உராங்குட்டான் நகைச்சுவை உணர்வுமிக்கது!
டாக்டர் பைருட் கால்டிகாஸ்
விலங்கியலாளர் பைருட் கால்டிகாஸ், இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் உராங்குட்டான்களை ஆராய்ந்து வருகிறார். பூர்விகம், கனடா. கனடாவிலுள்ள சைமன் ஃபிரேஸர் பல்கலைக்கழகத்தில் அகழாய்வுத்துறை பேராசிரியராக பணிபுரிகிறார்.
நீங்கள் உராங்குட்டானை முதன்முறையாக எப்போது பார்த்தீர்கள் என நினைவிருக்கிறதா?
பள்ளியில் படிக்கும்போது, டைம் லைஃப் புத்தகத்தைப் படித்தேன். அதில், ஆண் உராங்குட்டான் புகைப்படத்தை முதன்முறையாக பார்த்தேன். மனிதர்களோடு அதிக ஒற்றுமை கொண்ட குரங்கினம். அந்த புகைப்படம், இன்றுவரையும் என் மூளையில் மறக்கமுடியாத நினைவாக உள்ளது.
உராங்குட்டானை 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறீர்கள். அவற்றைப் பற்றி வரையறை செய்யமுடியுமா?
வால்ட் டிஸ்னி உருவாக்கிய அனிமேஷன் விலங்குகள் போன்றவை தான் உராங்குட்டான்கள். மனதில் நகைச்சுவை உணர்வு நிரம்பியவை. அவற்றின் உணர்ச்சிகளை நீங்கள் கூர்ந்துகவனித்தால், எனது கருத்தைப் புரிந்துகொள்ளலாம்.
பல்கலைக்கழக படிப்பை முடித்தவுடன் உராங்குட்டானைப் பற்றி ஆய்வு செய்ய எப்படி முடிவு செய்தீர்கள்?
அப்போது எனக்கு வயது 19. என்னுடைய பேராசிரியர், ஆப்பிரிக்காவில் ஜேன் குட்டால் என்ற பெண், சிம்பன்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார் என்று கூறியிருந்தார். இதுபற்றிய நிறைய விவரங்களை லூயிஸ் லீக்கி ( Dr. Louis Leakey) என்ற அறிவியலாளர் வழங்கினார். இவர் வழியாகவே கொரில்லா ஆராய்ச்சியாளர் டயானே ஃபோசெ பற்றி அறிந்தேன். டயானே மூலம் உராங்குட்டானை ஆய்வு செய்ய முடிவெடுத்தேன்.
ஆய்வில் கண்டறிந்த விஷயங்கள் என்ன?
உராங்குட்டான்கள் உண்ணும் 400 வகையான உணவுப்பொருட்களை அடையாளம் கண்டுள்ளோம். உராங்குட்டான்களின் இயல்பு, இணைசேரும் செயல்பாடுகள் என அவற்றின் வாழ்க்கை பற்றிய ஏராளமான தகவல்களை சேகரித்துள்ளோம்.
தகவல்
National geographic kids may 2022
dr. Birute mary galdikas
https://orangutan.org/about/dr-birute-mary-galdikas/
https://www.sfu.ca/archaeology/about/people/faculty/bgaldikas.html
கருத்துகள்
கருத்துரையிடுக