முத்தாரம் ஸ்பெஷல்ஸ்- தொகுப்பு: பெல்லம் தேவி




உப்பில் பிளாஸ்டிக்!

குடிநீர் குழாயில் பிளாஸ்டிக் கலந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உறுதி செய்த நிலையில், தற்போது கடல்நீரில் அதிகரிக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்கினால் உப்பு மாசுபட்டு வருகிறது என இங்கிலாந்து, சீனா, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலுள்ள கடலில் 12.7 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளது என்கிற ஆய்வுத்தகவல் அலற வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு இது. ஒரு நிமிடத்திற்கு ஒரு குப்பை லாரி கழிவு கடலில் கொட்டப்படுகிறது என்கிறது ஐநா சபை. 2.3 கிராம் உப்பில் 660 எனும் அளவில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதையும், 90% அமெரிக்கர்கள் அதிகளவு உப்பை சேர்த்துக்கொள்வதும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "பிளாஸ்டிக் கலப்படமான உப்பு மனிதர்களை மட்டுமல்ல சூழலையும் சேர்த்து கெடுக்கிறது" என்கிறார் நியூயார்க் மாநில பல்கலையைச் சேர்ந்த ஷெரி மாசன்.

பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட 21 வகை உப்புகளிலிருந்து பெறப்பட உப்புகளிலும் இருந்த பிளாஸ்டிக், பாலிஎத்திலீன், பாலிபுரப்பலீன். இந்த இருவேதிப்பொருட்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில் காணப்படுபவையாகும்.  


முக்கிய வழக்கு விசாரணைகள்!- விக்டர் காமெஸி

உலகில் பல்வேறு வழக்குகள் கிடப்பில் கிடந்தாலும் அவற்றில் சில மட்டுமே மக்கள் கவனத்தை மேக்னட்டாய் இழுக்கும். இதோ அவற்றில் சில வழக்குகள்!

லியோன் ஸோல்கோஸ் வழக்கு!

இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற வழக்கு இது. வெறும் 8 மணி நேரம் விவாதிக்கப்பட்டது என்பதுதான் இதில் ஆச்சரியம். 1901 ஆம் ஆண்டு செப். 6 அன்று அதிபர் வில்லியம் மெக்கின்லே பான் அமெரிக்கன் எனும் கட்டிட வடிவமைப்பாளர்களின் கண்காட்சியை திறந்து வைத்து மக்களை வரவேற்றார். அப்போது புரட்சி மனிதரான லியோன் இருமுறை அதிபரை துப்பாக்கியால் சுட்டார். ஏன்? பணக்காரர்களுக்கு மட்டுமே அதிபர் உதவுகிறார் என்ற கோபம்தான். அதிபர் பரலோகம் போய் எட்டு நாட்களானபிறகு, லியோனுக்கு ஆதரவாக ஆஜரான இரு வழக்கறிஞர்களிடமும் அவர் பேசவில்லை. 1901 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று, லியோனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு மின்சார நாற்காலியில் அமர்த்தி கொல்லப்பட்டார்.

சார்லஸ் மேன்ஷன் வழக்கு!

அமெரிக்காவில் 1969 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு கொலைகள் மக்களை அதிர வைத்தன. அதில் ஒருவர், பிரபல திரைப்பட இயக்குநரான ரோமன் போலான்ஸ்கியின் மனைவியான ஷரோன் டாடே இம்முறையில் கொல்லப்பட்டவர்தான். அப்போது அவர், எட்டு மாத கர்ப்பிணியும் கூட. இதற்கு காரணம் என சார்லஸ் மேன்ஷன் என்பவர் குற்றம் சாட்டப்பட்டார். கோர்ட்டில் சார்லஸ் மற்றும் அவரது குடும்பத்தினரும் தலையை மழித்து மந்திரம் சொல்லி வழக்கு விசாரணையை பிக்னிக் போல எடுத்துக்கொண்டனர். 1971 ஆம் ஆண்டு ஜனவரியில் சார்லஸ் குடும்பத்தாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னாளில் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டது.

