டீக்கடை ரைட்டர் -ச.அன்பரசு





டீக்கடை ரைட்டர் -.அன்பரசு


புது டெல்லியின்  விஷூ திகம்பர் மார்க் ரோட்டிலுள்ள ஹிந்தி பவன் பிளாட்பார்ம். ப்ரீயாக இருந்தால் ரிலாக்ஸாக லக்ஷ்மண்ராவிடம் ஒரு டீ வாங்கி அருந்துங்கள். டீ குடிக்கும்போது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் பற்றி பேச தோன்றுகிறதா? யோசிக்கவே வேண்டாம். டீக்கடைக்காரர் லக்ஷ்மணிடம் புத்தகம் குறித்து தாராளமாக பேசலாம்

டீக்கடைக்காரருக்கும் புத்தகத்திற்கும் என்ன லிங்க்? இருக்கிறது!
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பிறந்த லக்ஷ்மணுக்கு மூன்று சகோதரர்கள். கிராமத்திலுள்ள டாக்டரின் வீட்டில் வேலை செய்து வந்த லக்ஷ்மண், பின்னர் 1970 ஆம் ஆண்டு மில்லில் பணிசேர்ந்து சில ஆண்டுகளிலேயே மில் திடீரென மூடப்பட, பேக் டூ பெவிலியனாக விவசாய வேலைக்கு திரும்பினார். "என் அப்பாவிடம் 40 ரூபாய் வாங்கிக்கொண்டு போபாலில் வேலை தேடி கிளம்பினேன். அப்போது என் மனதில் இருந்த ஆசை இரண்டு, ஒன்று உலகை பார்க்கவேண்டும். நிறைய படிக்கவேண்டும் என்பதுதான்." என ஆர்வமாக பேசும் லக்ஷ்மணன், வேலை பார்த்துக்கொண்டே மெட்ரிகுலேசன் படிப்பை முடித்திருக்கிறார்

கையில் கொஞ்சம் காசு தேறியதும் 1975 ஆம் ஆண்டு டெல்லி மண்ணை மிதித்த லக்ஷ்மணுக்கு, சோறுபோட்டது கட்டிடத்தொழிலாளி, சாலையோர தாபாவில் சர்வர் வேலைகள்தான். இவரின் அலைபாய்ந்த வாழ்க்கை பெட்டிக்கடைக்காரராக ஹிந்திபவன்  பிளாட்பார்மில் பிளாட்பார்மில் நிலைபெற்ற ஆண்டு 1980.

கிடைக்கும் லீவை தாராகன்ஞ் மார்க்கெட்டில் செலவிட்டு பல  புத்தகங்களை தேடித் தேடி படித்தார் லக்ஷ்மண். தல்ஸ்தோய், ஷேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா ஆகிய ஆளுமைகளின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பில் படித்தவருக்கு எழுதும் ஆசை நெஞ்சில் சுனாமியாய் எழ, உடனே பேனா எடுத்து Ramdas Nayi Duniya Ki Nayi Kahani ஆகிய நூல்களை விறுவிறுவென எழுதிவிட்டார். எப்படி பதிப்பிப்பது? பதிப்பாளர்கள் பலரும் லக்ஷ்மணைப் பார்த்து மாறாமல் சொன்னது 'கெட் அவுட் என்ற சிம்பிள் வார்த்தையைத்தான்

மனம்  தளராமல் விஜயனின் அம்பு வேகத்தில் பாரதீய சாகித்திய கலா பிரகாஷன் என சொந்த பிரஸை தொடங்கி புத்தகத்தை அச்சிட்டுவிட்டார். பள்ளி, கல்லூரிகள் என அலைந்து திரிந்து புத்தகங்களை விற்ற லக்ஷ்மணுக்கு ஜாக்பாட் புகழாக, 1981 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியே இவரை சந்தித்து வாழ்த்தியது மறக்கமுடியாத மொமண்ட். 2003 ஆம் ஆண்டு ராம்தாஸ் நாவலுக்காக இந்திரபிரஸ்த சாகித்திய பாரதி விருது வென்று சாதித்தவர் இவர். "தீன் மூர்த்தி பவனில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியை நான் சந்தித்ததை மறக்க முடியுமா? "  1995 ஆம் ஆண்டில் பேனா பிடித்து இன்றுவரை மொத்தம் 25 நூல்களை எழுதியுள்ள லக்ஷ்மணுடைய படைப்புகள் -தளங்களிலும் விற்பனைக்குண்டு.  

"என் வாழ்க்கைக்கு போதுமான அளவு கடந்து, பணம் சம்பாதிப்பதில் ஆர்வமில்லை. புத்தகங்களை விரும்பாத பணக்காரராக வாழ்வதை விட, புத்தகங்களை விரும்பும் ஏழை எழுத்தாளராகவே இருப்பதில் மகிழ்ச்சி" என நெகிழ்ச்சியாகி பேசுகிறார் லக்ஷ்மண்ராவ். ஹிந்தி பவன் பிளாட்பார்மில் லக்ஷ்மணுக்கு மெல்ல ரசிகர்கள் உருவாக, இமேஜை காப்பாற்றவேண்டுமே என 37 வயதில் பிளஸ்டூ முடித்தவர், 63 வயதில் ஹிந்தியில் முதுகலை முடித்து டீக்கடை ரைட்டரானார். தற்போது தனது டீக்கடையிலுள்ள நூல்கள் மூலம் மாதம் 8 ஆயிரம், உபரியாக இதளங்களில் விற்பனையாகும் நூல்களிலும் லக்ஷ்மண்ராவுக்கு பணம் கிடைக்கிறது. அடுத்து என்ன? 'Patiyon Ki Sarsarahat' என்ற புத்தகம் ரிலீசுக்கு ரெடி. லக்ஷ்மணின் நூலுக்கு உள்ளூரில் பதிப்பிக்க சிக்கல் இருந்தாலும் இவரின் நூல்களுக்கு ஃபாரின் ரசிகர்கள் கிடைத்தது இலக்கிய மிராக்கிள். "உலக பல்கலைக்கழகங்கள் என்னுடைய வாழ்பனுபவங்களை பதிப்பிக்க பர்மிஷன் கேட்டு ராயல்டியுடன் அணுகிவருகின்றன. விரைவில் வெளிநாட்டுக்காரர்கள் வாசிக்கும்படி என்னுடைய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க போகிறேன்" என அசத்தலாக பேசுகிறார் லக்ஷ்மண்ராவ்.

நன்றி:குங்குமம் வார இதழ்
தொகுப்பு:கயல்விழி பாமா, பிருந்தா கிரிஷ்