அணுஆயுதப்பாதையில் ஜப்பான்!


அணுஆயுதம் தயாரிக்கிறதா ஜப்பான்?


Image result for plutonium




2011 ஆம் ஆண்டு ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதன் விளைவாக சிதைந்த அணு உலை பிரச்னை ஜப்பானுக்கு பெரிய நிதிச்சுமையானது. 35 அணுஉலை ரியாக்டர்களில் தற்போது செயல்படுபவை ஒன்பது மட்டுமே. தன்னிடமுள்ள 47 மெட்ரிக் டன்கள் புளூட்டோனியத்தை மறுசுழற்சி செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளது.

ரொக்காஸோ அணுஉலையில் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது என வடகொரியா குற்றம் சாட்டினாலும் அதில் உண்மை இல்லை. தன்னிடமுள்ள புளூட்டோனியத்தை நான்கு ரியாக்டர்களில் மட்டுமே எரிபொருளாக பயன்படுத்த முடியும். ஜப்பானிடமுள்ள புளூட்டோனியத்தை பயன்படுத்தி 6 ஆயிரம் அணுகுண்டுகளை தயாரிக்கலாம். ஆனால் தன்னிடமுள்ள புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்த முடியாது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் குவிந்த அணுக்கழிவுகளை ஒழிக்கும் வழியை தேடிவருகிறது. ரொக்காஸோ அணுஉலை கழிவுகளுக்கானது என சிலர் கூறினாலும் அரசு இதுகுறித்து மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. கழிவு மையமாக மாறுவதற்கு அரசு இழப்பீடு அளித்தாலும் மக்கள் தம் உயிருக்கு வரும் அச்சுறுத்தலை நிச்சயமாக எதிர்ப்பார்கள் என்றே நம்பலாம்.