.ஜே. சிம்சன் வழக்கு

1994 ஆம் ஆண்டு ஜூன் 13 அன்று நள்ளிரவில் சிம்ப்சனின் முன்னாள் மனைவியான நிக்கோல் ப்ரௌன்,  மனைவியின் நண்பருமான ரொனால்ட் கோல்ட்மேனும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இறந்து கிடந்தனர். இருவரும் கொல்லப்பட்ட இடத்தில் சிம்ப்சனின் ரத்தம் மாதிரிகள், அங்கிருந்த 12 இன்ச் ஷீ தடம், சாக்ஸில் நிக்கோல் மற்றும் சிம்ப்சனின் ரத்த கறைகள் இருந்தது அவர் மீது குற்றம் சாட்ட ஏதுவாக இருந்தது. அதேவேளையில் போலீசார், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மீது இனவெளி புகாரில் ஈடுபடுகின்றனவர் என சர்ச்சை கிளம்பியது. இறுதி தீர்ப்பில் ஓ.ஜே.சிம்ப்சன் விடுதலை செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு கோல்ட்மேன் குடும்பத்தினர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து தோல்வியுற்றார் சிம்ப்சன். 2008 ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி மற்றும் கடத்தலுக்காக 33 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றது விசித்திரம்தானே!

மைக்கேல் ஜாக்சன் வழக்கு!

2000 ஆண்டிலேயே பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது குழந்தைகளை தவறாக பயன்படுத்துகிறார் என வழக்கு தொடரப்பட்டது. 2003 ஆம் ஆண்டு இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பது போல மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளுடன் படுக்கையில் உறங்குவது போல லிவில் வித் மைக்கேல் ஜாக்சன் ரிலீசானது. 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாக்சனின் வீடு சோதனை செய்யப்பட்டு, நவம்பர் 20 அன்று அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஜனவரி 31 வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. ஜாக்சனுக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்த சிறுவன் கேன்சரால் பாதிக்கப்பட்டவன். பிறகு ஜூன் 13 அன்று ஜாக்சன் இந்த வழக்குகளிலிருந்து ஜூரிகளால் விடுவிக்கப்பட்டார். 2009 ஜூன் 25 அன்று மைக்கேல் ஜாக்சன் காலமானார்.

சீக்ரெட் பிளான் X37B

அண்மையில் எலன்மஸ்கினினுடைய X37B விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது என்ன பிளான் என்று பலருக்கும் மண்டைக்குள் குடைச்சல். போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம், ஆர்பிடல் டெஸ்ட் வெகிள் என்று அழைக்கப்படுகிறது.

 ராக்கெட் போல கிளம்பினாலும் திரும்ப பூமிக்கு வந்திறங்கும்போது சாதாரண விமானம் போலவே செயல்படும். அமெரிக்க ராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து விண்வெளி விமானம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏழுக்கு நாலு என்ற அளவில சிறியளவில் சரக்கு வைக்கும் இடம் உண்டு. இதற்கு முன்பு 718 நாட்கள் விண்வெளியில் சுற்றிவந்த விண்வெளி விமானம் இது. தற்போது போயிங் தயாரித்துள்ள X-37C ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளைக் கொண்டது. 9 மீ. நீளம், 3 மீ. உயரம், 4,989 கி.கி எடையுடையது. அட்லஸ் ராக்கெட்டை பயன்படுத்த 109 மில்லியன் செலவெனில், ஃபால்கன் 9 ராக்கெட்டை பயன்படுத்த 62 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவு. "இது ரீயூஸபிள் ராக்கெட் ஏவுவதற்கான சோதனை முயற்சி" என்கிறது அமெரிக்காவின் பென்டகன் தகவல்.    

 வெப்பத்தை சமாளிக்க பெயிண்ட்!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் சம்மரில் 38 டிகிரி செல்சியசில் சூரியன் செம ஃபார்மில் பின்னியெடுப்பார். ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் வாழும் நகரத்தை அப்படியே விட்டுவிடுவார்களா என்ன? தற்போது இதற்காகவே புதிய பெயிண்டை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் 85% வெப்பத்தை குறைக்கமுடியும். ஒருமுறை பெயிண்ட் அடித்தால் 11 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை குறைக்கலாமாம். "கலிஃபோர்னியாவின் முதல் நகரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் செய்துள்ள முயற்சியை பிற நகரங்களும் பின்தொடர வாய்ப்புள்ளது" என்கிறார் நகர நிர்வாக அதிகாரியான கிரெக் ஸ்பாட்ஸ்.

