சுவாரசிய பிட்ஸ்!


Related image


பிட்ஸ்!

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ(5) வீடியோகேமானது, 265 மில்லியன் டாலர் செலவில் உருவானது. ரிலீசான 72 மணிநேரத்தில் கிடைத்த வருமானம் ஒரு பில்லியன் டாலர்கள்.

1950 ஆம் ஆண்டுகளில் Phonebooth stuffing என்ற பழக்கம் நிலவியது. போன்பூத்களில் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி ஜாலி செய்வதுதான் அது.

Senecio Peregrinus எனும் தாவரத்தில் இலைகள் அச்சு அசல் டால்பின் போன்ற மினியேச்சர் வடிவங்களாக உள்ளன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மருத்துவமனையில் ஆபரேஷன் நடைபெறும்போது ஹாக்கி விளையாட்டு பற்றி பேச தடையுண்டு.

ஜப்பானில் திராட்சைகளின் தோலை முழுமையாக உரித்தபின்னரே உண்ணுகிறார்கள். ஏன்? தோலில் உள்ள அழுக்கும் துவர்ப்பும்தான் காரணம்.

18 ஆம் நூற்றாண்டில் வசதியான நிலபிரபுக்கள், தம் பண்ணையில் மதபோதகர்களை அதிக ஊதியத்திற்கு பணியமர்த்தி முடி,நகம் ஆகியவற்றை வளர்க்க வைத்து பராமரித்தனர். இவர்களுக்கு ornamental hermits என்று பெயர்.