தொடக்க நிலை சுகாதாரம் - உயர்ந்து நிற்கும் டெல்லி



Image result for mohalla clinic



2015ஆம் ஆண்டு டெல்லி அரசு மொகல்லா மருத்துவச் சேவையைத் தொடங்கியது. நடப்பு ஆண்டுவரை 40 லட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். பல்வேறு நோய் கண்டறியும் சோதனைகளும் அவசியமான மருந்துகளும் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது, தொடக்கநிலை மருத்துவச் சேவைகள் என்பதை மட்டும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

அக்டோபர் 20 வரை 300ஆக இருந்த மொகல்லா மருத்துவமனைகளின் எண்ணிக்கை விரைவில் கூடவிருக்கிறது.  மக்கள் முடிந்தவரை நோயுடன் அதிக தொலைவு நடக்ககூடாது. எளிமையாக அவர்களுக்கு மருத்துவம் கிடைக்கவேண்டும். சாதாரண மனிதர்கள் அரசியலுக்கு வந்தால்தான் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கும் என்று ஒருவாறு பேசி மக்கள் நலனிலிருந்து அரசியலுக்கு பைபாஸ் ரூட்டில் சென்று முடித்தார். இந்த சிறு மருத்துவமனைகளை நாம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் ஒப்பிடலாம்.

டெல்லி அரசு இலவச பேருந்து வசதி, மொகல்லா மருத்துவமனைகளை சொல்லி வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மொகல்லா மருத்துவமனைகளில் 60 ஆயிரம் மதிப்புள்ள நோய் கண்டறியும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, நீரிழிவு நோய் ஆகியவை பற்றி அறிய இந்த இயந்திரம் உதவுகிறது. சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினை இத்திட்டத்திற்காக ஆஸ்திரேலிய அரசு பாராட்டியுள்ளது.

நன்றி - டைம்ஸ்