ட்ரில்லியன் ப்ரேம் கேமரா!


Image result for trillion frame camera





தொழில்நுட்பம் புதுசு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா டெக்னாலஜி பல்கலைக்கழகம், ஒரு செகண்டுக்கு பத்து ட்ரில்லியன் பிரேம்களை பதிவு செய்யும் அதிவேக கேமராவை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
கடந்தாண்டு ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சிக்குழு ஐந்து ட்ரில்லியன் பிரேம்களை பதிவு செய்யும் கேமராவை கண்டபிடித்ததற்கு அடுத்தகட்ட வளர்ச்சி இது. CUP(with compressed ultrafast photography ) தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது இக்கேமரா. 

அதிகரிக்கும் சிசேரியன்!

2000-15 காலகட்டத்தில் உலகமெங்கும் அறுவைசிகிச்சைகளின் எண்ணிக்கை 12-21% கூடியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 15 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவை. உலகளவில் வட அமெரிக்கா(32%), பிரேசில்(55%) ஆகிய நாடுகளில் அறுவை சிகிச்சை அதிகளவு நடைபெறுகிறது.

அதிகரிக்கும் வெப்பம்!

இமாலயத்தில் அதிகரிக்கும் வெப்பமயமாதலால் ஆப்பிள் விளைச்சல் குறைந்து வருகிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து 2022 ஆம் ஆண்டில் 1.5 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என பீதி கிளப்பியுள்ளது ஐ.நாவின் பருவச்சூழல் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை(2008).




பிரபலமான இடுகைகள்