2019 சிறந்த கண்டுபிடிப்புகள் - இவைதான்!



Image result for ose viberator





இந்த ஆண்டின் சிறந்த கருவிகள்

அடுத்த ஆண்டை எதிர்ப்பார்ப்பதில் தினமலர் காலண்டரையும் விட முக்கியமானது, இந்த ஆண்டு என்ன செய்தோம் என்பதுதான். இந்த ஆண்டு உருப்படியாக உலகம் உருவாக்கிய கருவிகளில் பெஸ்ட் இவை.


ஜியோ ஆர்பிடல்

நீங்கள் சாதாரண சைக்கிளை டபுள்ஸ் வைத்து ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். அந்த சைக்கிளையும் கூட மின் வாகனமாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு கட்டணம் 1,495 டாலர்கள்தான். 3 மணி நேரங்கள் சார்ஜ் செய்தால் இருபது கி.மீ தூரம் செல்ல முடியும். மக்கள் கூட்டு நிதி மூலம் கம்பெனி ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இன்ஸ்பிரேஷன், ட்ரோன் படம்தான்.

பென் அண்ட் கின் டெக் பேக்ஸ்

இந்த பேக் எப்போதும் போல பெண்கள் வாங்கும் பேக்தான். ஆனால் இதில் ப்ளூடுத் உண்டு. இதன் மூலமே நீங்கள் ஊபர், ஓலா டாக்சி நிறுவனங்களை அழைக்க முடியும். ஸ்மார்ட் பேக் என்று கூட சொல்லலாம். நீங்கள் இருக்கும் இடத்தைக்கூட ஸ்மார்ட் போன் மூலம் ட்ராக் செய்யலாம்.

கிளாரிட்டி இமேஜி க்வான்டிக்ஸ்


மார்பக புற்றுநோயை எளிதாக கண்டறியும் ஆய்வுமுறை இது. செயற்கை நுண்ணறிவை ஆய்வில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் புற்றுநோய் என்பதைக் கண்டறியும் முறையில் துல்லியம் கூடியிருக்கிறது. ஆண்டுதோறும் அமெரிக்காவில் முப்பது லட்சம் பேர் புற்றுநோய் கண்டறிய இமேஜிங் தொழில்நுட்பத்தை நாடுகிறார்கள். இவர்களுக்கு உதவும் பிரமாத தொழில்நுட்பம் இது. 2017இல் அமெரிக்காவின் எஃப்டிஏ அனுமதி கொடுத்துவிட்டது.

சோலார் சூட்கேஸ்

இதுவும் ஏதாவது வீட்டுக்குப் பயன்படும் பொருள் என்று நினைத்துவிடாதீர்கள். உயிர்காக்கும் பொருள். லாரா ஸ்டாசெல் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த சூட்கேஸ், நைஜீரிய கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் பார்க்க உதவுகிறது இந்தக்கருவி. ஏறத்தாழ இன்றுவரை 4 ஆயிரம் கருவிகள் அங்கு தொண்டு நிறுவனங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன. நைஜீரியாவில் சீரான மின்சார வசதிகள் கிடையாது. இதனால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதன் அடிப்படையில் உருவானதே சோலார் சூட்கேஸ்.


வயர்லெஸ் வைப்ரேட்டர்

அந்த சமாச்சாரத்திற்குத்தான். ஓசே என்ற பெயரில் சந்தையில் ஹிட் அடித்திருக்கிறது இந்தக் கருவி. லோரா ஹாடாக் என்ற பெண்தான் இதனை உருவாக்கி 2019இல் நடைபெற்ற சிஇஎஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். பின்னே பெண்களின் சந்தோஷத்தை விட முக்கியம் உலகில் வேறு என்னதான் இருக்கிறது?


அனலாக் மெகா எஸ் ஜி

ரெட்ரோ கேம்களை விளையாடி மகிழ்ந்திருப்பீர்கள். இப்போதுள்ள விளையாட்டுகளை விட அவை உங்களுக்கு பிடித்திருக்கலாம். மீண்டும் அவற்றை விளையாட உங்களுக்கு அனலாக் உதவுகிறது., நவீன டிவிகளில் இதனைப் பொருத்தி நட்புகளோடு இணைந்து விளையாட முடியும். ஒலி, ஒளி என அனைத்தையும் மேம்படுத்தி இருக்கிறார்கள்.

கஸ்டமைஸ்டு ஜீன்ஸ்

உங்கள் இடுப்பு சைசுக்கான உடைகளைத் தேடி அலுத்துவிட்டீர்களா? அப்படியென்றால் நீங்கள் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கடைக்குத்தான் செல்லவேண்டும். அங்கு 3டி ஸ்கேனர் மூலம் உங்களின் அளவுக்கு ஏற்ற ஜீன்ஸை தேர்ந்தெடுக்க முடியும். லைப்ஸ்டைல், மேக்ஸ் போன்ற கடைகளுக்கு சென்று என் சைஸ் டிரஸ் கிடைக்கல என நீங்கள் கண்ணைக் கசக்க அவசியமில்லை.

ஏ.ஐ. கல்வியாளன்

பார்க்க மினியன் போல இருந்தாலும் சிறு குழந்தைகளுக்கு அறிவியலைச் சொல்லித்தருவதில் ஜித்தன் இந்த ஏ.ஐ. கல்வியாளன். ராய்பி எனும் ரோபோ எளிமையாக பாட்டுடன் குழந்தைக்கு பாடம் கற்பிக்கிறது.


கனோ விண்டோஸ் 10

இந்தக்கணினி குழந்தைகள் கணினியை கழற்றிப் போட்டு மாற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது. டெல் கம்ப்யூட்டர் வாங்கினாலும் கூட அதிலுள்ள சர்க்யூட் போர்டு, கோடிங் என்பதை பலரும் கற்பதில்லை. குழந்தையாக இருக்கும்போது இந்த விஷயங்களை கற்பது இனி அவசியம் அடிப்படையும் கூட. அதற்காகத்தான் இப்படி ஒரு கணினியை உருவாக்கியிருக்கிறார்கள்.


எய்ட் ஸ்லீப் பாட்

கடந்த பிப்ரவரியில் அறிமுகமாக விற்றுத் தீர்ந்த படுக்கை இது. ஸ்மார்ட் படுக்கை உங்களின் தூக்க நேரத்தை அளவிட்டு அட்வைஸ் செய்யும். எவ்வளவு நேரம் நீங்கள் தூங்கவேண்டும் என்பதையும் கணிக்கிறது, இந்த பெட் தொழிற்நுட்பம் தாண்டி இனிய தூக்கத்தை வழங்குகிறது என்பதே இதன் வெற்றிக்கு காரணம்.



நன்றி - டைம்