சுயமாக சாதித்து கோடிகளைக் குவித்த அமெரிக்க பெண்கள்!

 












சுயமாக சாதித்த பெண்கள் 

டயான் ஹெண்ட்ரிக்ஸ்
கட்டுமானப் பொருட்கள் விற்பனை
வயது 75
12.2 பில்லியன்

பெருந்தொற்று காலத்தில் ஹெண்ட்ரிக்ஸ் உருவாக்கிய நிறுவனம் கட்டுமானத்தில் ஏற்பட்ட விற்பனை உயர்வை சாதகமாக்கிக் கொண்டு சாதித்தார். கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர்கள் சம்பாதித்தார். நிறுவனத்தை தனது கணவருடன் சேர்ந்து தொடங்கி டாலர்களை சம்பாதித்துள்ளார்.  2020ஆம் ஆண்டு 12.1 பில்லியனாக இருந்த வருமானம் இப்போது 15 பில்லியனாக உயர்ந்துள்ளது. 





ஜூடி ஃபால்க்னர் 

உடல்நலம் தொடர்பான நிறுவனம்

வயது 78

6.7 பில்லியன் டாலர்கள்

மருத்துவ ஆவண நிறுவனம் எபிக் சிஸ்டம்ஸ், 3.8 பில்லியன் டாலர்களை வருமானமாக பெற்றது. மைசார்ட் எனும் மென்பொருளை நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி வேக்சின் பாஸ்போர்ட் பெறலாம். 1979ஆம் ஆண்டு தனது வீட்டு அடித்தளத்தில் தொடங்கிய நிறுவனம் இது. இதில் ஜூடிக்கு 47 சதவீத பங்கு உள்ளது. வருமானமோ, வம்போ எதைப் பற்றியும் பேசாத நிறுவனம் கடந்த ஆண்டுதான் ட்விட்டரில் இணைந்தது. 





ஜூடி லவ் 

ரீடெய்ல் கடைகள், கேஸ் நிலையங்கள்

வயது 84

5.2 பில்லியன் டாலர்கள்


1964 தொடங்கி ரீடெய்ல் கடைகளை ஜூடியும் அவரது கணவர் டாமும் நடத்தி வருகிறார்கள்.  இன்று கடைகளை ஜூடி டாமின் இரு மகன்கள் பார்த்துக்கொள்கிறார்கள். 2021இல் மட்டும் 38 இடங்களில் கடைகளை தொடங்கியுள்ளனர். 2022இல் 18 கடைகளைத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கென லவ் குடும்ப நிதியம் என்ற பெயரில் அறக்கட்டளையும் உள்ளது. 

Forbes usa





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்