மீதியுள்ளவை அனைத்தும் டான் ஃபைனாரு]

16
மீதியுள்ளவை அனைத்தும்
டான் ஃபைனாரு]


உங்களது பெற்றோர்கள் தென் பகுதியைச் சேர்ந்த பெலோனிசஸ் மறும் க்ரேட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்றும் நீங்கள் கரும் மேகங்கள், கடும் மழை, கடும் குளிர்காலம் கொண்ட வட பகுதியில்தான் பெரும்பாலும் கவனத்தைக் குவித்திருக்கிறீர்கள்.

     இக்கேள்வி எப்போதும் என்னை நோக்கி கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு எவ்வித விளக்கமும் நான் அளிக்கப்போவதில்லை. இதற்கான விடையை கடந்த காலத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது உண்மையாக இருக்காது. உளவியால் ஆய்வாளர்கள் வேண்டுமானால் இதற்கான ஆதாரங்களை கண்டறிய முடியலாம். மறுகட்டமைப்பு எனும் எனது முழுநீளப்படத்தினை எடுப்பதற்கான சென்றிருந்த நிகழ்வை இங்கு கூற விரும்புகிறேன். அந்த நிலப்பரப்பு முழுக்க சாம்பல் நிறமாக இருந்தது. கருமையான மேகங்கள், கவர்ச்சியற்ற எளிய வீடுகள், பெரும் மலைகள் அவற்றின் பின்னணியில் இருக்க, மெல்லிய தூறலாய் மழை பெய்துகொண்டிருக்க பனி ஒரு திரைபோல மலையினை மூடிய சூழலில் கிராமமே வெறிச்சோடிக் கிடந்தது. 1950 இல் பெரும்பாலான கிரீக் மக்களைப் போல அவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மனிக்கு வேலை தேடி சென்று விட்டனர். மிககுறைந்தவெளிச்சத்தில்கூர்மையாககவனித்தால்கருப்புஉடையணிந்தவயதான பெண்கள் மட்டும் தெருக்களில் நடமாடுவதைக் கண்டேன். திடீரென ஒரு பழைய உடைந்து போன குரலில் ஒரு பழைய பாடல் ஒன்று காற்றில் மிதந்துவந்ததை கேட்டேன். வயது முதிர்ந்த குடியானவர் ஒருவர் ஓ. சின்ன எலுமிச்சை மரமே... ஓ.. சின்ன எலுமிச்சை மரமே என்று பாடிக்கொண்டிருந்தார். நான்அப்பாடலைபடத்திலும்பயன்படுத்திஇருப்பேன். மழை, பனி, சாம்பல்நிறகற்கள், கருப்புஉடைஅணிந்தபெண்கள்(பேய்போலவே)உலவுவது, வயதானவர்பாடும்பாடல்எனவாழ்க்கைகுறித்தஒருசித்திரமாகஅவைஎன்நினைவில்பதிந்துள்ளன. ராணுவசர்வாதிகாரத்தின்கீழ்வரும்அக்கிராமம்புறக்கணிக்கப்பட்டபகுதிபோலஇருந்தது. நாட்டிலிருந்துதொடர்ச்சியாகவெளியேறிவரும்மக்கள்என்றுஇருக்கும்இடத்தில்மிச்சமிருப்பதுபழையகாதல்பாடல்மட்டும்தான். இவைபற்றியசித்திரம்என்ஆழ்மனதில்உறுதியாகபதிந்துவிட்டதால்என்னுடையபடங்கள்இவைதொடர்ச்சியாகஇடம்பெற்றுவிடுகின்றன. இந்தகாரணத்தினால்தான்என்னுடையமுதல்படத்தைநான்விதைஎன்றேகுறிப்பிடுகிறேன். பின்னர்இந்தமையக்கருத்தில்மாற்றங்கள், வேறுபாடுகள், மேம்படுத்தல்கள்அல்லதுவிரிவுபடுத்தல்கள்செய்யப்பட்டன. மறுகட்டமைப்புபடத்தில்பின்னர்நான்படத்தில்பயன்படுத்தியஅத்தனைமையங்களும்இடம்பெற்றுள்ளன. ஒருகருத்தைக்கொண்டேபடங்களைத்தான்நான்திரும்பத்திரும்பஎடுத்துவருகிறேன்என்றேஎனக்குத்தோன்றுகிறது. பின்னர்பெர்க்மனின்படங்களைக்கண்டபோதுஇதனைஉண்மையென்றுஉணர்ந்தேன்.
வீட்டில்உங்களதுபெற்றோர்கலைகளின் மீதான காதலை அடையாளம் கண்டு கொண்டவர்களா இருந்தார்களா?
