66ஏ சட்டம் காலாவதியான ஒன்று!






உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் குற்றவழக்குகளை ஃபேஸபுக்கில் பட்டியலிட்ட ஜாகிர் அலி தியாகி, காவல்துறையால் கைது செய்யப்பட்டு  செக்‌ஷன் 66 ஏ மூலம் குற்றச்சாட்டு பதியப்பட்டது(2017).


நேர்காணல்: அபினவ் சேக்ரி, அபர் குப்தா(Freedom foundation)


கைது செய்து 42 நாட்களுக்கு பிறகு அலி மீது தகவல்தொழில்நுட்ப சட்டத்தில் குற்றம் பதிவாகிறது. பின்னர் பெயில் கிடைத்து வெளிவந்தபின்பு தேசதுரோக குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்வது நீதிமன்றம் மற்றும் சட்டத்தை மீறுவது ஆகாதா?

போலீஸ் தியாகியை கைது செய்து வேறு வழக்கில் குற்றம் பதிவு செய்தாலும் ஊடகங்களில் அவ்வழக்கு பேசப்பட்டவுடன் பல்வேறு குற்றங்களை சொல்லி வேறு பிரிவுகளில் வழக்கினை மாற்றிவிட்டது.  கணினி தொடர்பான குற்றங்களை பதிவு செய்வதை தேசிய குற்றப்பதிவு ஆணையம் 2016 ஆம் ஆண்டே நிறுத்திவிட்டது. 66ஏவுக்கு பதிலாக 67 ஐ காவல்துறை தற்போது பயன்படுத்தி வருகிறது என்பதை மும்பையில் செயல்படும் பாய்ண்ட் ஆஃப் வியூ அமைப்பு கண்டறிந்து கூறியுள்ளது.  உச்சநீதிமன்றம் 66ஏ வகை வழக்குகளை பெருமளவு கைவிட்டாலும் கீழ் கோர்ட்டுகள், காவல்துறை அதில் வழக்கு பதிவு செய்துவருகின்றனர். indiacode.nic.in போன்ற இணையதளங்களில் சட்டம் இருப்பதால் அது இன்னும் நடைமுறையில் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். அரசிதழில் நீதிமன்றத்தில் உத்தரவுகள் வந்தாலும் அதன் சீர்த்திருத்தங்கள் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை. உச்சநீதிமன்றத்தின் முடிவுகளை உடனே கீழமை கோர்ட்டுகளை நடைமுறைப்படுத்திவிடவும் முடியாது.


66ஏ படி கைது செய்யப்பட்டு வருபவர்களை என்ன செய்வது?

அச்சட்டம் புழக்கத்தில் இல்லை என்பதை கோர்ட்டுக்கு நிரூபித்து சொல்லலாம். இதன்மூலம் நீதியை நிலைநாட்டும் தீவிரம் கொண்ட நீதிபதிகளின் தண்டனையிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இப்படியெல்லாம் விவாதிக்க நல்ல வழக்குரைஞர் தேவை என்பதால் இது அனைவருக்கும் சாத்தியமானது கிடையாது. ஜன.செப்- 2018 வரையிலான வழக்குகளை சோதித்தபோது  21 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களிலிருந்து இணையதளத்திற்கு வழக்குகள் பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றாலும் மிகச்சரியாக உள்ளன என்று கூறமுடியாது. 66ஏ படி பதிவான வழக்குகளில் தியாகியின் வழக்கு இல்லை என்பதே இதற்கு உதாரணம்.

ஸ்‌ரேயா சிங்காலின் தீர்ப்புக்கு பிறகும் கூட 66ஏ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்வது குறையவில்லை. கடந்த ஆகஸ்டில் சிறுபான்மையினருக்காக போராடியவர்களை 66 ஏ பிரிவில் அகமதாபாத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கைது செய்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். முதலில் அப்படியொரு தீர்ப்பு வரவில்லை என்று சாதித்த இன்ஸ்பெக்டர், பின்னர் குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பு அப்படி அமைந்தது என ஊடகங்களை சமாளித்தார்.


நன்றி: பக்ரி, இந்தியா ஸ்பெண்ட்.காம்