ஆனால் மரங்களை விதைக்காமல் பெயிண்ட்டை அள்ளிதெளிப்பது சூழலுக்கான சிக்கல் என எச்சரிக்கிறார் கலிஃபோர்னியா பல்கலையின் சூழல் பேராசிரியரான ஜார்ஜ் பான் வெய்ஸ். மரங்கள், கூரைகள் ஆகியவை இதற்கான மாற்றாக அமையக்கூடும் என்றாலும் பெயிண்டை சோதனை செய்யும் முயற்சிகள் நகரெங்கும் ஜரூராக தொடங்கிவிட்டன. "இது வீடற்றவர்களுக்கும் பெரிய ஆறுதலாக இருக்கும். மேலும் ஏர்கண்டிஷனர் வசதியும் நடைபாதை பெயிண்ட் ஐடியாவும் வேறுபட்டதல்ல" என ஆச்சர்ய பதில் தருகிறார் சூழலியலாளரான ஆலன் பரேக்கா.
21 வகை உப்புகளிலிருந்து பெறப்பட உப்புகளிலும் இருந்த பிளாஸ்டிக், பாலிஎத்திலீன், பாலிபுரப்பலீன். இந்த இருவேதிப்பொருட்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில் காணப்படுபவையாகும்.  

-layout-grid-align:none;text-autospace:none'> 


புயலின் பெயர் ரகசியம்!

ஹார்வி புயல் போய் மூச்சை நிம்மதியாக விடுவதற்குள் அடுத்த புயலாக இர்மா உள்ளே நுழைந்து ஊரையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. புயலை தடுக்க முடியாது. அட்லீஸ்ட், பெயரையாவது மூளையில் நினைத்துக்கொள்ளலாம் அல்லவா?

1953 ஆம் ஆண்டிலிருந்து ஜெனீவாவைச் சேர்ந்த World Meteorological Organization ,பி என ஆர்டரில் அட்லாண்டிக் புயல்களை 6 லிஸ்டுகளாக வரிசைப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு லிஸ்டிலும் 21 புயல்களின் பெயர் உள்ளது. இதிலுள்ள பெயர்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரிப்பீட் ஆகும். ஒரு பருவத்தில் 21 புயல்களுக்கு மேல் வந்துவிட்டால் கிரேக்க எழுத்துக்களில் புயல்கள் குறிப்பிடப்படும். அழிவுகளை ஏற்படுத்திய கரீனா, சாண்டி, மேத்யூ ஆகிய பெயர்கள் தற்போது ரிடையர்டாகிவிட்டன. புயல் தாக்கும் பகுதியைச் சார்ந்தும் பெயர் வைக்கலாம் எ.கா. ஜப்பானின் கேட்சனா(2009), பிலிப்பைன்சின் ஆன்டோய். 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வானியலாளர் கிளமண்ட் ராக்ஜ் புயல்களுக்கான பெண் பெயருக்கான கண்டுபிடிப்பாளர்.   
�ேறுபட்டதல்ல" என ஆச்சர்ய பதில் தருகிறார் சூழலியலாளரான ஆலன் பரேக்கா.
21 வகை உப்புகளிலிருந்து பெறப்பட உப்புகளிலும் இருந்த பிளாஸ்டிக், பாலிஎத்திலீன், பாலிபுரப்பலீன். இந்த இருவேதிப்பொருட்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில் காணப்படுபவையாகும்.  

-layout-grid-align:none;text-autospace:none'> 

அமெரிக்காவில் மெகா கொள்ளை!

அமெரிக்காவைச் சேர்ந்த Equifax Inc நிறுவனத்தின் மீது 30 க்கும் மேலான வழக்குகள் பதிவாகிவிட்டன. எதற்காக? மக்களின் கிரடிட் கார்டு தகவல்களை திருடர்களிடம் கோட்டை விட்டதற்காக. ஏதோ ஒருவர் இருவரல்ல, 143 மில்லியன் அமெரிக்கர்களின் தகவல்கள் அம்போவாகி விட்டன பாஸ்!

