அறிவியல் புத்தகங்கள் அறிமுகம்! - தொகுப்பு:புலந்தர் ககான்
புக் கார்னர்!
LIFE 3.0
Being Human in the Age of Artificial Intelligence
by Max Tegmark
336pp,Rs 1,791
Knopf
நாம் கண்டுபிடித்த எந்த டெக்னாலஜியையும் விட AI என்பது
சமூகம்,போர், குற்றம்,வேலை என அத்தனை விஷயங்களிலும் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எம்ஐடி பேராசிரியரான
மேக் தெக்மார்க் இந்நூலில் அ முதல் ஃ வரை தெளிவுபடுத்து அதை எப்படி பிராஃபிட்டாக்கலாம்
என ஐடியாக்களையும் தூவியுள்ளார். ஆட்டோமேஷன் எதிர்காலம் எனில்
உங்கள் குழந்தைக்கு என்ன கற்றுக்கொடுப்பது, பிரைவசி காப்பது,
வேலை மார்க்கெட்டில் நாம் ஜெயிப்பது எப்படி நாம் தயங்காமல் கலந்துகொள்ள
வேண்டிய கருத்துக்களை ஆசிரியர் இந்நூலில் பேசியிருப்பதே இதனை முக்கியப்படுத்துகிறது.
The Cosmic Machine:
The Science That Runs Our Universe and the Story Behind It
by Scott Bembenek
358pp, Rs.1,362
Zoari Press
அணுக்கள்,ஆற்றல்,க்வாண்டம் மெக்கானிசம் ஆகியவையே பால்வெளியின் ஆதாரம். அவை நாம் வாழும் உலகை எப்படி பாதிக்கின்றன, அவற்றின்
கண்டுபிடிப்பால் நமக்கு கிடைத்ததென்ன ஆகியவற்றை பேசும் நூல் இது. இன்று இருக்கும் உலகில் நாம் கண்டுபிடித்த தொடக்க கால கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதிலிருந்து
அறிவியலின் சுவாரசிய கதை தொடங்குகிறது. அறிவியல், வரலாறு, சுயசரிதை என அனைத்தின் காக்டெய்ல் மிக்ஸாக இந்நூல்
நம்மைச்சுற்றிய உலகைப்பற்றி அறிய சூப்பர் வழிகாட்டி.
CATCHING BREATH
The Making and Unmaking of Tuberculosis
by Kathryn Lougheed
272pp ,Bloomsbury
Rs. 1,027
மலேரியா,
ஆன்டிபயாடிக் ஆகியவற்றை விட காசநோயால் இறக்கும் மக்களின் எண்ணிக்கையே
அதிகம். Mycobacterium tuberculosis என்ற கிருமியால் உலகெங்கும்
ஆண்டுதோறும் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகின் மக்கள்தொகையில்
மூன்றில் ஒருவருக்கு காசநோய் பாதிப்பு உள்ளது. காசநோய் உலகின்
நகரமயமாதல் மற்றும் தொழில்மயமாதல் ஆகியவற்றினூடே எப்படி பரவி வந்துள்ளது என்பதை துல்லியமாக
கட்டுரைகள் நேர்காணல், ஆய்வுகள் ஆகியவற்றின் வழியாக விவரிக்கும்
நூல் இது.
THE NEW EDUCATION
How to Revolutionize
the
University to Prepare
Students for a World in Flux
by Cathy N. Davidson
336pp, Basic
Rs. 1,761
அமெரிக்காவைச்
சேர்ந்த பல்கலைக்கழகங்கள் கல்வியில் எப்படி அப்டேட்டாக வேண்டும் என்பதை ஆற அமர சொல்லித்தரும்
நூல் இது.
மாணவர்களை முன்னிலைப்படுத்தி கல்விமுறையை புத்தம் புதிதாக ரீமேக் செய்யவேண்டுமென்று
கேத்தி என் டேவிட்சன் அர்த்தப்பூர்வமாக வாதிடுகிறார். எதிர்காலத்தை
மாணவர்கள் எதிர்கொள்ள என்னென்ன மாற்றங்களை செய்யவேண்டும் என்று அக்கறையாக ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ள கல்வி நூல் இது.
