புதுமைத்திறன் விவசாயி ஜகதீஷ் ரெட்டி!
புதுமைத்திறன் விவசாயி!
ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத்திலுள்ளது, தண்டுவாரிபல்லே கிராமம். இங்கு, தனது 20 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார் ஜகதீஷ் ரெட்டி. இயற்கை செயல்பாட்டாளர் சுபாஷ் பாலேகரின் ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை ஜகதீஷ் பின்பற்றுகிறார். இதன்படி, தனது பயிர்களுக்கு செயற்கையான வேதி உரங்களைப் பயன்படுத்துவதில்லை.
நெல்,வேர்க்கடலை, மிளகாய், சிறுதானியம் என பல்வேறு பயிர்களை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவித்து வருகிறார். ஜகதீஷ், அறுவடை செய்யும் பொருட்களை மதிப்புகூட்டி விற்கும்போதும் கூட, வேதிப்பொருட்களை பயன்படுத்துவதில்லை என்பது முக்கிய அம்சம்.
2012ஆம் ஆண்டு தொடங்கி இயற்கை விவசாயம் செய்யும் ஜகதீஷ், நாட்டுரக பயிர்களையே பயன்படுத்துகிறார். வாட்ஸ்அப்பில் உள்ள குழுவில் தனது விளைபொருட்களான அரிசி, சர்க்கரை, மிளகாய் தூள், சிறுதானியங்களை விற்று வருகிறார். தனது விவசாய செயல்பாடுகளுக்காக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் (டில்லி), வழங்கிய புதுமைத்திறன் விவசாயி (Innovative farmer), ஆந்திர அரசின் ஆதர்ஷ் ரைத்து (Adarsha Raithu)எனும் விருதுகளைப் பெற்றுள்ளார்.
https://www.newindianexpress.com/good-news/2022/apr/10/andhra-pradesh-farmer-scriptingsuccess-without-use-of-chemicals-2440249.html
கருத்துகள்
கருத்துரையிடுக