தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்







இத்திரைப்படம் கிரேக்கப்புனைவுகளை அடிப்படையாக அல்லது அதனைக் மென்மையாக கூறிச்செல்கிறதா?

      எழுத்தாளர் மற்றும் கவிஞர் என வார்த்தைகளை உருவாக்கும் அதனோடு உறவு கொண்டிருக்கும் இவர்களையே படம் அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. படத்தில் அலெக்ஸாண்டர் சிறுவனுக்கு கவிஞர் ஒருவரைப்பற்றிக் கூறுகிறார். அவர் கிரீசில் புகழ்பெற்ற ஒரு மனிதராவார். டையோனிஸியோஸ் சாலமோஸ் ஸ்கின்டோஸ் இல் பிறந்தவர். இத்தாலியில் வளர்ந்தவர். சில காலத்திற்கு பிறகு தன் கீரிக் அடையாளத்தை தேடுகிறார். இத்தாலியிலிருந்து திரும்பும்போது தனக்கு தெரியாத கிரீக் வார்த்தைகளை  மக்களிடம் வாங்குகிறார். 22 வயது ஆகும்போது தனது தாய்நாட்டிற்கு கிரீக்கில் கவிதைகள் எழுத முயல்கிறார். 1818 எனும் அக்காலகட்டத்தில் துருக்கியர்களுக்கு எதிரான புரட்சிப்போராட்டத்தில் தனது கவிதைகளின் வழியாக பங்கேற்க முடிவு செய்து, செயல்படும் அவரது ஆளுமையான நாட்டுப்பற்று கொண்ட காலப்பகுதி தொடங்குகிறது. சிறிய குறிப்பேட்டில் அவர் கேட்கும் வார்த்தைகளின் உலகத்தில் நுழைகிறார். இது தாந்தே – எஸ்க்யூ என்பவர்களின் சிந்தனையான கிரீஸ் மொழியை மறு இணைப்பு செய்தல்தான். அவருக்கு மொழி என்றால் சுதந்திரம் என்று அர்த்தமாகும். ஹெய்டெக்கர் போல மொழி என்பது தமது வீடு போன்றது என்பதை நம்புபவரல்ல. தாந்தே இத்தாலியில் எழுதியது போல குறிப்பிட்ட வடிவத்திலான கிரீக் கவிதையினை எழுதுகிறார். அது எளிய மக்களுக்கான மொழியில் அச்சமயத்தில் எழுதப்பட்டதல்ல.

கவிதை மேல்தட்டுவர்க்கத்தன்மை கொண்டதாக இருந்ததா?

      ஆமாம். சாலமோஸ் இந்த முறையில் அதனோடு போரிட்டு இன்று அது புதுப்பித்தல் தன்மையுடன் இருக்கிறது. அந்த நேரத்தில் கிரீக்கில் எழுதுவது என்பது வழக்கமானது. அதனை இன்று கடரேவுசா என்று நாம் அழைக்கலாம். சாலமோஸ் எழுதியவற்றை இப்போது நாம் டிமோடிகி என மக்களின் மொழி என வகைப்படுத்தலாம்.

எப்படி இந்தக்கதை படத்தில் நுழைகிறது?

      கதையினை சிறிது விரிவு செய்து அதனை புகுத்தினேன். இக்கதையினை எழுதும்போது கவிஞனின் உண்மையான கதை என்று நினைத்தேன். அவர் அறியாத வார்த்தைகளை கூறுபவருக்கு பணம் கொடுக்கிறார். குறிப்பிட்ட முறையில் வார்த்தைகளை வாங்குகிறார். வறிய மக்கள் அவரிடம் தன் சொற்களை விலைக்கு விற்கிறார்கள். இவையெல்லாம் நான் கூறுவது எப்படி சாலமோஸின் படைப்புகளிலிருந்து விஷயங்களை கதையில் நுழைத்தேன் என்று சாலமோஸிஸ்ட் ஒருவரிடம் கூறுவதாகும். இக்கதை உண்மை இல்லை எனும்போது அவர் திடுக்கிடுவார். ‘‘இந்த பைத்தியக்காரத்தனமான சிந்தனை உனக்கு எங்கே கிடைத்தது?’’ என்று அவர் என்னிடம் கேட்டார். உண்மையில் இதனை நான் எங்கே பெற்றேன் என்பதை நினைவுகூரமுடியவில்லை. மக்களிடமிருந்து மொழி குறித்து அவர் அறிந்தது உண்மை. ஆனால் அவர் வார்த்தைகளுக்கு பணம் கொடுத்தார் என்பது நான் கற்பனையில் உருவாக்கிய ஒன்று. கவிதைத்தனமான சிந்தனை அது. அப்படியே அதனை விட்டுவிட்டேன்.