BIG CHICKEN
The Incredible Story of How Antibiotics Created Modern Agriculture and
Changed the Way the World Eats
-Maryn McKenna Rs. 1,181
400pp,National Geographic
அமெரிக்க உணவு முறையில் புரத சத்துக்காக கோழி இறைச்சி எப்படி உள்ளே நுழைந்தது, அதன் விளைவுகள்
என ஆழமாக விவரிக்கும் நூல் இது. கோழி இறைச்சி மூலம் பரவும் சால்மோனெல்லா
பாக்டீரியா மூலம் உலகெங்கும் 1 மில்லியன் மக்களுக்கு மேல் பாதிக்கப்படுகின்றனர்.
இறைச்சிக்கு பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக்தான் அனைத்துக்கும் மூலம்.
கோழி இறைச்சி எவ்வளவு முக்கியம், எவ்வளவு ஆபத்தானது,
இறைச்சி எப்படி மாற்றப்படுகிறது என மூன்று பார்ட்களாக இதனை விவரிக்கிறார்
ஆசிரியர் மெக்கன்னா. ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு தரும்
நூல் இது.
THE HACKING OF THE
AMERICAN MIND
The Science Behind
the Corporate Takeover of Our Bodies and Brains
by Robert H. Lustig
352pp, Avery
Rs. 1,737
நம் மூளையை இயக்கும்
செரடோனின்,
கார்டிசோல், டோபமைன் ஆகியவற்றை சிறிய துண்டு கேக்,
மி.கி கோகைன், கேம் ஷோ,
ஸ்மார்ட்போன் கூட ஏற்படுத்தி அடிக்ஷனை பழக்கப்படுத்தலாம். உலகின் வணிகமே மனிதர்களை அடிமைப்படுத்தி எப்படி சம்பாதிக்க துடிக்கிறது என்பதை
விளக்குகிறார் Eatreal எனும் தன்னார்வ அமைப்பின் இயக்குநரான ராபர்ட்.
சர்க்கரை, பதப்படுத்திய உணவுகள், உடல்பருமன், முதலாளித்துவம் என நாம் காணாத புரிபடாத பல
புள்ளிகளை இணைத்து பேசும் வாதங்கள் வாசிக்க சுவாரசியமாக உள்ளன.
Against
the Grain: A Deep History of the Earliest States
by
James C. Scott
336
pages Rs. 1,232
Yale
University Press
நெருப்பைக்
கண்டுபிடித்த பின் மனிதர்களின் வாழ்க்கை மெல்ல மாறி விவசாயம், குடும்பம்,
அரசு விதிகள் என மாறியதை ஆதாரங்களோடு விவரிக்கும் நூல் இது. முன்னர் தோன்றிய நாகரிகங்கள் அனைத்தும் தானியங்களை அடிப்படையாக கொண்டிருப்பதையும்
இதில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர் ஜேம்ஸ். அதோடு பார்பேரியன்
இனக்குழு அதிக காலம் கோலோச்சியதையும் ஆய்வுப்பூர்வமாக கூறும் சுவாரசிய நூலிது.
Discovering
the Mammoth: A Tale of Giants, Unicorns, Ivory, and the Birth of a New Science
by
John J. McKay
264
pp, Rs.1,816
Pegasus
Books
கிரேக்கர்கள்
யானையின் எலும்புகளையும்,
சீனர்கள் டிராகனின் பற்களையும் தொல்பொருள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இது போல பேருயிரியான விலங்குகளை ஆவணங்கள் மற்றும் படங்களோடு ஆதாரப்பூர்வமாக
முன்வைக்கும் படைப்பிது. புதைபடிமவியல் மூலம் மம்மூத் எனும் பேருயிர்களை
பற்றி துல்லியமாக சேகரித்த தகவல்களை அளிக்கிறார் ஆசிரியர் ஜான் மெக்கே.
புக் பாய்ண்ட்!
FUTURE WAR
Preparing for the New Global Battlefield
by Robert H. Latiff
208pp, Rs.1,628.
