சீனாவின் கெமிக்கல் தாக்குதல்!
கெமிக்கல் வலையில் சீனா!
அமெரிக்கா, சீனாவை அச்சுறுத்த
வணிகத்திற்கான வரிகளை அதிகரித்துள்ளது. இதுகுறித்த சர்ச்சை தீராத நிலையில் அந்நாட்டின்
சட்டத்திற்கு புறம்பான வேதிப்பொருட்களின் வணிகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செயற்கை ஹெராயின் ஃபென்டைல் பெருமளவு சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகி
வருகிறது. இதுபற்றி ட்ரம்ப் நேரடியாக ட்விட்டரில்
சீனாவை குற்றம்சாட்டியும் சீன போதை தடுப்பு பிரிவு அதிகாரி யு ஹைபின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு
என மறுத்துள்ளார்.
சீனாவில் தயாராகும் செயற்கை வேதிப்பொருட்கள்
இணையத்திலும் தபாலிலும் இம்மருந்துகள் உலகெங்கும் சப்ளை செய்யப்படுகிறது. 0.25 மி.கி
அளவு ஃபென்டைல் கூட உடலுக்கு ஆபத்துதான் என்கிறது அமெரிக்காவின் மருந்து அமலாக்கத்துறை(DEA).
கடந்தாண்டில் அமெரிக்காவில் 40% இறப்புகள்(72,000), கனடாவில் 72% இறப்புகள் செயற்கை
வேதிப்பொருட்களால் நிகழ்ந்துள்ளன.
சீனாவில் 4 லட்சம் மருந்து தயாரிப்பு
நிறுவனங்கள்(2015) உண்டு. ஆண்டு வருமானம் நூறு பில்லியனுக்கும் அதிகம். உலக நாடுகளில்
நெருக்கடியினால் 150 க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை சீன அரசு தடைசெய்துள்ளதாக ஐ.நா
அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.