அலெக்ஸாண்டர் கதையில் இதனை எப்படி கொண்டு வந்தீர்கள்?

      சிறுவன், அலெக்ஸாண்டர் சோகமாக இருக்கும்போது, அவனை சரிசெய்ய அவனாகவே வார்த்தைகளைத் தேடிக்கொண்டு வருவான். மக்கள் கூட்டத்திடம் சென்று வரும்போது எல்லாம் புதிய வார்த்தை ஒன்றைக் கொண்டுவருவான். அலெக்ஸாண்டரிடம் அவ்வார்த்தைகளை கூறும்போது பதிலுக்கு அவனுக்கு அவர் ஏதாவது தருவார். அது ஒரு விளையாட்டு போல அவர்களுக்குள் நடந்து வந்தது. படத்தில் இறுதியில் அவர் சென்று வரும்போது அவர்களை பிரதிபலிப்பது போல படத்தின் தன்மையை கூறுவது போல அவரது முழுவாழ்க்கையையும் மூன்று வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.

      கோர்ஃபுலாமு என்று கூறப்படும் இவ்வார்த்தையின் சரியான மொழிபெயர்ப்பு ‘மலரின் இதயம் என்று வரும். கிரீசில் இந்த வார்த்தை குழந்தை தன் தாயின்மீது கையை மேலே போட்டு உறங்குவதைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த பழமையான வார்த்தையை திஸ்ஸலோனிகியில் உள்ள கடற்கரையில் பெற்றேன்.

மற்ற வார்த்தைகள் குறித்து..?

      இரண்டாவது வார்த்தையை வயதான மீனவரும்  கடலோடியுமான ஒருவரிடமிருந்து பெற்றேன். அவ்வார்த்தை இன்று பெரும்பாலும் மறக்கப்பட்டே விட்டது. ஜெனிடிஸ் எனும் வார்த்தை பயணம் செய்பவரின் மூலத்தை குறிக்கிறது. பயணி என்பது இதன் அர்த்தம். அனைத்து இடங்களிலும் அலைந்து திரியும் அந்நியரான ஒரு பயணி. ஜெனோஸ் பயணிக்கான வார்த்தை. ஜெனிடிஸ் என்பது பயணியாக தன்னை உணர்பவரை பயணியின் உணர்வைக் குறிக்கிறது அல்லது நாடு கடத்தப்பட்ட ஒரு உணர்வு நிலை என்றும் கூறலாம்.

அவரது வாழ்க்கை முழுவதும் இவ்வார்த்தைகள் அவர் கூடவே பயணிக்கின்றன. எந்த வார்த்தையுடன் படமானது நிறைவு பெறுகிறது?

      மூன்றாவது வாரத்தையான அர்ஹதினி என்பதன் அர்த்தம் இரவில் ஏற்படும் மிக தாமதம். அலெக்ஸாண்டர் விளையாட்டாக மூன்று வார்த்தைகளை சிறுவனிடம் பேசி விளையாடுகிறார் என்றாலும் அவர் வாழும் வாழ்க்கையில் அவை விமர்சனம் போலவே அமைந்துவிடுகிறது. சிறுவன் அவரை விட்டுச்செல்லும் முன் கூறும் வார்த்தைகள் அவரது பாதை குறித்து வாழ்க்கையை குறித்து கூறும் சுருக்கமான விமர்சனமே.