கடல் தடத்தை மூடுகிறதா ஈரான்?





கடல்தடத்தை மூடும் ஈரான்!

அமெரிக்கா அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதையடுத்த தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஹோர்முஷ் கடல்வழியை மூடப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ருகானி அறிவித்துள்ளார்.

ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் கச்சா எண்ணெய் வணிகம் முழுக்க 21 கி.மீ நீளம் கொண்ட இந்த ஹோர்முஷ் கடல்வழியை நம்பியே நடைபெற்று வருகிறது. உலகில் நடைபெறும் மொத்த வணிகத்தில் 30 சதவிகிதம் இப்பாதையைப் பயன்படுத்தி நடைபெறுகிறது. 1980 ஆம் ஆண்டு ஈரான்-ஈராக் போர் ஏற்பட்டபோது இப்பாதையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக மாறியது. குவைத் போக்குவரத்து அமெரிக்காவின் கப்பல்வழியே நடைபெற்றதோடு, காப்பீட்டு கட்டணம் உயர பெட்ரோல் டீசல் விலைகளை உலகெங்கும் உயர்ந்தன.அரேபிய நாடுகளை இந்தியாவுடன் இணைக்கும் வழித்தடம் இது.

ஈரான் வழித்தடத்தை தன் சிறியரக ஏவுகணைகளால் தாக்கி சேதம் ஏற்படுத்தி கப்பல்களை நிறுத்தி வைக்கும் வாய்ப்பு உள்ளது. தைரியமாக இதனை ஈரான் செய்யுமா என்பதைத்தான் அரசியல் விமர்சகர்கள் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.