பேச்சு குறைபாடு கொண்டுள்ளவர்களுக்கு மூளையில் பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்த மருத்துவர் - பால் ப்ரோகா

 











BIO டேட்டா



பியர் பால் ப்ரோகா (Pierre Paul Broca 1824-1880)

பிறந்த நாடு  

பிரான்ஸ்

பெற்றோர் 

பெஞ்சமின் ப்ரோகா, அன்னெட்டா ப்ரோகா

தொழில் 

 மருத்துவர், அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர்

முக்கிய ஆராய்ச்சி

 மூளை உடலின் செயல்பாடுகளுக்கு கட்டுப்படுத்துகிறது என கண்டறிந்தது

ஆராய்ச்சி வழிகாட்டிகள்

பிலிப் ரோகார்ட் (Philippe Rocord), ஃபிராங்கோயிஸ் லியூரெட் (Francois Leuret)

பிடித்தவேலை

கபால அளவீடு, பேச்சு குறைபாடு கொண்டவர்களின் மூளையை வெட்டி ஆராய்வது

சாதனை

மூளையில் மொழியைக் கையாளும் பகுதி (Broca area)பற்றிய ஆராய்ச்சி

வழிகாட்டி

நவீன மானுடவியல் பள்ளிகளுக்கு..

உருவாக்கிய கருவி

ஸ்டீரியோகிராஃப் (Stereograph)

தொடங்கிய அமைப்பு

மானுடவியல் சங்கம் (1859)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர். இவர், அங்குள்ள சைன்டே ஃபாய் லா கிராண்டே என்ற நகரில் பிறந்தார். தந்தை பெஞ்சமின் ப்ரோகா, மருத்துவர். 16 வயதில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். 20 வயதில் மருத்துவப்படிப்பை நிறைவு செய்தார்.  1848ஆம் ஆண்டு பாரிஸ் மருத்துவப் பள்ளியில், உடற்கூறியல் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். அச்சமயத்தில் உடற்கூறியல் சங்க செயலாளராகவும் இருந்தார். 1850களின் தொடக்கத்தில் ஹிப்னாடிசத்தை அனஸ்தீஸியாவாகப் பயன்படுத்தி அறுவை சிகிச்சைகளை செய்தார். 

மூளையின் முன்பக்கத்தில் உள்ள மொழியைக் கையாளும் இடம் பற்றிய பாலின் ஆராய்ச்சி முக்கியமானது. ஒருவர் தலையில் தாக்கப்பட்டு பேச முடியாமல்இருந்தால், அதற்கு ப்ரோகா அபாசியா (Broca's aphasia) என்று பெயர். இப்படி பெயர் வர, பால் செய்த ஆய்வுகளே காரணம். 

1861ஆம் ஆண்டு பால், முன்தலையில் அடிபட்டு, பேச முடியாமல் வந்த நோயாளியை ஆராய்ந்தார். அன்று, மருத்துவத்துறையில் மூளையின் பல்வேறு பாகங்கள், உடலின் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன என்பதை யாரும் ஏற்கவில்லை. பால் ப்ரோகாவின் மூளை ஆராய்ச்சிக்குப் பிறகே, அதிலுள்ள பல்வேறு பாகங்கள், உடலின் செயல்களைக்  கட்டுப்படுத்துவதை அறிந்தனர். நரம்பியல் துறையில் பால் ப்ரோகா மதிக்கப்படும் ஆளுமை.

https://neuroscientificallychallenged.com/posts/history-of-neuroscience-paul-broca

https://www.newworldencyclopedia.org/entry/Paul_Broca

https://history-of-psychology.readthedocs.io/en/latest/broca.html

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்