'சிலிகன்வேலி தனிநபரின் ஆதிக்கத்திலுள்ளது'


நேர்காணல்!

"சிலிகன் வேலி தனிநபர்களின் கைப்பிடிக்குள் வந்துவிட்டது"

ஆடம் ஃபிஷர், டெக் எழுத்தாளர்.

தமிழில்: ச.அன்பரசு




Related image




வேலி ஆஃப் ஜீனியஸ் நூலிற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்திருப்பீர்கள். குறிப்பாக நூலெங்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டுள்ளீர்கள்.

எழுதியது உண்மை. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒருமுறை கூட பேட்டி எடுக்கவில்லை. மக்களுக்கு வெற்றிபெற்ற ஸ்டீவ்ஜாப்ஸின் கருத்துக்களை அறியபிடித்திருக்கிறது. 200 மனிதர்களைப் பற்றி பலமணிநேரங்கள் பேசி பதிவு செய்த பத்து மில்லியன் வார்த்தைகளை 500 பக்கங்களாக மாற்ற 4 ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டது.

நீங்கள் எழுதியதில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன?

ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவுதினத்திற்கு வரவேற்கப்பட்டும் கூட அங்கு போகமுடியாத ஸ்டீவ் வோஸ்னியாக்கிடம் பேசியது முக்கியமானது. அதோடு ஸ்டீவ் ஜாப்ஸ் தன் படுக்கையில் இறக்கும் முன்பு அமிலத்தை அருந்தினார் என பல்வேறு நூல்களில் வதந்தியாக எழுதப்பட்டிருந்ததன் உண்மையை அறிந்து கண்டுபிடித்தது பெரும் சுவாரசியம்.

சிலிகன் வேலியை மக்கள் எப்படி பார்க்க விரும்புகிறீர்கள்?

சிலிகன் வேலியின் கதை என்பது நாட்டின் கலாசாரத்தின் கதைதான். இதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் காணலாம். மக்களுடைய பார்வையில் தொழில்முனைவோர்களின் கதைகளை கூறவிரும்பினேன். 

சிலிகன்வேலி, கண்டுபிடிப்புகளில் பணம் சம்பாதித்து உருவாகி வளர்ந்தது. தகவல்களை சேமிப்பது தொடங்கிய காலத்தில் தகவல்தொழில்நுட்பம் குறிப்பிட்ட ஒருவரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் உங்களது எழுத்தில், பணியிடங்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் இயக்குநர்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்களே ஏன்?

வரலாறு கடந்தகாலத்தை மட்டும் உள்ளடக்கியதல்ல; நிகழ்காலத்தை புரியவைத்து எதிர்காலத்திற்கும் வழிகாட்டக்கூடியது. அடாரி, ஃபேஸ்புக், கூகுள், நாப்ஸ்டெர் வரை அனைத்து நிறுவனர்களைப் பற்றியும் விவாதித்துள்ளேன். கல்லூரியில் படிக்கும்போதே புகழ், பணம் சேரும் அவர்களது லைஃப்ஸ்டைல் மாறுவதற்கு அவை சிற்சில உதாரணங்கள் மட்டுமே.

புதிய கண்டுபிடிப்புகளுடன் சந்தைக்கு வரும் கம்பெனிகள் காலப்போக்கில் தோல்வியடைந்து காணாமல் போவதும் நிகழ்கிறதே?

இன்னும் ஐந்து ஆண்டுகளில் 3டி பிரிண்டர் அனைவரின் கைகளிலும் இருக்கும். பிளாக்செயின் ஐடி, பறக்கும் கார்கள் என இவை அனைத்தும் புதியவர்கள் உருவாக்கியவைதான். ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தம்மை புதுப்பித்துக்கொள்ளாத போது அவை மக்களால் மறக்கப்படும் காலமும் வரும். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கைதானே?

நீங்கள் பேட்டி எடுத்ததில் உங்களை ஆச்சரியப்படுத்திய மனிதர் யார்?

ஜிபியுவை கண்டுபிடித்த ஜிம் கிளார்க். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டு ராணுவத்தில் பணிபுரிந்தவர் பின்னாளில் ஸ்டான்ஃபோர்டில இணைந்து படித்தார். இன்றைய செயற்கை நுண்ணறிவுக்கு அடிப்படையாக விளங்கும் ஜிபியு(Graphics Processing Unit) கண்டுபிடித்தவர். இந்த தொழில்நுட்பத்தை அனிமேஷன் நிறுவனமான பிக்ஸார் பயன்படுத்துகிறது. பின்னர் நெட்ஸ்கேப் நிறுவனத்தை துணைநிறுவனராக நின்று தொடங்கினார். 

சிலர் ஒரு கண்டுபிடிப்பு, இரு கண்டுபிடிப்புகளோடு நின்றுவிடுவார்கள். ஆனால் ஜிம் கிளார்க் நவீன சிலிகன் வேலியை மாற்றும் கண்டுபிடிப்புகளை செய்தவர் என்றாலும் இன்று அங்கு ஜிம் கிளார்குக்கு இடமில்லை. மியாமி கடற்கரையில் அவரது வீட்டில் சந்தித்துபேசியபோது, என்ன காரணம் என்று கேட்டேன். “டெக் துறையில் மிதமிஞ்சிய பணம் கொழிக்கிறது” என்றார்.

நன்றி:theverge.com, mercurynews.com