உண்மையா? உடான்ஸா - எச்சில் இல்லாதபோது உணவின் சுவை அறிய முடியுமா?

 











எச்சில் இல்லாதபோது மனிதர்களால் உணவின் சுவையை உணர முடியாது!


உண்மை. உணவில் உள்ள பொருட்கள் முதலில் எச்சிலில் கரைந்தால்தான் நாவின் சுவை மொட்டுகளை அணுக முடியும். இதற்குப் பிறகுதான், அறுசுவை உணவாக இருந்தாலும் சாப்பிடலாம் என்ற உணர்வு தோன்றும். எச்சில்,  செரிமானத்திற்கு மட்டுமல்ல சுவை உணரவும் உதவுகிறது என்பதே முக்கியமான அறிவியல் உண்மை. 

விண்வெளிக்கு செல்பவர்களின் உயரம் அதிகரிக்கும்!


வினோதமாக இருந்தாலும் உண்மை. அங்குள்ள குறைந்த ஈர்ப்புவிசை மனிதர்களின் முதுகெலும்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆறு அடி உள்ளவர், விண்வெளிக்கு சென்று சில மாதங்கள் கழித்தால் 2 அங்குலம் உயரம் கூடியிருப்பார். இது நிரந்தரமானது அல்ல. பூமிக்கு திரும்பி சில மாதங்களுக்குப் பிறகு, உடல் முன்பிருந்த உயரத்தை அடையும் என சயின்டிஃபிக் அமெரிக்கன் வலைத்தளம் தகவல் கூறுகிறது.  

மூளையின் அளவைப் பொறுத்து கொட்டாவியின் அளவு மாறும்! 


உண்மையல்ல. சில ஆராய்ச்சிகள் மூளை, அதன் நியூரான்களின் எண்ணிக்கை பொறுத்து மாறும் என கூறுகின்றனர். ஆனால் உண்மையில் மூளையைக் குளிர்விக்கவே கொட்டாவி வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் 2016ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இதுபற்றி செய்த ஆராய்ச்சியில் 24 வகை உயிரினங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் 0.8 நொடி (எலி) முதல் 6.5 நொடி (மனிதர்கள்)அளவிலான கொட்டாவியை நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். 

டைனோசர்கள் செரிமானத்திற்காக சிறு பாறைகளை,கற்களை உண்டது!


உண்மைதான். தாவர உண்ணிகளான டைனோசர்கள்,  பாறைகளை, கற்களை உண்டன. இது, அவற்றின்  செரிமானத்திற்கு உதவியது. இப்படி விழுங்கப்படும் கற்களை கேஸ்ட்ரோலித்ஸ் (Gastroliths)என்று அழைக்கிறார்கள். டைனோசர் மட்டுமன்றி, சில பறவைகள், மீன் இனங்களும் கூட செரிமானத்திற்காக கற்களை விழுங்கும் பழக்கம் கொண்டவை. மனிதர்களுக்கு இந்தளவு வலிமையான செரிமான மண்டலம் கிடையாது. எனவே இம்முறையில் முயற்சித்தால் வயிற்றுவலிதான் ஏற்படும். 

கங்காரு இறக்கும் வரையில் வளரக்கூடியது!


உண்மை. கங்காரு மட்டுமல்ல கோல்ட் ஃபிஷ், முதலை, கிங் கிராப் என நிறைய உயிரினங்கள் இதுபோன்ற இயல்பைக் கொண்டுள்ளன. கங்காருவின் தலையிலுள்ள எலும்புகள், அதன் வயிற்றிலுள்ள பை அதன் ஆயுளுக்கும் வளருபவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த ரோஜர் எனும் சிவப்பு கங்காரு, 6 அடி உயரம் 7 அங்குலம் இருந்தது. தனது அழகான தசை அமைப்புக்கு பலராலும் கவனிக்கப்பட்ட ரோஜர், 12 வயதில் காலமானது. 


https://parade.com/1019842/marynliles/weird-facts/

https://www.scientificamerican.com/article/astronauts-get-taller-in-space/

https://www.sciencetimes.com/articles/31119/20210511/longer-yawning-means-bigger-brains-why-animals-yawn.htm

https://animals.howstuffworks.com/animal-facts/gastroliths.htm

https://www.thecoldwire.com/animals-that-never-stop-growing/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்