எதிரியை கொன்று குடும்பத்தை ஒன்றுசேர்க்கும் போலீஸ் அண்ணன், திருடன் தம்பி! மாத்தோ பெட்டுக்கோக்கு - பாலைய்யா











 மாதோ பெட்டுக்கோக்கு


பாலைய்யா, ரம்பா, ரோஜா, சுஜாதா மற்றும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள். 

இயக்கம்  - கொடண்டராமி ரெட்டி 
இசை - மாதவப்பெடி சுரேஷ் 
கதை - பார்கவ் தயாரிப்பு நிறுவன கதை இலாக்கா



1995இல் வெளியான படம். அதைவிட பழைய காலக்கதையைக் கொண்டுள்ளது. ஒரே ஆறுதல் பாலைய்யா இரண்டு வேடங்களை போட்டு நம்மை குஷிப்படுத்துவது மட்டுமே....

அர்ஜூன் ஐபிஎஸ் அதிகாரி. அநியாயம் என்றால் காழ்ச்சி பாரேஸ்தா கொடுக்கா என பாயும் குணம் கொண்டவர். இவருக்கான இன்ட்ரோவே, வல்லுறவு செய்ய முயலும் இன்ஸ்பெக்டரை போட்டு அடித்து பிளந்து ஏறக்கட்டுவதுதான். அடிக்கிற காட்டு அடியில் சம்பவ இடத்திலேயே வல்லுறவு இன்ஸ்பெக்டர் ஏறத்தாழ கோமாவுக்கு போய்விட்ட மாதிரிதான். அப்போதுதான் உயரதிகாரி வந்து அர்ஜூனைத் தடுக்கிறார். அந்த உரையாடலில் அர்ஜூன், எனக்கு சீதாபுரம் காவல் நிலையத்தில் பதவி கொடுங்கள் என்கிறார். 

இது ஒரு பாலைய்யாவின் சீரியஸ் கதை. அதாவது அண்ணன், இன்னொரு பாலைய்யாவின் பெயர் கிட்டய்யா. இவருக்கு போங்கு வேடங்களை போட்டு திருட்டு, கொள்ளையடிப்பதுதான் ஒரே வேலை. 

யாருக்கு யார் ஜோடி என்று சொன்னால் படம் பார்த்த திருப்தி தங்களுக்கு கிடைத்துவிடும். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரிக்சா ஓட்டும் பெண்ணான ரம்பா ஜோடி, கல்லூரி பெண் ரோஜாவுக்கு திருடன் கிட்டய்யா ஜோடி. 

ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, அக்குடும்பத்தில் பெண் எடுத்த மாப்பிள்ளை சொத்துக்காக கொல்கிறார். இதனால் அக்குடும்பத்தில் சேர்ந்த ஆண்கள் சாக, தாய்க்கு பைத்தியம் பிடிக்கிறது. இரு பிள்ளைகளும் காணாமல் போகிறார்கள். இதுதான் படத்தின் முதல் காட்சி....

அர்ஜூன், கிட்டய்யா இருவருமே அண்ணன் தம்பிகள் என்பது அவர்களை தவிர பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு அந்த விஷயம் தெரியும்போது படத்தின் இறுதிப்பகுதிக்கு வந்துவிடுகிறது. இதற்குள்ளேயே இரண்டு பாலைய்யாக்களும் இரண்டு நாயகிகளுடன் நாம் என்ன கனவு கண்டோமோ அத்தனையையும் பாடல்களில், நகைச்சுவை காட்சிகளில் சாத்தியப்படுத்துகிறார்கள். 

காமெடி மட்டுமே படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுகிறது. கிட்டய்யா செய்வது. ரம்பா காமெடி என செய்வது எல்லாம் வேறு லெவலில் இருக்கிறது. 

குடும்ப ரீயூனியன்

கோமாளிமேடை டீம் 
















கருத்துகள்