மூளையின் பாதை - மூளை எப்படி செயல்படுகிறது?






Meditation, Mindfulness, Reconditioning, Mind, Brain
pixabay





மூளையின் பாதை

 

மூளையில் 86 பில்லியன்களுக்கு மேலான நியூரான்கள் உள்ளன என்பதைப் பார்த்தோம். இவைதான் ஐம்புலன்களிலிருந்து வரும் விஷயங்களை உள்வாங்குவதோடு அடுத்து என்ன செய்வது என்ற தகவல் தொடர்புகளுக்கான விஷயங்களையும் தீர்மானிக்கின்றன. இவற்றிலிருந்து மின் துடிப்புகளாக தகவல்கள் பரிமாறப்படுகின்றன. முத்தத்தில் தொடங்கி உடலுறவு வரை செல்வதும், அழுத்தமான முத்தமே போதும் என முடிவு செய்வதும் இந்த நியூரான்களின் வேலைதான்.

இந்த நியூரான்கள் மிகவும் சிக்கலான அமைப்புகளைக் கொண்டவை. நியூரான்களின் சந்திப்பு ஜங்ஷனுக்கு சினாப்சே என்று பெயர். இவற்றில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை சினாப்சே டிரான்ஸ்மிஷன் என்று கூறுகிறார்கள். இவற்றை நியூரான் டிரான்ஸ்மிட்டர்கள் செய்கின்றன. இதன் வழியாகத்தான் ஆண்கள் பெண்களை பார்த்ததும் கண்ண்டிக்கும் செய்கை உருவாகிறது. அதற்கு அந்த பெண் கால் மேல் கால் போட்டு க்ரீன் சிக்னல் கொடுப்பதும் உருவாகிறது. அதாவது மூளை தசைகளுக்கான செய்தியை அனுப்புகிறது.

நியூரான்களின் அதிசக்திவாய்ந்த வலைப்பின்னல் அமைப்பு பத்தாயிரம் நியூரான் செல்களுக்குமேல் ஜியோ 4ஜியை விட வேகமாக தகவல்களை அனுப்பி உடலின் செயல்பாடுகளை காக்கிறது. உங்களது பெண்தோழியிடம் பேச ஆசைப்பட்டு உளறுவதும், அதைக் கேட்டும் கேட்காமலும் தோழி நிற்பது போன்ற செயல்பாடுகளுக்கும் மூளையில் செய்திகள் உண்டு. அடுத்து  என்ன செய்யலாம் என்ற திட்டத்தை மூளை யோசித்து உடல் உறுப்புகளுக்கு அனுப்பும். இதன்படிதான், உடல் செயல்படுகிறது.

நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் குறிப்பிட்ட சூழல் சார்ந்து உடலில் பல்வேறு சுரப்பிகளை செயல்பட வைக்கின்றன. அவற்றைப் பொறுத்துதான் நம் மனநிலை அமைகிறது. அவற்றைப் பார்ப்போம்.

அசிட்டைல்குளோலைன்

இந்த சுரப்பி தலையிலுள்ள தசைகளை இயங்க வைக்க உதவுகிறது. கற்றல், நினைவுகள், தூக்கம் ஆகிய செயல்கள் சரியாக நடைபெற நியூரோடிரான்ஸ்மிட்டர் உதவுகிறது.

காபா

நியூரான்களின் வேகத்தினை முறைப்படுத்தி அதனை சீராக்குகிறது.

எண்டார்பின்

மகிழ்ச்சி, வேதனை ஆகிய தகவல்களை பரிமாற உதவுகிறது.

குளூட்டமேட்

கற்றல் மற்றும் நினைவுகளை பராமரிக்க உதவுகிறது. இ

அட்ரினலின்

ஆபத்தான சூழலில் உடலையும், உயிரையும் காக்க உதவுகிறது. நாயிடம் இருந்து தப்பித்து ஓடும்போது உடலில் அட்ரினலின் சுரக்கிறது. இதனால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். பெரிய தசைகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் ரத்த ஓட்டம் பாயும். கண் பார்வை கண்ணாடி போட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் படு கூர்மையாகும்.

செரடோனின்

உடலின் வெப்பநிலையையும் தசைகளின் நகர்வையும் கட்டுப்படுத்துகிறது. உற்சாகம், அமைதி ஆகிய சூழ்நிலைகளின்போது உதவுகிறது.

டோபமைன்

பரிசு பெறும்போது, பாராட்டப்படும்போது உடலில் அபரிமிதமாக இதன் பெருக்கத்தை உணரலாம்.

நோர்பைன்பிரின்

இதுவும் அட்ரினலின் குடும்ப உறவுதான். யாரையாவது பல்லை உடைக்க வேண்டும் என்றளவு கோபம் வந்தால் இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர்தான் காரணம் என்ற உணருங்கள். சண்டை, போர் சமயங்களில் இதன் வருகை உடலில் நிச்சயமாக நிகழும். இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

 மேற்சொன்ன அனைத்தும் மனநிலையை மாற்றுகின்றன என்பதை அறிவது முக்கியம்.

டோபமைன், நோர்பைன்பிரின் ஆகிய வேதிப்பொருட்கள் மன அழுத்த சூழலில் மூளையில் விடுவிக்கப்படுகின்றன.

இந்த இரண்டு வேதிப்பொருட்களின் செயல்பாடுகளால் ஏற்படும் விளைவை சரிசெய்ய செரடோனின் சுரப்பி உதவுகிறது.

 

 

கருத்துகள்