ஹைவே காம்போஸர்! -என்னாச்சு தெரியுமா?




Related image

பிட்ஸ்!

ஆமைக்கு வலை!

குவாத்திமாலாவில் ஜாலியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தது கேரி சென் நண்பர்கள் குழு. அப்போது நீரில் பிளாஸ்டிக் பை அசைவதைப் பார்த்து அருகில் சென்றபோது ஆமை பிளாஸ்டிக் பையில் சிக்கி உயிருக்குப் போராடுவதைப் பார்த்தனர். உடனே சைட்டிஷ் உணவாக்கும் நோக்கமின்றி அதனை விடுவித்த கேரிசென்னின் சூழல்நேய வீடியோ இணையத்தில் பாராட்டுக்களோடு பகிரப்பட்டு வருகிறது.

ஹைவேயில் பாட்டுக்குப் பாட்டு!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாகச ஓட்டுநர், கார் ஓட்டிச்செல்லும்போது ட்ரம்பெட் வாசித்து சக பயணிகளை பீதியூட்டியுள்ளார். குயின்லாந்தின் எம்1 நெடுஞ்சாலையில் பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் எழுபது கி.மீ வேகத்தில் பாயும் காரில் ஓட்டுநர் ரசித்து ட்ரம்பெட் வாசிப்பது பதிவாகியுள்ளது. சாலைவிபத்துக்கு இதுபோன்ற ஆட்கள்தான் காரணம் என அந்த வீடியோ உலகெங்கும் கண்டனங்களை குவித்து வருகிறது.

சோளத்தில் சாதனை!

அமெரிக்காவின் இலினாய்ஸ் நூலகத்தில் பல்குத்தும் குச்சியில் 241 உதிர்த்த சோளங்களை மூன்றே நிமிடத்தில் குத்தி தின்று கின்னஸ் சாதனை செய்திருக்கிறார் டேவிட் ரஷ். முன்னரே 83 கின்னஸ் சாதனைகளை செய்துள்ள ரஷ், அறிவியல் படிப்புகளை பிரசாரம் செய்ய இச்சாதனையை செய்துள்ளார்.

முதலையோடு செல்ஃபி!

அமெரிக்காவின் லூசியானா விமானநிலையத்தில் முதலைக்குட்டிகளோடு செல்ஃபி எடுக்கும் ஆஃபர் பயணிகளுக்கு அளிக்கப்பட்டது. அடுபோன் இயற்கை கழகமும், நியூ ஆர்லியன்ஸ் சர்வதேச விமானநிலையமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தின. முதலைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே முதலை செல்ஃபியின் நோக்கம்.