Knopf
உலகின் ஃப்யூச்சர்
போரில் அரசு எதுகுறித்தெல்லாம் கவலைப்படவேண்டும் என அட்வான்ஸாக அட்வைஸ் செய்து எழுதப்பட்ட
நூல். சைபர், பயோடெக்னாலஜி என உலகப்போர் ஏறத்தாழ தொடங்கிவிட்டது.
அமெரிக்க ராணுவத்தில் ஆயுத பிரிவில் பணிபுரிந்த ராபர்ட், புதிய தொழில்நுட்பங்கள் ராணுவ வீரர்களின் வாழ்வை காப்பாற்ற எப்படி உதவும்,
அதன் விளைவுகள் என்ன என விவாதித்துள்ளார். எதிர்கால
போர் ஆயுதங்கள், விதிகள், ராணுவ வீரர்களின்
மனநிலை,மக்களின் தொடர்பு என 360 டிகிரியில்
போர் செய்திகளை விவாதிக்கும் நூல் இது.
WHY WE SLEEP
Unlocking the Power of Sleep and Dreams
by Matthew Walker
352pp,Rs.1,401
Scribner
மூளைக்கு தூக்கம்
எவ்வளவு அவசியம் என்று பேசுகிற நூல் இது. கலிஃபோர்னியா பல்கலையின் உறக்கம்
மற்றும் நியூரோஇமேஜ் ஆய்வகத்தின் இயக்குநரான வாக்கர், தான் பெற்ற
அனுபவங்களை மக்களுக்கு புரியும்படி எழுதியுள்ளார். முதல் பகுதியில்
தூக்கம், இரண்டாவதில் தூக்கத்தின் பயன்கள், தூக்க குறைவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள், மூன்றாவதில்
கனவுகள் மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்கள், கிரியேட்டிவிட்டி
பற்றியும் கசடற விளக்கியுள்ளார் வாக்கர். தூக்கம் பற்றிய அப்டேட்
ஆதாரங்களுடன் பேசுவது இந்நூலின் ஸ்பெஷல்.
l style='margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height:
normal;mso-pagination:none;tab-stops:45.0pt 157.5pt;mso-layout-grid-align:none;
text-autospace:none'>
புத்தகம் புதுசு!
American Wolf: A True Story of
Survival and Obsession in the West
Nate Blakeslee, 320pp
Rs. 1822,
Crown Publishing Group (NY)
மனிதர்களுக்கு
முன்பாக பூமியை ஆண்டது ஓநாய்களே.மக்கள் விரும்பிய அல்லது அவர்களை அச்சுறுத்திய
ஓசிக்ஸ் (எ) யெல்லோஸ்டோன் பார்க்கில் வாழ்ந்த ஓநாய்கள்தான் கதை மாந்தர்கள். வட
அமெரிக்காவில் ஏராளமாக வாழ்ந்து வந்த ஓநாய்கள் 1920 ஆம் ஆண்டில் ஏறத்தாழ அழிவின்
விளிம்பில் நின்றன. ஓசிக்ஸ் என்ற வலிமைவாய்ந்த ஆல்ஃபா பெண் ஓநாய்
பற்றிய கதையில் அன்பு,வீரம், கோபம் என எமோஷனல்
விஷயங்கள் வசீகரமாக வாசிக்க வைக்கின்றன.
Science Comics: Dogs:
From Predator to Protector (Science Comics)
by Andy Hirsch
128pp, Rs. 845
macmillan Publishers
ஒவ்வொரு சயின்ஸ்
காமிக்ஸிலும் டைனோசர்கள்,
பவளப்பாறைகள், எரிமலைகள், வௌவால்கள் என கனமான விஷயங்களை சிம்பிளாக விளக்கும் நூல் இது. நான்காம் வகுப்பு குழந்தை முதல் நாற்பது வயது அங்கிள்ஸ் வரை படிக்க சலிக்காத
அற்புத படங்களைக் கொண்ட காமிக்ஸ் இது. சீகுவாகுவா, செயின்ட் பெர்னார்ட் ஆகிய இருவரும் நாய்களின் சீக்ரெட் வரலாற்றைத் தேடிச்செல்வதே
கதை.
நன்றி: முத்தாரம் வார இதழ்