பயிர்களை அழிக்கும் அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்! ஃபார்ம் சென்ஸ்

 










அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பம்!



இயற்கைச்சூழலில் பூச்சிகளின் பங்கு முக்கியவை. விவசாயப் பயிர்களை தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமானதாக மாறிவருகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரோமோன் வேதிப்பொருள் கொண்ட பசை அட்டைகளை விவசாயிகள் பயன்படுத்தினர். ஆனால் இதன் மூலம் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையை, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஃபார்ம்சென்ஸ் (Farmsense) நிறுவனம் மாற்றியுள்ளது. இந்த நிறுவனம் பூச்சிகளை கண்காணிக்கும் சென்சார் கருவிகளை உருவாக்கி வருகிறது. 

 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபார்ம்சென்ஸ் நிறுவனம், பூச்சிகளைக் கண்காணித்து அதற்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை வகுக்க உதவுகிறது. இந்த நிறுவனத்தின்,  ஃபிளைட்சென்சார் கருவி, 2020ஆம் ஆண்டு முதலாக வயல்வெளிகளில் நிறுவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்தக்கருவி, பூச்சியை கவர்ந்து இழுக்கும் கொல்லும்பொறி அல்ல. அந்திபூச்சிகளின் வடிவம், இறக்கை எழுப்பும் ஒலி என பல்வேறு அம்சங்களை பதிவு செய்து உரிமையாளருக்கு தானியங்கியாக அனுப்பிவிடும். 

கருவி தரும் தகவல்களின் அடிப்படையில், பூச்சி உண்ணவரும் குறிப்பிட்ட நேரத்தில்  பூச்சிக்கொல்லிகளை தெளித்தால் போதுமானது. இதனால், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் அளவும், அதற்கான செலவும் பெருமளவு குறைகிறது. அமெரிக்காவில் பாதாம், பிஸ்தா மரங்களை தாக்கும் பூச்சிகளில், நாவெல் ஆரஞ்ச் வார்ம் அந்துப்பூச்சி (Novel orange worm moth) முக்கியமானது. கலிஃபோர்னியாவின் வயல் வெளிகளில் ஃபிளைட் சென்சாரில் பிடிபடுவது, 99 சதவீதம் நாவெல் அந்துப்பூச்சிதான்.  ஃபிளைட்சென்சார் கருவி மூலம் கிடைக்கும் தகவல்களை பூச்சியியல் துறை ஆய்வாளர்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும். 


son et lumiere

the economist june 11-17 2022

https://www.farmsense.io/our-product/

https://www.agriculture.com/technology/start-up-spotlight-farmsense

https://www.foodandfarmingtechnology.com/news/data-analytics/new-sensor-to-improve-insect-monitoring-and-crop-management.html

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்