கிராஃப்ட் முறையில் தாவரங்களை மேம்படுத்தலாம்!
விவசாய வளர்ச்சிக்கு உதவும் நுட்பம்!
குறிப்பிட்ட முறையில் தாவரங்களை வளர்த்தெடுத்தால் அதிக விளைச்சல் பெறலாம் என கண்டறியப்பட்டுள்ளது. விளைச்சலோடு , பூச்சிகளையும் கட்டுப்படுத்த முடிகிறது. இந்த வகையில் வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றை சிறந்த முறையில் விளைவிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கிராஃப்ட் எனும் முறையில், ஒரு தாவரத்தின் வேரை இன்னொன்றோடு இணைக்கிறார்கள். இதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேளாண்துறையில் செய்து வருகிறார்கள். இதனை புதிய முறை என்று கூற முடியாது. இந்த வகையில் ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை கொடி ஆகியவை நட்டு வளர்க்கப்படுகின்றன.
கிராஃப்ட் முறையில் கோதுமை, ஓட்ஸ், வாழை, பேரீச்ச பனை ஆகிய பயிர்களை நட்டு வளர்ப்பது கடினம். இவற்றை மோனோகாட்ஸ் என்று கூறலாம். இவற்றுக்கு திசுக்கள் குறைவு என்பதால் இதனை கிராஃப்ட் முறையில் இணைத்து வளர்ப்பது சிறப்பான பயன்களை தராது. குறிப்பிட்ட தாவர இனங்களில் திசுக்கள் குறைவாக இருப்பதற்கு வஸ்குலர் காம்பியம் என்று பெயர்.
மோனோகாட்ஸ் தாவரங்களிலும் கிராஃப்ட்ஸ் முறையை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுகுழு முயன்றுள்ளது. ஆய்வாளர் ஜூலியன் ஹிப்பர்ட் தலைமையிலான குழு, இதனை பரிசோதித்தது. மோனோகாட் தாவர இனத்தின் விதையிலிருந்து திசுக்களை எடுத்து அதே இனத்தைச் சேர்ந்த தாவர இனத்தோடு பயன்படுத்தினர். பரிசோதனையில் குறிப்பிட்ட நிறமியையும் பயன்படுத்தி தாவரங்களை வேறுபடுத்தினர். இந்த முறையில் அன்னாசி, வாழை, வெங்காயம், பேரீச்சை, பனை மரங்களை சிறப்பாக வளர்க்க முடியும்.
தொடக்க ஆராய்ச்சியில் கோதுமை, ஓட்ஸ் ஆகிய பயிர்களுக்கு இடையிலும் கிராஃப்டிங் செய்ய முடியும் என முடிவுகள் கிடைத்துள்ளதாக ஜூலியன் ஆராய்ச்சிக்குழு கூறியுள்ளது. இந்த முறை மூலம் மண் சார்ந்த பல்வேறு நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது. உலகில் அதிகளவில் விற்கப்படும் இனிப்பு வாழைப்பழமான கேவென்டிஷ்சில் பாதிக்கும் நோய்கள் குறையும். இந்த இனத்தை, குளோனிங் முறையில் விளைவிக்கின்றனர். இந்த இனத்தில் மரபணுக்கள் ஒழுங்கமைக்கப்படுவதால், பூஞ்சை நோய் ஏற்பட்டால் பாதிப்பு பெரிதாக இருக்கும்.
New scientist 8.1.2022
near impossible plant growing technique could revoltutionise farming
கருத்துகள்
கருத்துரையிடுக