நியூரோமார்பிக் கேமரா மூலம் கிடைக்கும் பயன்!

 










தெரியுமா?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், 2021ஆம் ஆண்டு இறுதியில் நியூரோமார்பிக் கேமரா (Neuromorphic Camera) பொருத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க விமானப்படை அகாடமியும், வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் என இரண்டு அமைப்புகள் இணைந்து நிறுவியுள்ளன. இக்கேமரா திட்டத்திற்கு ஃபால்கன் நியூரோ (Western’s Falcon Neuro project ) என்று பெயர். இந்த கேமரா தட்பவெப்பநிலை சார்ந்த மாற்றங்களை படம்பிடிக்க கூடியது. மின்னல், இடி, மேகங்களுக்கு இடையிலான மின்னோட்டம் ஆகியவற்றை பதிவு செய்து தகவல்களை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்புகிறது. 

தென்னாப்பிரிக்காவில் எம்போனெங் (Mponeng) என்ற தங்கச்சுரங்கம் உள்ளது. இது பூமியிலிருந்து 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில், 3,900 மீட்டர் ஆழத்தில் டாவ்டானா (Tautona), சவுகா (Savuka) ஆகிய சுரங்கங்கள் தோண்டப்பட்டுள்ளன.  பூமியின் கீழே தோண்டப்படும் சுரங்கத்தில் வெப்பம்  70 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். இதைக் குறைக்க ஐஸ்கட்டிகள் கரைத்த திரவத்தை சுரங்கத்தில் பீய்ச்சி அடித்து வெப்பம் தணிக்கிறார்கள். பலவீனமான சுரங்கப்பகுதியில் ஷாட்க்ரீட் (Shotcrete) முறையில் கான்க்ரீட்டைப் பீய்ச்சியடித்து பலப்படுத்துகிறார்கள். 

 



science illustrated march 2022
https://www.westernsydney.edu.au/future-makers/issue-five/biology-inspired-cameras-on-the-international-space-station

pixabay

கருத்துகள்