நான் என்ற எண்ணம் எப்படி உருவாகிறது?


Identity, Self, Self-Image, Image, Identification, Man
pixabay



நான் முக்கியம்

உளவியலில் பழக்கத்திற்கு அடிமையான விஷயங்களைப் பார்த்தோம். இதற்கு நாமும் அடிமைதான். 9.30க்கு அலுவலகம் சென்று வந்த பழக்கத்தில் ஞாயிறு கூட பதற்றமாகத்தானே இருக்கிறது. இதுவும் உளவியல் சார்ந்த தன்மைதான். இதில் ஹியூமனிசம் என்ற கருத்து உள்ளது. ஒருவர் தன்னை உள்ளேஆழ்ந்து பார்ப்பது, உலகை எப்படி பார்க்கிறார், உலகம் மீது என்ன கருத்தை வைக்கிறார் என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

1950ஆம் ஆண்டு மனிதர்களின் பார்வை பற்றிய உளவியல் கருத்தை உருவாக்கியவர்கள் இருவர். கார்ல் ரோஜர்ஸ் மற்றும் ஆபிரஹாம் மாஸ்லோ

சிலர் நம்மோடு கொஞ்சநேரம் இருந்தால் தேவலை என்றிருக்கும். சிலர் கிளம்பினால்தான் நமக்கு கிடைக்கும். இந்த தன்மைக்கு முக்கியக் காரணம், அவர்களின் ஆளுமை, பழக்கவழக்கம்,. குணம்தான். இதனைத்தான் மேற்சொன்ன ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். ஒருவரை முழுமையாக எப்படி தெரிந்துகொள்வது? அவர் எழுதிய டைரி, அவர் நம்மிடம் பேசிய விஷயங்கள், வலைத்தளங்களில் எழுதிய குறிப்பு, அவர் பின்தொடரும் தலைவர்கள் என பல்வேறு விஷயங்களைப் பற்றி பின்தொடர்ந்து  ஒருவரைக் கணிக்கலாம்.  இது துல்லியமானது என்று கூற முடியாது. தோராயமாக அவர் குறிப்பிட்ட வகை மாதிரி என கண்டுபிடித்துவிடலாம். இந்த ஆய்வை எதிர்ப்பவர்கள் இது உயிரியல் ரீதியாவும், ஹார்மோன்கள் ரீதியாகவும், ஆழ்மனம் ரீதியாகவும் எந்த ஆய்வுகளையும் கூறுவதில்லை என்கின்றனர். ஆனால் அப்படி இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

கார்ல் ரோஜர்ஸ் ஒருவரின் தன்னம்பிக்கை, சுயமதிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றை வைத்து ஒருவரின் ஆளுமையைக் கணிக்க முடியும் என்கிறார். மேற்சொன்ன மூன்று விஷயங்களில் தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் நிம்மதியைப் பெறமுடியாது என்கிறார்.

 

ஜெஸ்டாட் சைக்காலஜி

நமது மனம் பல்வேறு தகவல்களை தொகுத்து அதனை படமாக்கி புரிந்துகொள்கிறது. இதன் மூலம்தான் நாம் உலகை பார்க்கும் விதம் வரையறுக்கப்பட்டு விடுகிறது. நீங்கள் சாதாரண ஹரி டெக்ஸ்டைல்சில் துணி வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களது முதலாளி உங்களை ரேமண்ட் ஷோரூமுக்கு அழைத்துச் சென்று உங்கள் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ற ஷர்ட் தேர்ந்தெடுத்து வாங்கித் தருகிறார். உங்களுடைய உணர்வு நிலை என்னவாக இருக்கும்? பிரமாண்டமான விலை அதிகம் சொல்லும் துணிக்கடை என்பதால் உங்கள் உள்ளுக்குள் இது நமக்கு சரியான இடமல்ல என்று நினைப்பீர்கள். இதன் காரணமாக அங்கிருந்து தப்பிச்செல்லவே மனம் முயலும். ஆனால் இதனை அடிக்கடி அங்கே சென்ற சரிசெய்துகொள்ள முடியும். கம்ப்ளீட் மனிதராக உங்கள் உணர்கிறீர்களோ இல்லையோ.. உங்கள் பார்வை மாறுகிறது அல்லவா அதுதான் விஷயம். இதனை சோதிக்க ரூபின் வாஸ் இல்யூசன் எனும் படங்களைக் காண்பிக்கிறார்கள். அதில் நீங்கள் சொல்லும் விவரங்களை முன்வைத்து உங்களைப் பற்றிய கருத்துகளை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தனிமை, குழு

தனியாக இருக்கும் ஒருவர் அவர் விருப்பப்படி செயல்படுகிறார். ஆனால் குழுவில் உங்கள் கருத்துக்கு பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே அது நடந்தேறும்.

குழு என்பதில் குடும்பம், அலுவலக ஊழியர்கள் இடம்பெறுவார்கள்.

தனிப்பட்டவர் எனும்போது அவரின் லட்சியம், நோக்கம் குழுவுக்கும் மேலானதாக இருக்கும். குழுவில் தனிப்பட்டவர்கள் முக்கியம் அல்ல. ஒட்டுமொத்தமாக உறுப்பினர்கள் ஏற்ற விஷயங்கள்தான் முக்கியம்.

 

 

 

கருத்துகள்