வலியைத் தாங்குவதில் யார் பெஸ்ட் - ஆணா, பெண்ணா? உண்மையா? உடான்ஸா?

 












கீமோதெரபி தலையில் வளரும் முடியில் மாற்றம் ஏற்படுத்துகிறது!


உண்மை. புற்றுநோயாளிகளுக்கு நோய் பாதிப்பைக் குறைக்க கீமோதெரபி கொடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, தலையில் முடிகொட்டும். இதை தவிர்க்க நோயாளிகளுக்கு முடியை மொட்டையடித்துவிடுகிறார்கள். இதற்குப் பிறகு முளைக்கும் முடியின் நிறமும், அதன் வடிவமும் சற்றே மாறியிருக்கும். தலைமுடியின் உரோமக்கால்கள் கீமோதெரபியால் மாற்றம் பெறும். இதன் விளைவாகவே முடியின் வடிவம், நிறம் மாறுகிறது. ஆனால் இது நிரந்தரமான மாற்றம் அல்ல. ஓராண்டிற்குள்  முடியின் வடிவமும் நிறமும் இயல்பானபடி மாறிவிடும். 

ஆண்களை விட பெண்களால் அதிகளவு வலியைத் தாங்கமுடியும்!


உண்மை. குழந்தையை பிரசவிக்கும் பெண்களைப் பார்த்து இதனை எளிதாக யூகித்துவிடலாம். ஆராய்ச்சிகளின் அடிப்படையில் குழந்தை பிறக்கும் காலத்தில் பெண்களின் உடலில் வலியைத் தாங்கும் திறன் அதிகரிக்கிறது என  ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு அவர்களின் உடலில் அதிகரிக்கும் ஹார்மோன்களின் அளவு முக்கியக் காரணம். பொதுவாக வலியைத் தாங்கும் திறன் பற்றி ஆராய்ந்தால், அதற்கு ஒருவரின் வயது, சாப்பிடும் உணவு, செய்யும் வேலை ஆகியவற்றைப் பற்றியும் கவனம் கொள்ளவேண்டும். இந்த அம்சங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் ஒருவரை வலிதாங்க கூடியவர் என உறுதியாக கூற முடியாது. 

உடலில் அதிகளவு வைட்டமின் டி சத்து இருப்பது நல்லது!


உண்மையல்ல.  வைட்டமின் டி சத்து, உடலில் இருந்தால் கால்சியம் சத்தை உடல் எளிதாக உட்கிரகிக்கும். ஆனால் வைட்டமின் டி உடலில் இருக்க வேண்டிய அளவு 19 முதல் 70 வயது உள்ளவர்களுக்கு 15 மைக்ரோகிராம், 71 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 மைக்ரோகிராம் ஆகும். இந்த அளவை அமெரிக்காவிலுள்ள தேசிய உடல்நல கழகம் (NIH) வரையறுத்துள்ளது. அதிகளவு வைட்டமின் டி சத்து உடலில் இருந்தால், அது விஷமாக மாறும். இதன் விளைவாக, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, குமட்டல், வாந்தி, உடல் பலவீனம், எலும்புகளில் வலி, சிறுநீரக வலி ஆகியவை ஏற்படும். மருத்துவரின் அறிவுரைப்படி வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது. 

வைட்டமின் டிக்கு சூரிய ஒளியே முக்கியமான ஆதாரம்!


உண்மையல்ல. மாத்திரைகளையும் சாப்பிடலாம். பெரும்பாலானோருக்கு சூரிய வெளிச்சம் வைட்டமின் டிக்கு ஆதாரம்.  கருப்பு நிறம் கொண்டவர்களின் உடலால், சூரிய ஒளியை எளிதாக உட்கிரகிக்க முடியாது. காலை 10 முதல் 4 மணி வரை கை, கால், முகம் ஆகியவற்றில் 30 நிமிடங்கள் பட்டால் போதும். வாரத்திற்கு இருமுறை இப்படி சூரிய வெளிச்சம் கிடைத்தால்போதும். சூரியன் மறைவான பகுதியில் வாழ்பவர்கள் இதற்கு மாற்றாக  வைட்டமின் டி மாத்திரைகளை உண்ணலாம்.  இதற்கு, மருத்துவரின் பரிந்துரை அவசியம். 

மெல்லிஃப்ளூவஸ் (mellifluous) என்பது இனிமையான ஒலியைக் குறிக்கும் வார்த்தை!


உண்மை. காய்ச்சலின் பெயரைக் கூறுவது போல தோன்றலாம். ஆனால், லத்தீன் மொழியில் இதனை தேனைப் போன்ற என்று குறிப்பிடுகிறார்கள். மெரியம் வெப்ஸ்டர் அகராதி வலைத்தளத்தில் கேட்பதற்கு இனிமை நிரம்பிய இசைவான ஒலி  என்று அர்த்தம் சொல்லுகிறார்கள். 


பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் 2022 

https://www.everydayhealth.com/vitamin-d/vitamin-d-myths-and-facts/


கருத்துகள்