தடைபடாத காலம்- முடிவில்லாத தன்மை மற்றும் நாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

14

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மை மற்றும் நாளும்

ஜிடியன் பாச்மன் – 1997

ஆங்கில மூலம்: டான் ஃபைனாரு













ஆண்டிற்கு ஒருமுறை நாம் சந்திக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் நாம் உரையாடலை பதிவு செய்து வருகிறோம். நவீன காலத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகளாக எதனை கூறுவீர்கள்? தக்காளிச்செடி வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு, தேனை அறுவடை செய்வது உள்ளிட்டவற்றை செய்யத்தெரியாத ஒருவரினால் படங்களை உருவாக்க முடியாது என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தீர்கள். இன்று உங்களைப் பார்ப்பதை பத்து ஆண்டுகளுக்கு முன் மிகவும் நம்பிக்கை கொண்டவராக படப்பிடிப்பு அரங்கில் வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்.  தனிப்பட்ட மனிதராக, இந்த 20 ஆண்டுகளில் என்ன மாதிரியான வளர்ச்சியை பெற்றிருக்கிறோம் என்று கூற முடியுமா?

      மிகவும் உறுதியான கருத்துக்களைப் பற்றிப் பேசுவதற்கு சரியான நேரம் நீங்கள் படத்தினை முழுமையாக நிறைவு செய்து முடித்திருக்கிற காலம்தான். நீங்கள் உங்களது கருத்துகளை சரியான வடிவத்தில் உருப்பெறச்செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும்போது படப்பிடிப்பின் ஒரு பகுதியில் அதைப்பற்றி பேசுவது சரியானதல்ல. ஆனால் நான் முயற்சிக்கிறேன்.

இப்போது வரும் புதிய படங்கள் தங்களுக்கு பாதுகாப்பின்மையை தருவதாக நினைக்கும் இயக்குநர்கள் வகையில் தாங்கள் இல்லை என்று நினைக்கிறேன்.

      இந்த விஷயத்தில் படம் முடிவடையாத நிலையில் என்னால் எதையும் உறுதியாக கூற முடியாது. தேடுவது என்பதை எப்போதும் நிறுத்திவிடாமல் தொடர்பவன் நான்.
திரைப்படங்களை உருவாக்குவது குறித்த தேடுதலைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்…

      எப்போதும் அதுபோலத்தான். என்னைப் பொறுத்தவரை படங்கள் அவற்றின் இறுதியில் என்னை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிவிடுகின்றன. தொடக்கத்தில் உங்களுக்கு இருக்கும் உற்சாகத்தின் அளவே உங்களை நீங்களே படுதோல்வியடைந்த ஒருவராக இறுதியில் நினைத்து ஏமாற்றிக்கொள்கிற நிலைமை ஏற்படுகிறது.

இதில் உங்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கிறது அல்லது எது மாதிரியான விஷயங்கள் பாதுகாப்பு தருவதாக நினைக்கிறீர்கள்?

      மற்றவர்களுடைய கண்களைப் பார்க்கவேண்டிய தேவை எனக்குள்ளது. பார்வையாளர்களின் பொருட்படுத்துதல் கருத்துகள் நான் உருவாக்கியுள்ளதை எதுவென நான் உணர உதவுகின்றன. பார்வையாளர்களின் கருத்துகள் இல்லாதபோது, நான் என் மூளையிலுள்ள பார்வையை சரியாக வெளிப்படுத்தியுள்ளேனா, படத்தினை சரியாக உருவாக்கி உள்ளேனா என்பது குறித்து என்னால் அறிய முடியாது.

      நினைவில் கொள்ளுங்கள். மனதில் நான் நினைத்தபடியே படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. படம் பிடித்த காட்சிகளை முன்னோட்டம் பார்க்கும்போது நான் முட்டாள்தனம் என்று கூறிக்கொள்வேன். அக்காட்சிகளில் உள்ளே ஏதோ ஒரு போதாமையை பற்றாக்குறையை நான் உணர்வேன். அதாவது என்னுள் உள்ள பற்றாக்குறையை திரைக்கதையில் வெளிப்பட்டுள்ள போதாமையை தீவிரமாக உணர்கிறேன். பாறையின் அருகே படகு செல்லும்போது ப்ரூனோ தாண்டி குதிக்க முயலுவதில்லை. ஏன் அவன் குதிக்கவில்லை? ஏனெனில் நான் அவனிடம் குதிக்குமாறு கூறவில்லை. அவன் அப்படி செய்து விடுவான் என்று நான் நம்பிக்கை கொண்டிருந்தேன்.

      நடிப்பவர்கள் இதயம் அதன் மதிப்பு ஆகியவற்றின் மதிப்பினைக் கூறுவது மிக கடினமான செயல்பாடே. மேலும் ஒன்றினைக் குறித்து தீர்ப்பு கூறும் விதமாக முழுமையாக தயாரிப்பு வடிவமைப்பு முழுவதையும் கவனிப்பதும் கூட இவ்வகையில் கூறலாம். இதன் உள்ளே உள்ள பொருட்கள் குறித்து நான் அனுமானிக்க முடிவதில்லை அல்லது சுத்தமான காற்று தரும்…..


பிரபலமான இடுகைகள்