செவ்விந்தியர்களின் பகை தீர்க்கும் கமான்சே கௌபாய்! - லயன் காமிக்ஸ்


மாதிரிப்படம்








யுத்தம் உண்டு எதிரி இல்லை
லயன் காமிக்ஸ்
ரூ.60 



கமான்சே கௌபாய் கலக்கும் காமிக்ஸ் இது. அமெரிக்காவில் செயன்னீக்கள் வாழும் பகுதியில் கமான்சே என்ற இளம்பெண் தன் பண்ணையை வைத்துள்ளார். அதுவரை நஷ்டத்தில் இருந்த பண்ணைக்கு அப்போதுதான் ரயில்வே இருப்புப்பாதை அமைக்கும் பணியால் வேலைகள் கிடைக்கின்றன. அவர்களின் கால்நடைகளை உணவுக்காக அனுப்பும் பணி. மறுபுறம் வெள்ளையர்கள் ராணுவம் மூலம் செவ்விந்தியர்களை தனியாக பிரித்து வசிக்க பகுதிகளை ஒதுக்கியுள்ளனர்.ஆனால் அது வளமில்லாத பகுதி.

பசியில் தள்ளாடும் அம்மக்கள், 66 எனும் இளம்பெண்ணின் பண்ணையில் கொள்ளையிட்டு மாடுகளை கொண்டு செல்கின்றனர். இதை எப்படி ரெட் டஸ்ட் வீரதீரத்தாலும் சமயோசிதத்தாலும் சமாளித்து அப்பகுதியில் ரத்த ஆறு ஓடும் பிரச்னையை சமாளிக்கிறார், இதனை செயன்னீ தலைவர் த்ரீ ஸ்டாப்ஸ் ஏற்றுக்கொண்டாரா, அவரது அடங்காத கோபம் கொண்ட மகன்கள் இதை ஏற்றனரா என்பதுதான் திகுதிகு காமிக்ஸாக வந்திருக்கிறது.

ரெட் டஸ்ட் சண்டையை விட புத்திசாலித்தனத்தை நம்புவர் என்பதால், பெரியளவு அதிரடி காட்சிகள் கிடையாது. செவ்விந்தியர்களின் பசி சார்ந்த கோபம் என்பதால், இதில் எந்த தரப்பையும் பழித்துச் சொல்ல ஏதுமில்லை. செவ்விந்தியர்களின் ஓவியங்கள் பிரமாதமாக வரையப்பட்டுள்ளன. சண்டைக்காட்சிகளின் இடங்களில் ஆக்ரோஷம் புழுதி பறக்க பதிவாகியுள்ளது.

டாக்டர் வெட்சின் எனும் குரூர கதாபாத்திரத்தை இன்னும் மேம்படுத்தி கொண்டு வந்திருக்கலாம். அடுத்தடுத்த கதைகளில் இன்னும் வில்லன்களை சேர்த்தால்தான் கமான்சே கௌபாய் கரைசேர முடியும்.

கோமாளிமேடை டீம்

நன்றி - ஓவியர் பாலமுருகன்




பிரபலமான இடுகைகள்