பூமியின் அடித்தட்டு மர்மம்! - பூமியின் அடித்தட்டில் இருப்பது உலோகமா, வேறு பொருட்களா?
பூமியின் அடித்தட்டு மர்மம்!
பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில் இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.
நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.
புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves) பயன்படுத்தினர். இதில் கிடைத்த தகவல்களை வைத்து, புவியின் உள் கருவத்தில் திடப்பொருள்தான் உள்ளது என முடிவுக்கு வந்தனர். ஆனாலும் அலை மிக மெதுவாக உட்கருவத்திற்கு சென்றதால் அங்குள்ள பொருள் திரவமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என வாதிட்டனர். கம்ப்யூட்டர் சிமுலேஷன் மூலம் ஷியர் அலைகளை ஆராய்ந்ததில், உட்கருவத்தில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், இரும்பு, கார்பன் ஆகியவை அங்கு இணைந்து இருக்கலாம்; திட, திரவ நிலையிலுள்ள பொருட்கள் இருக்க வாய்ப்புகள் இல்லை என புவியியலாளர்கள் கணித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் திட, திரவம் என இருநிலைக்கு இடைபட்ட நிலையில் உட்கருவம் இருக்கலாம் என்ற கருத்து அறிவியலாளர்களிடையே உருவானது. ”தற்போது புவியின் உட்கருவத்தை பிரதிபலிக்கும் மாதிரிகளை உருவாக்கி ஆய்வகத்தில் சோதித்து வருகின்றனர். இச்சோதனை மூலம்தான் அங்குள்ள பொருட்கள் பற்றி தெரிய வரும்” என்றார் கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் நிலநடுக்கவியல் துறை தலைவர் ஹெர்வோஜே கால்சிக்.
scientist suspect a mysterious mixed state in earth core
science illustrated 2022
https://www.nature.com/articles/s41586-021-04361-x
https://www.livescience.com/earth-core-superionic
https://researchers.anu.edu.au/researchers/tkalcic-h
கருத்துகள்
கருத்துரையிடுக