எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் பற்றிய ஐந்து விஷயங்கள்!
பிரிட்டிஷ் லைப்ரரி |
சார்லஸ் டிக்கன்ஸ்
டிக்கன்ஸ் தொடக்க காலத்தில்
எழுதிய படைப்புகளை போஸ் (boz) என்ற புனைப்பெயரில் எழுதினார். இந்த பெயர் அவரது சகோதரரின்
மோசஸின் பெயரில் இருந்து உருவானது. சளிபிடித்திருக்கும்போது மோசஸ் என்றால் போசஸ் என்று
வார்த்தை வருவதை நையாண்டி செய்து இந்த பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார்.
டிக்கன்ஸின் அப்பா, ஏராளமான
இடத்தில் கடன் வாங்கிவிட்டார். அதனைக் கட்டமுடியாமல் தவித்தார். இதனால் டிக்கன்ஸின்
12 ஆம் வயதில் அவரது முழு குடும்பமே சிறைக்கு செல்ல நேரிட்டது. அப்போது வீட்டில் மிஞ்சியவர்கள்
டிக்கன்சும், அவரது சகோதரியும்தான்.
சிறுவயதில் டிக்கன்சுக்கு
காக்கை வலிப்பு பாதிப்பு இருந்தது. இதனை அவர் எழுதிய ப்ளீக் ஹவுஸ், ஆலிவர் ட்விஸ்ட்,
அவர் மியூசுவல் பிரெண்ட் ஆகிய கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் காணலாம்.
டிவி தொடர்களில் தொடரும்
போடுவதற்கு முன்பு அதிர்ச்சியான சம்பவத்தை காட்டுவார்களே அதேபோல்தான் டிக்கன்ஸ் இயங்கினார்.
ஒரு நாவலை பல்வேறு அத்தியாயங்களாக எழுதி அவ்வப்போது வெளியிட்டார். ரசிகர்கள் அவரது
நூலைப்படிக்க காத்திருக்க வேண்டும் என்ற டிக்கன்ஸ் விரும்பினார்.
டிக்கன்ஸ் இறக்கும் முன்னர்,
தி மிஸ்டரி ஆப் எட்விட் ட்ரூட் என்ற கதையை எழுதிக்கொண்டிருந்தார். அக்கதையில் எட்வின்
என்பவர் காணாமல் போவது மட்டுமே எழுதியிருந்தார். எட்வினை யார் கொன்றது என எழுதுவதற்கு
முன்பே அவர் இறந்துவிட்டார். இதனால் எட்வினைக் கொன்றது யார் என்ற மர்மம் இன்றுவரை அப்படியே
தொடர்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக