அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறோம் - கிரிஷ் சந்திரா முர்மு - ஜம்மு காஷ்மீர் ஆளுநர்









Assembly Election In Jammu And Kashmir 'Soon', Says Lt Governor ...



கிரிஷ் சந்திரா முர்மு, ஜம்மு காஷ்மீர் ஆளுநர்

காஷ்மீர் இளைஞர்களை ஐடி ஆட்கள் மூலம் மூளைச்சலவை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறப்படுகிறதே?

இந்த மாநிலத்தில் வளர்ச்சிப்பணிகள் இல்லாததால் நீங்கள் கூறியது போன்ற முயற்சிகள் நடைபெற்று வந்தன. இப்போது பாதுகாப்பு படையினரும் அரசும் பல்லாண்டுகளாக நடந்து வந்த முயற்சியைத் தடுக்க முயன்று வருகிறோம்.

சிறப்பு அந்தஸ்து ரத்தாகி ஒராண்டு ஆகப்போகிறது. ஜம்மு காஷ்மீரில் இப்போது அரசியல் நிலைமை எப்படியிருக்கிறது? அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதா? முக்கியமாக மெஹ்பூபா முக்தி....

தற்போது இங்கே குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசியல் கட்சிகள் தங்களது செயல்பாடுகளை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால் அதற்குள் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் தேர்தல் பணிகள் நின்றுவிட்டன. வேறெந்த காரணங்களும் தேர்தலை நிறுத்தும்படி இல்லை.

பெரும்பாலான அரசியல் கைதிகளை நாங்கள் விடுவித்துவிட்டோம். இனியும் அரசியல்வாதிகளை கைது செய்துவைக்கும் திட்டமில்லை.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை நடைபெறுமா?

பெருந்தொற்று வழிவிடுமா என்று தெரியவில்லை. அமர்நாத் லிங்கத்திற்கு பூஜைகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். வைஷ்ணவி தேவி விஷயத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை.

வேலைவாய்ப்பின்மைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?

வேலைவாய்ப்பின்மை என்பது உலகளாவிலான பிரச்னை. அனைத்து நாடுகளும் கோவிட் -19 நோய்த்தொற்று பிரச்னையால் வேலைவாய்ப்பின்மை பிரச்னையை சந்தித்து வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்புக்கான எந்த அடிப்படை வசதிகளையும நாங்கள் உருவாக்கவில்லை. வரும் அக்டோபர் மாதம் முதலீட்டாளர்களின் மாநாடு நடத்தவுள்ளோம். அதில்தான் வேலைவாய்ப்பின்மைக்கான முடிவு தெரியும்.

இந்துஸ்தான் டைம்ஸ்

கிரிஷ்ணன் கஜூரியா

 

 

 


கருத்துகள்