     இல்லை. எனது அப்பா ஒரு கடை வைத்திருப்பார் அம்மா எளிமையாக வீட்டை கவனித்துக்கொள்பவளாக குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க எண்ணியவள் ஆவாள். எப்போது தொடங்கினேன் என்று தெரியவில்லை.  ஆனால் ஏதேன்ஸில் நடந்த சிவில் போரின்போது 1944 ன் இறுதியில் வந்த மாதத்தை சிவப்பு டிசம்பர் என்று அழைப்போம். அப்போதுதான் நான் எழுதத் தொடங்கினேன். கம்யூனிஸ்டுகள் என் தந்தையை தாராளவாதி என்று கூறி கைது செய்தனர். அவரை கைது செய்தது என் பெரியப்பா மகன்தான். எங்களது குடும்பமும் நாடு முழுவதும் தாராளவாதி – கம்யூனிஸ்டுகள் என இரு பிரிவுகளாக இருந்தது போலவே பிரிந்திருந்தது. எனது அப்பா கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெளிவாக என்னால் நினைவுகூர முடியவில்லை. அப்போது நான் கவிதைகளை எழுதத்தொடங்கியிருந்தேன். அக்காலகட்டமே கவிதைகள் முழுவதும் என்னுள் செல்வாக்கு செலுத்தியிருந்த காலகட்டம் என்று கூறலாம். எனது கவிதைகள் குழந்தைத்தனமாக இருந்தாலும் எனது 16 வயதில் அவை இலக்கிய இதழ்களிலும் நாளிதழ்களின் இலக்கிய இணைப்பிதழ்களிலும் வெளிவரத்தொடங்கின. கவிதை எழுதுவது என்பது என்னுடைய  படைப்புரீதியான முதல் செயல்பாடு என்பேன்.
இப்போதும் கவிதைகள் எழுதுவீர்களா?
     ஆம். இப்போதும் எழுதுகிறேன். உங்கள் கேள்விக்கு வருவோம். எனக்கு இசை பிடிக்கும். ஆனால் நேஷ்னல் ஆர்க்கெஸ்ட்ராவின் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளுக்கான பார்வைச்சீட்டை நான் வாங்கியதில்லை. பதிலாக வானொலியில் ஒவ்வொரு ஞாயிறும் காலையில் அவர்களது ஒலிபரப்பினைக் கேட்டுக்கொண்டிருப்பேன். எனவே உங்களது கேள்விக்கான உறுதியான பதில் என்னிடமில்லை. கலாச்சாரம் குறித்த ஆர்வம், சிந்தனை, எங்களது குடும்பத்தில் இருந்ததில்லை. சில காலத்திற்குப் பிறகு எனது தந்தையின் பெட்டியில் அவர் தன் இளமைக்காலத்தில் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை பார்க்க நேர்ந்தது. ஸ்வைக், பால்ஸாக் உள்ளிட்ட பெரும்பாலான எழுத்தாளர்களின் செவ்விலக்கியங்கள் அவை. பொருளாதாரம் தாண்டி எனது தந்தைக்கு இலக்கியம் குறித்த விஷயத்தில் ஆர்வம் இருந்திருக்கிறது என்பதை அறிந்தேன்.
     உங்களிடம் மூன்பு கூறியபடி ஒருநாள் அவர் கைது செய்யப்பட்டு காணாமல் போனார். சில மாதங்களுக்கு அவர் கிரீஸ் நாட்டின் மத்தியப் பகுதியில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டபோது, வீட்டுக்கு நாட்டின் தொலைவில் பாதி தூரத்தை நடந்தே கடந்து வந்தடைந்தார். அப்போது சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருப்போம். அந்த சமயத்தில் அவரை தெருவில் நடந்து வரப் பார்த்தது நினைவில் இருக்கிறது. மெல்ல நடந்து எங்களை வந்தடைந்தார். அவரைப் பார்த்ததும் வீட்டுக்குள் ஓடி அம்மாவை அழைத்தேன். ஏதோ ஒரு சமயத்தில் அவர் வீட்டுக்கு திரும்புவார் என்று நம்பியிருந்தோம். நான் அப்பாவை பார்த்துவிட்டு அழைத்ததும் அம்மாவும் அவரை வரவேற்க வேகமாக தெருவுக்கு ஓடிவந்தாள். உள்ளே சென்றதும் நாங்கள் ஒரு சிறு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. பேசிக்கொண்டே சாப்பிடும் மேசையில் அமைதியாக அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே சூப்பினை குடித்தோம். அனைவரும் கதறி அழும் சூழ்நிலையில் இருந்தாலும் கண்ணீரை மெல்ல கண்களிலேயே அடக்கி கொண்டோம்.  இந்தக் காட்சிதான் மறுகட்டமைப்பு படத்தின் தொடக்க காட்சியாக இடம்பெற்றிருக்கும்.
