அக்பர் பதவி விலகி வழக்கை சந்திப்பதே நியாயம்! - பிரசாந்த் கிஷோர்
நேர்காணல்
“குற்றமற்றவர் என நிரூபிக்க பதவி விலகி வழக்கை சந்திப்பதே ஒரே
வழி”
பிரசாந்த் கிஷோர், துணைத்தலைவர்,ஜனதாதள்(U).
தமிழில்: ச.அன்பரசு
2012 ஆம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக தேர்தலில் ஜெயித்தபோது
உலகிற்கு அறிமுகமானவர், பிரசாந்த் கிஷோர். ஐ.நா சபையில் எட்டு ஆண்டுகள் பணியாற்றி அனுபவம்
பின்னாளில் 2014 ஆம் ஆண்டு பாஜக பொதுதேர்தலில் வெல்ல உதவியவர், தற்போது பீகாரின் ஜனதாதள்
கட்சியின் துணைத்தலைவராக உள்ளார்.
மோடி, ராகுல்காந்தி இருவரிடையே பணியாற்றிய வகையில் என்ன வித்தியாசத்தை
உணர்ந்தீர்கள்.
விரைவில் இதுகுறித்த நூலை வெளியிடவிருக்கிறேன். மோடி, புதிய
கடுமையான சவால்களை ஏற்க விரும்புபவர். ராகுல்காந்தி தன் முப்பது வயதில் நூறு ஆண்டு
பழமையான கட்சியை வழிநடத்தி வருகிறார். ராகுலின் இடத்தில் பல்வேறு மாற்றங்களை உடனடியாக
செயல்படுத்துவது சிரமம்.
தனிப்பட்டரீதியில் ராகுல்காந்தியுடன் நட்பில் இருந்தாலும் தொழில்ரீதியாக
காங்கிரஸூடன் நீங்கள் முரண்படுகிறவர் இல்லையா?
காங்கிரஸ் கட்சிக்காக உ.பி தேர்தலில் எங்கள் குழு பணிபுரிந்தது
உண்மை. கூட்டணி மூலம் காங்கிரஸ் பஞ்சாப் மாநிலத்தில் வென்றது. ஆனால் 1985 ஆம் ஆண்டிலிருந்தே
காங்கிரசின் சரிவு தொடங்கிவிட்டது. இதன்விளைவாக காங்கிரஸ் தலைமைக்கும் எனக்குமிடையே
கருத்துவேற்றுமைகள் தோன்றின.
நீங்கள் கூறியதில் அவர் வேறுபட்டது எந்த இடத்தில்…
கட்சியை சரிவிலிருந்து மீட்க ஆலோசனைகளை சொல்லி தேர்தலை குறிவைக்க
வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். ராகுலுக்கு அதில் விருப்பமில்லை. கட்சியின் நோக்கம்,
குறிக்கோள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி வலுப்படுத்தினாலே தேர்தல் பெரிய விஷயமாக இருக்காது
என்பதே எனது இறுதியான கருத்து. ஆனால் அப்போது ராகுலுக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன.
காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி தன்னை நிரூபிக்க ராகுலுக்கு பத்து ஆண்டுகளாவது தேவை. உடனே
மதிப்பிடுவது தவறானது.
எம்.ஜே.அக்பர் மீது பத்திரிகையாளர் உள்பட பல்வேறு பெண்கள் குற்றம்சாட்டியும்
அவர் பதவி விலக தயக்கம் காட்டியதை எப்படி பார்க்கிறீர்கள்.
நேர்மையான மனிதராக எம்.ஜே.அக்பர், தன் மீதான குற்றச்சாட்டை எதிர்கொண்டு
நிரூபித்துவிட்டு பதவியை தொடர்வதே சரியானதென்பது எனது கருத்து.
பாஜகவை எதிர்த்து உருவான கூட்டணியிலும், பின்னர் சில மாதங்களிலேயே
பாஜகவுக்கு ஆதரவான மனநிலையிலும் நிதிஷ்குமார் இருப்பது அவர் மீதான நம்பிக்கையை குலைக்காதா?
கூட்டணியில் இணைவதை பீகாருக்கு வெளியில் மோடிக்கு மாற்று என்ற
விதத்தில் ஆதரித்தனர். மாநில முதல்வராக சிறப்பாகவே நிதிஷ்குமார் செயல்படுகிறார். சந்திரபாபுநாயுடு,
நவீன்பட்நாயக் ஆகியோர் கூட கூட்டணியை விட்டு விலகியுள்ளனரே?
-
பர்கா தத், தி வீக்,