கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் பனிக்காடு

 

















பனிக்காடு!

உலகில் பனி கொட்டும் சூழலைக் கொண்ட காடுகள் (Snow forest), பூமியின் நிலப்பரப்பில் 17 சதவீதம் உள்ளன. பனிக்காடுகள் சூழுலுக்கு முக்கியமானவை. இங்கு, ஆண்டில் பாதி நாட்களின் வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ்தான். 

பூமியின் வடக்குப்பகுதியில் பனிக்காடுகளைப் பார்க்கலாம். இங்கு, பனிப்பொழிவு இருப்பதால், குளிரும் அதிகமாக இருக்கும். அமெரிக்கா, ஸ்வீடன், ரஷ்யா, நார்வே, ஜப்பான், ஃபின்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் பனிக்காடுகள் உள்ளன. நரி, எலி, ஓநாய், கலைமான் ஆகிய விலங்கினங்கள் இங்கு வாழ்கின்றன. இனப்பெருக்க காலத்தில் 300க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் வந்து செல்கின்றன.

 கார்பனை உறிஞ்சி வெப்பமயமாதலைக் குறைப்பதில் பனிக்காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இக்காடுகளிலுள்ள மரங்களை கட்டடம் கட்ட பயன்படுத்துகின்றனர். சாலை மற்றும் சுரங்கங்கள் அமைக்கவும்  தேவையான இடத்திற்காக காடுகளை அழிக்கின்றனர். பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்களை வெட்டினால், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மரக்கன்றுகளை நடுவது அவசியம். இதன்மூலம் பனிக்காடுகள் முற்றாக அழிவதைக் கட்டுப்படுத்த முடியும். ஃபின்லாந்தின் வடக்குப்பகுதியில் பனிக்காடு அமைந்துள்ளது. இது கனடா, ரஷ்யாவிலுள்ள பனிக்காடுகளை விட சிறியது. ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள பனிக்காடு, முக்கியமானது. இங்கு சைபீரிய புலி, பழுப்பு கரடி, சிவப்பு நரி ஆகிய விலங்குகள் வாழ்கின்றன. 

 


trees at the top of the world

the week junior 2.4.2022

 


கருத்துகள்