குழந்தை பிறப்பில் சரிவு!

குழந்தை பிறப்பில்
சரிவு!

அமெரிக்காவில்
குழந்தை பிறப்புவிகிதம் தொடர்ந்து சரிந்துவருகிறது. கடந்தாண்டு 3.8 பில்லியனாக இருந்த குழந்தைகள் பிறப்பு விகிதம் இவ்வாண்டு இரண்டு சதவிகிதம்
சரிந்துள்ளது. இது கடந்த முப்பது ஆண்டுகளில் மிக குறைவான விகிதம்
என நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கை கூறியுள்ளது.
ஆயிரம் பெண்களுக்கு(15-44 வயது)
60 குழந்தை பிறப்புகளே நிகழ்ந்துள்ளது. இது
2016 ஆம் ஆண்டைவிட 3 சதவிகிதம் குறைவு.1909
ஆம் ஆண்டிலிருந்து குழந்தை பிறப்பு விகிதங்களை அமெரிக்கா பதிவு செய்து
வருகிறது. பொதுவாக நாற்பது வயதுக்கு கீழுள்ள பெண்கள் பெறும் குழந்தைகளின்
விகிதமும் குறைந்துள்ளது அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "பொருளாதார சீர்குலைவு 2009 ஆம் ஆண்டே ஓரளவு சீர்பட்டாலும்
மக்கள் தங்கள் பொருளாதார நிலைமை குறைந்த பயத்திலிருந்து மீளவில்லை என்பதையே ஆய்வு முடிவுகள்
காட்டுகின்றன. பள்ளி, கல்லூரியில் படிக்கும்
மாணவர்கள், முழுநேர பணியாளர்கள் என பலரும் வீட்டுக்கடன்,
கல்விக்கடன் ஆகியவற்றைக் கட்ட உழைத்துவருவது இதன் பொருட்டே"
என்கிறார் ஓஹியோ பௌலிங் க்ரீன்ஸ்டேட் பல்கலைக்கழக பொருளாத பேராசிரியர்
காரென் பெஞ்சமின் குஸோ.