ஹிட்லருக்கு உதவிய ஐந்துபேர் கொண்ட குழு - ஜெர்மனியின் தலைவிதியை மாற்றியவர்கள்

Adolf Hitler, Nazi, Angry, Germany, Abstract, Finger
பிக்ஸாபே



ஹிட்லரின் மூளைக்கார படை!

எந்த மனிதரும் பெரிய ஆளாக உயர சூழல்கள், தனிப்பட்ட ஆளுமை முக்கிய காரணம்தான். மறுக்கவில்லை. ஆனால் அதையும் தாண்டி அவருக்கு உதவ ஆபத்துதவி படை என்று ஒன்று உண்டு. அவர்கள் அவரை நெருக்கடியான தருணங்களில் காப்பாற்றுவார்கள். என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். அப்படி ஐந்து பேர்தான் ஹிட்லரை மாபெரும் தலைவராக்கி பிற நாடுகளை அலற வைத்தார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.

கத்தோலிக்க சக்தி!

ஃபிரான்ஸ் வான் பாபன்

1879- 1969

கத்தோலிக்க குடும்ப வாரிசு. 1921ஆம் ஆண்டு கத்தோலிக்க அரசியல் கட்சியின் உறுப்பினரானார். இவர்தான் 1932ஆம் ஆண்டு வெய்மர் இறக்கும்போது ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றார். ஹிட்லர் தலைமை பொறுப்புக்கு வர முக்கியமான ஆதரவு சக்தியாக இருந்தார். தன் காலம் முடியும்வரை அரசின் முக்கியமான பதவிகளை வகித்தார். துருக்கியின் தூதராக தொடர்ந்தார். பின்னாளில் நாஜிக்களை கொன்றதற்கான குற்றவிசாரணையைச் சந்திக்க நேரிட்டது.

கம்யூனிஸ்ட்களின் எதிரி

ஆல்ஃபிரட் ஹியூகென்பர்க்

1856 – 1951

வெய்மர் காலத்தில் ஊடகங்களுக்கான மனிதராக இருந்தார் ஆல்ஃபிரட். 1928 ஆம் ஆண்டு வரை வலதுசாரிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் சோசலிசவாதிகளுக்கும் எதிரான ஊடக சக்தியாக அனைவரையும் மிரட்டினார். இவர் அதுவரை ஜெர்மன் மக்கள் கட்சி தலைவராக அனைவராலும் அறியப்பட்ட தலைவராக பிரபலம் பெற்றிருந்தார். பின்னாளில் 1931இல் ஜெர்மன் நாஜிக்கட்சிக்கு ஆதரவாக மாறினார். ஹிட்லருக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தார். நாஜிகள் உலகை ஆளுவார்கள் என்று திடமாக நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப்போக, இவரின் கட்சியும் காணாமல் போனது.

கர்ட் வான் ஸ்லெய்ச்சர்

1882-1934

வெய்மர் ஜெர்மனி காலத்தின் கடைசி அதிபர் இவர்தான். ராணுவத்தில் பணியாற்றியவர் திடீரென அரசியலில் நுழைந்தார். வான் பாபனை தனது செல்வாக்கால் மேலே உயர்த்தினார். ஆனாலும் கூட 1929ஆம்ஆண்டு வரை இவரால் ஜெர்மனியில் தாக்குப்பிடிக்க முடிந்தது. அதற்குப்பிறகு நாஜிக்கட்சி இவரை எதிரியாக பார்த்தனர். ஓரிரவில் இவரை நாஜிப்படை படுகொலை செய்தது.

போர் நாயகன்

பால் வான் ஹிண்டென்பர்க்

1847-1934

1925ஆம் ஆண்டு ஜெர்மனியின் பொருளாதாரம் பாதாளத்திற்கு பாய்ந்தபோது நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டு பாடுபட்ட தலைவர் இவர். ராணுவ சம்பந்தமான பிரசாரங்களில் கலந்துகொண்டு நாட்டின் அதிபராக மாறினார். இவர்தான் ஹிட்லரையும் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். 1932 ஆம் ஆண்டு இவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1933ஆம் ஆண்டு ஹிட்லரை தனது பதவியில் உட்கார வற்புறுத்தப்பட்டார். பின்னாளில் ஹிட்லரோடு கருத்து வேறுபாடுகள் கொண்டு மறைந்தார்.

தொழிற்சாலைகளின் நாயகன்

ஃபிரிட்ஸ் தைசன்

 வெய்மர் காலத்தில் இரும்பு, உருக்கு தொழிற்சாலைகளை வைத்திருந்த பணக்காரர். தொடக்கத்தில் நாஜிக்களுக்கான அ முதல் அக்கு வரையிலான அனைத்து உதவிகளையும் செய்தார். பின்னர் யூ டர்ன் போட்டு யோசித்தவர், இரண்டாம் உலகப்போரின்போது நாஜிக்களின் மீது நம்பிக்கை இழந்தார். நாட்டை விட்டே ஓடிப்போனார். அதற்கு முன்னர் யூதர்களை கொடுமைப்படுத்தும் முகாம்களை சென்று பார்வையிட்டு ரசித்த ஆகிருதி இவர்.

நன்றி: பிபிசி எர்த்  





கருத்துகள்