நினைவுகளின் வகைகள், அவை சேமிக்கப்படும் முறை!



Dualism, Contrast, Judgment, Conflict, Mindfulness
பிக்சாபே


நினைவுகள், வகைகள், செயல்பாடு

ஆட்டோகிராஃப் திரைப்பட வகை நினைவுகளோ, தினசரி சலிப்பூட்டும் நினைவுகளோ மூளைக்கு அனைத்துமே ஒன்றுதான். நீங்கள் சேமிக்கும் விஷயங்களுக்கு உணர்ச்சிகர மதிப்பு கொடுத்தால் அவை மூளையில் பத்திரமாக உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும். அவற்றை திரும்ப பெறலாம். இல்லையெனில் அவை காலப்போக்கில் புதிய செய்திகள் வரும்போது உங்களுகுக நோட்டிஃபிகேஷன் அளிக்காமல் அழிக்கப்பட்டு விடும்.

நினைவு அனைத்து விஷயங்களுக்கும் காவலன், நமக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் என்கிறார் ரோமன் அரசியல்வாதியான சிசெரோ. இன்று மெமரி பிளஸ் விற்பனை இல்லை என்றாலும், நிறைய விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருந்து பேசுபவர்களை நாம் ஆச்சரியமாகத்தானே பேசுகிறோம். டெராபைட்டில் ஹார்ட்டிஸ்க் வந்துவிட்டாலம் நம் மூளையிலிருந்து டக்கென ஒரு விஷயத்தை எடுத்து அதற்கு ஒலி, ஒளி வடிவம், உடல்மொழி கொடுத்து பேசுவது சாதாரணமல்ல.

நினைவு என்பது மூளையிலுள்ள நியூரான்களில் ஏற்படும் மாற்றங்கள், அவை அங்கு சேகரிக்கப்படும் வடிவம் என்று மூளை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நினைவுகளில் ஐந்து வகைகள் உண்டு. அவை:

எபிசோடிக் மெமரி

இவை உணர்ச்சிகரமான, உறுப்புகள் சார்ந்த தகவல்களைக் கொண்ட நினைவுகள். தேன்மிட்டாய் வாங்கும்போது சில்லி மூக்கு உடைந்துபோனது, சைக்கிள் பந்தயப்போட்டியில் நண்பன் தள்ளிவிட்டு வலது கை உடைந்து போனது ஆகிய தகவல்களை இதில் சேர்க்கலாம்.

செமான்டிக் மெமரி

பட்டம் வினாடி வினா போட்டியில் கேட்பார்களே அதுபோன்ற பொது அறிவுக் கேள்வி பதில்களை சேமித்து வைத்துக்கொள்வது. அதாவது உங்களை அடுத்தவர்கள் அறிவாளி என நம்புவதற்கு உதவும் பல்வேறு தகவல்கள், செய்திகள்.

வொர்க் மெமரி

இது தற்காலிகமான பல்வேறு செய்திகள் நினைவுகளைக் கொண்டது. காலை பதினொரு மணிக்கு பிரெஞ்ச் ஃபிரை, மாலை நான்குமணிக்கு தேன்மிட்டாய் சாப்பிடுவது போன்ற அப்போதைக்கான அவசியமான தகவல்களை நினைவு வைத்துக்கொள்வது. மிகவும் முக்கியமல்லாத தகவல்களைக் கொண்ட பகுதி.

புரோசிஜூரல் மெமரி

உங்களை அறியாமலே உடல் நினைவு வைத்திருக்கும் பழக்கங்கள், திறன்கள் பற்றியது. சைக்கிள், நீச்சல் போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.

இம்ப்ளிசிட் மெமரி

உங்களது மனநிலையை டரியலாக்கும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு நினைவுகள். பெரும்பாலும் மோசமான, உங்கள் மனநிலையை பாதிக்கும் சம்பவங்கள் இதில் நினைவுகளாக இருக்கும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்