பயன்பாடு இல்லாத கைவிடப்பட்ட சுரங்கத்திலிருந்து மின்சாரம்!

 







பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்!

பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள். 

பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன. 

சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகரித்து மின் உற்பத்திக்கு பயன்படுத்துகிறது. பிரான்சில் நிலக்கரி இறக்குமதி மூலம் மலிவான விலைக்கு கிடைக்கத் தொடங்க, அரசு அணுசக்தியை நோக்கி நகர்ந்தது. மேலும், உள்நாட்டில் செயல்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மூடத்தொடங்கியது. ”எங்களது நிறுவனம் மூலம் உற்பத்தியாகும் மீத்தேன் மின்சாரத்தால் 22 ஆயிரம் பேர் பயன் பெறுகிறார்கள். கார்பன் டை ஆக்சைட் பற்றி பேசும் பலரும் பலமடங்கு ஆபத்தை ஏற்படுத்தும் மீத்தேன் பற்றி பேசுவதில்லை ” என்றார் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி நிறுவன தலைவரான ஜூலியன் மௌலின்.


Coals carbon legacy (rebecca penty david rocks)

bloomberg businessweek

https://live.euronext.com/index.php/en/ipo-showcase/la-francaise-de-l-energie

https://www.labourseetlavie.com/strategie-et-resultats/julien-moulin-pdg-la-francaise-de-lenergie-developper-des-partenariats-industriels

https://www.bloomberg.com/news/articles/2022-04-26/methane-gas-business-hopes-to-make-abandoned-mines-greener

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்