நடந்த பிரச்னையை லேட்டாக அடையாளம் காணும் வழக்கப்படி ஜூலை 29 அன்றுதான் கண்டுபிடித்தது ஈக்யூஃபேக்ஸ். உடனே மக்களை மக்களின் சமூக பாதுகாப்பு எண் உள்ளிட்ட எண்களை பாதுகாக்கும் விதிகளை பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டது. சிலரது வழக்குகள் அட்லாண்டாவில் செயல்பட்டு வரும் ஈக்யூஃபேக்ஸ் நிறுவனத்தின் இலவச சேவைகளால் பிரச்னை என்றும், இன்னும் சிலர் தகவல் திருட்டு என ஈக்யூஃபேக்ஸ் கூறுவதே பயனர்களை காஸ்ட்லியான தனது ப்ரீமிய சேவைகளுக்கு நகர்த்தத்தான் என ஆக்ரோஷமாக புகார் மனுவில் கூறியுள்ளனர். குறைந்த கட்டண சேவை இலவசம் என்பதே புதிய ப்ரீமியம் சேவைகளை அறிவிக்கவும், பொருட்களை அறிமுகப்படுத்தவும்தானே என சிம்பிள் பதிலை கையில் வைத்துள்ளது ஈக்யூஃபேக்ஸ் நிறுவனம். சரமாரியான புகார்கள் காரணமாக 3.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள  இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20.7% சரிவைச் சந்தித்துள்ளது.
�்புகளிலிருந்து பெறப்பட உப்புகளிலும் இருந்த பிளாஸ்டிக், பாலிஎத்திலீன், பாலிபுரப்பலீன். இந்த இருவேதிப்பொருட்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில் காணப்படுபவையாகும்.  

-layout-grid-align:none;text-autospace:none'> 

ராணுவத்தில் AI ஆதிக்கம்!

"செயற்கை அறிவு எந்திரங்கள்தான் எதிர்காலம். இது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும்தான். அதை யார் ஆளமுடிகிறதோ அவர்கள்தான் உலகின் லீடர்" என 16 ஆயிரம் பள்ளிகளில் காணொளிக்காட்சி மூலம் மாணவர்களிடையே உரையாற்றியிருக்கிறார் ரஷ்ய அதிபர் புடின். ஏறத்தாழ ராணுவ பலத்தை AI மூலம் அதிகரிப்பதில் ரஷ்யாவின் முனைப்பை காட்டுகிற இந்த பேச்சு, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் போட்டியையும் மறைமுகமாக கூறுகிற ஒன்று. தானியங்கி ட்ரோன்கள், ஆயுத வாகனங்கள் ஆகியவை பின்னாளில் வீரர்களின் வலிமையை அதிகரிக்ககூடும்.
                                  
"அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் எதிர்கால ராணுவ பலம் செயற்கை அறிவை முன்வைத்தே அமையும்" என்கிறார் தேசிய பாதுகாப்புத்துறை அதிகாரியான கிரிகோரி சி ஆலன். சீனாவின் பாதுகாப்பு கவுன்சில் 2030 க்குள் ஏஐ மூலம் ஆயுத பலத்தை உயர்த்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. சீனாவைப் போல பிளானாக இல்லாவிட்டாலும் அமெரிக்கா ஆயுதங்களை கட்டுப்படுத்தி இயக்கும் மென்பொருட்களைக் குறித்த ஆய்வை தொடர்ந்து செய்து வருகிறது. இதில் ஆட்டோமேஷன் மற்றும் ஏஐ என இரண்டிலும் ரஷ்யா பின்தங்கியுள்ளது. 2025 க்குள் ராணுவத்தில் 30% ரோபோமயமாக்கம் என தீவிரமாக செயல்பட்டு வரும் ரஷ்யா, சிறியவகை ட்ரோன் தயாரிப்பில் பிரபலமானது. தனது ஏஐ தொடர்பான அறிவை ரஷ்யா 2016 தேர்தலில் பயன்படுத்தியது அனைவரும் அறிந்ததே. போட்டி கடுமையாகி வருகிறது காணும் நிஜம்.

luvan'> 
-layout-grid-align:none;text-autospace:none'>


நன்றி: முத்தாரம் வார இதழ்