நாயிடம் எப்படி பழக வேண்டும்? - நடத்தை உளவியல் ஆய்வு




Dog, Schäfer Dog, Girl, Woman, Love, Kiss, Snuggle
pixabay





உளவியலும் பழகும் முறையும்

ஒருவர் சமூகத்தில் பழகும் முறை சார்ந்து அவரின் உளவியலை ஆராய்ச்சி செய்கின்றனர். இதற்கு பிஹேவியர் சைக்க்காலஜி என்று பெயர்.
உங்களுடைய நண்பர் இருக்கிறார். அவரை நீங்கள் எப்படி நண்பராக ஏற்றீர்கள் என்று நினைவிருக்கிறதா? அவரின் பழகும் முறை, கருத்து, வெளியில் நடந்துகொள்ளும் முறை இவை உங்களுக்கு அவரிடம் பிடித்திருக்கலாம். பொதுவாக நம் கருத்துக்கு இசைந்தவர்களையே நாம் நண்பர்களாக தேர்ந்தெடுக்கிறோம். இதைத்தான் நடத்தை உளவியல் என வரையறுக்கலாம். 

உலகில் ஒருவர் பார்க்கும் விதம், அவரின் கருத்து சார்ந்து நடத்தை உளவியல் உருவாகிறது. இதற்கான சோதனைகள் தனியே குறிப்பிட்ட இடத்தில் நடப்பவையே. இவற்றில் நடத்தை உளவியல் சாரந்த பல்வேறு அறிஞர்களின் கோட்பாடுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து ஒருவரின் நடத்தை உளவியல் தீர்மானிக்கப்படுகிறது. 

1913ஆம் ஆண்டு ஜான் வாட்சன் என்ற ஆய்வாளர் நடத்தை உளவியல் என்ற பதத்தை உருவாக்கினார். இதன் செயல்பாட்டில் மனிதர்களின் பங்கு, மனம் பற்றி வரையறைகளை உருவாக்கினார். அவற்றை இன்றளவும் ஆய்வாளர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
இதில் முக்கியமான சோதனையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாயை சாதாரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்து சோறு போடுவதற்கும், மணியை ஒலிக்கவிட்டு சோறு போடுவதற்கும் வேறுபாடு உண்டு. நாளடைவில் மணி ஒலிக்கும்போதே நாயின் வாயில் எச்சில் ஊறி வழியத்தொடங்கிவிடும். அச்சமயத்தில் நாம் உணவு வழங்காதபோது நாய் கடுமையாக குரைக்கத்தொடங்கிவிடும். இதனை நாம் பழக்கத்திற்கு அடிமையாகுவது என குறிப்பிடலாம். 

மூன்றுவகை நடத்தை வகை முறைகள் உள்ளன. அவற்றில் மெத்தடாஜிகல் பிஹேவியரிசம் முறையைப் பார்ப்போம். வாட்சன் உருவாக்கிய உளவியல் முறை என்பது உடல், மனம் ஆகியவற்றை உள்ளடக்கியது. முழுக்க அறிவியல் பூர்வமான கணிப்பு முறையாகும்.
அம்மாவின் சிரிப்பைக் கண்டு குழந்தை பதிலுக்கு சிரிப்பது, அம்மாவின் கோபமான குரல் உயர்த்தலைக் கண்டு குழந்தை மிரள்வது, அழுவது ஆகியவற்றை இம்முறையில் குறிப்பிடலாம். 

ரேடிக்கல் பிஹேவியரிசம்

இம்முறையை 1930ஆம் ஆண்டு பி.எஃப். ஸ்கின்னர் என்ற ஆய்வாளர் உருவாக்கினார். இம்முறையில் ஒருவர் ஒரு விஷயத்தை செய்யச் சொல்வது அதற்கு பதிலீடாக அவருக்கு பரிசு வழங்குவதை  முன்னுரிமையாக கொண்டது. பந்தை உருட்டிவிட்டு நாயை எடுத்துவரச்சொல்லி அதற்கு பரிசாக பிஸ்கெட்டை கொடுப்பதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
சைக்கலாஜிகல் பிஹேவியரசம்
ஆர்தர் டபிள்யூ ஸ்டாட்ஸ் என்ற உளவியல் வல்லுநர் உருவாக்கிய முறை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் குறிப்பிட்ட வயது நிரம்பும்போது அறிவுத்திறன் சார்ந்த சோதனைகளில் வெற்றிபெறுவதை ஆர்தரின் ஆய்வுகள் ஆதாரத்துடன் நிறுவின. 

குணநலன் சார்ந்த பரிசு மற்றும் தண்டனை விஷயங்களை புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். 

உங்களது நாய் உங்களது கட்டளையை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறது. அப்படி உட்கார்ந்திருக்கும்போது குறிப்பிட்ட நேரம் கழித்து அதற்கு பரிசாக எலும்புத்துண்டை வழங்குகிறீர்கள். இப்படியே சில நாட்கள் கொடுத்தால், அமைதியாக இருந்தால் தனக்கு உணவுப்பொருள் கிடைக்கும் என்பதை நாய் புரிந்து கொண்டுவிடும். 

சாலையில் பார்த்திருப்பீர்கள். சில நாய்கள் எஜமானவரை வேகமாக இழுத்துத்கொண்டு ஓடும். அதன் உரிமையாளர்கள் அதன் வேகத்திற்கு ஓடிச்சென்று கொண்டிருப்பார்கள். இந்த குணத்திற்கு பரிசாக அதன் தொண்டையில் மாற்றியுள்ள பெல்டை வேகமாக இழுத்துப்பிடித்தால். உடனே நாயின் வேகம் குறையும். நமக்கும் பிபி எகிறாது. இதறகு காரணம், தனது செயல்பாட்டிற்கு தண்டனை என புரிந்துகொள்ள இதனையும் சில நாட்கள் செய்யலாம். 

நாய் எஜமானருடன் அவரின் வேகத்திற்கு வரும் போது, அதன் கயிற்றை சுண்டி இழுக்கக் கூடாது. இது நாய்க்கு எதிர்மறையான விளைவை உருவாக்கும். நாயின் கழுத்து கடுமையாக நெரிக்கப்படும் அபயாம் உள்ளது.
நாய்க்கு பிடித்த பிஸ்கெட்டை நாயின் பங்கை குறைத்துவிட்டு நீங்களே சாப்பிட்டால் நாய் உங்கள் மீது கால் வைத்து எங்கே என்று கேட்கும் பாவனை வெளிப்படும். இது நாய்க்கு எதிர்மறையாக குணத்தை உருவாக்கும். நாய்க்கு  பிடித்த பொருளை அதன் பார்வையிலிருந்து அகற்றினால் இந்த பாவனையை நாய் செய்யும்.