கு கிரடிட் கொடுத்து யுவகிருஷ்ணா வாசகர்களின் மனதில் உயர்கிறார். வெறும் திருமணம், சடங்குகளைப் பற்றி மட்டுமே பேசிவிட்டு விஆர்ஆஸ் வாங்காமல், இன்றைய ஜெனரேஷனில் திருமணம் எப்படி முன்னேறியிருக்கிறது என அப்டேட் கொடுத்து வியக்க வைக்கிறார் ஆசிரியர். அதாவது ஸ்கைப்பிலேயே கல்யாணம் செய்வது சின்ன உதாரணம். தினகரன் வசந்தம் இதழில் வாராவாரம் ஆரவாரமாக வந்து நிதானமாக வாசகர்களின் மனதில் அமர்ந்த அற்புத தொடரின் தொகுப்பு இந்நூல். சென்னை புத்தகத்திருவிழாவில் கிடைக்கும் . திருமண சீக்ரெட்ஸை அறிய வாசிக்க வேண்டிய நூல்.   

 
-கோமாளிமேடை டீம்.

பிரபலமான இடுகைகள்