ஜெர்மன் நாட்டின் ஆக்கிரமிப்பு குறித்து ஏதேனும் தங்களுக்கு நினைவு இருக்கிறதா?
     இதனை முதலிலேயே கூறியிருக்கிறேன். நான் ஒரு போர்க்கால குழந்தை. நான் பிறந்தபோது கிரீசினை ஜெனரல் மெட்டாக்சிஸ் எனும் சர்வாதிகாரி ஆண்டுகொண்டிருந்தார். 1940 ல் இத்தாலியர்கள் கிரீசில் நுழைந்தனர்.  நான் முதலில் கேட்ட ஒலியே போர் தொடங்கியதற்கான முழக்கங்கள்தான். ஏதேன்ஸில் ஜெர்மானியர்களம் நுழைந்த காட்சிதான் நான் முதன் முதலில் கண்ட காட்சி. அதனை நான் சிதெராவிற்கு பயணம் படத்தில் தொடக்க்க காட்சியாக உருவாக்கியிருந்தேன். அவை மட்டுமில்லாமல் போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் ஜெர்மன் வீரரின் தோள்பட்டையைத் தொட்டுவிட்டு வலைப்பின்னல் போலான தெருக்களில் ஓட, அவனை துரத்தியபடி அவ்வீரர் அவன் பின்னாலே ஓடுவார். இப்படி அமைந்த காட்சியை சொல்லலாம். நிஜ வாழ்வில் நிகழும் சம்பவங்களிலிருந்து விடுதலை பெற நாம் நமது நினைவுகளின் ஏரியில் கால் நனைத்தபடியேதான் இருக்கிறோம் என்று உணர்கிறேன். எனது படைப்புகள் அனைத்துமே என் சிறுவயது மற்றும் இளமைக்கால சிறப்பான தருணங்கள் என்னுடைய கனவுகள் நெகிழ்ச்சியான விஷயங்கள் என்றவாறு உருவாக்கப்பட்டவைதான். எதைச் செய்வதற்கும் ஒரு மூலமாக அவை இருக்கின்றன.
முதன்முதலில் உங்களது அரசியல் நிலைப்பாட்டை எப்போது எடுத்தீர்கள்?
     கிரீசில் நான் இருந்த காலம் வரை நான் எந்த ஒரு அரசியல்மய முடிவையும் சார்பையும் எடுக்கவில்லை. பாரீஸ் சென்றபோதுதான் நானே முடிவு செய்து இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்தேன். 50களில் நடந்த அனைத்து மாணவர் விளக்க கூட்டங்களிலும் உதாரணமாக சைப்ரஸிற்கு ஆதரவான நிலைக்கு முன் வந்ததிலும் அதன் பின்னால் அரசியல் நிலைப்பாடு ஏதும் இல்லை. கல்லூரி வளாகத்தில் நிகழும் இடதுசாரி, வலதுசாரி என மாணவர்களின் சண்டைகள் எதிலும் நான் பங்கேற்காது விலகியே இருந்தேன். அதேசமயம்  மேல்நிலைப்பள்ளி படிப்பிற்குப் பிறகு எனக்குள் இருந்த திரைப்படங்கள் தொடர்பான பேரார்வத்தை உணர்ந்தேன். துப்பறியும் தொடர்ச்சியான திரைப்படங்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன். ஹஸ்பன் , போலான்ஸ்கி, ஹாக்ஸ், வால்ஸ் உள்ளிட்டவர்களின் செவ்வியல் தன்மை கொண்ட படங்களை இயல்பாகவே பட்டியலில் முதலில் வைத்திருந்தேன். மைக்கேல் கர்ட்டிஷ் –ன் ஏஞ்சல் வித் டர்ட்டி ஃபேஷஸ் படத்தினை பார்த்தேன். அதில் ஜேம்ஸ் கேக்னியை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்வார்கள். நாற்காலியும் அவரும் சுவற்றில் நிழலாய் தெரிய, ‘நான் சாக விரும்பவில்லை’ என அலறுவார். இப்படத்தினை நான் பார்த்தபோது எனக்கு 9 அல்லது 10 வயது இருக்கும். இதிலிருந்தே துப்பறியும் படங்களின் மீதான என் ஆர்வத்தை நீங்கள் கண்டுகொள்ளலாம். அதைப்போலவே நாவல்கள் மீதும் ஆர்வம் உண்டு.
படங்களின் மீது மட்டும்தான் உங்களுக்கு ஆர்வமா? இலக்கியம், இசை, ஓவியம் மற்ற கலைகளின் மீது ஆர்வம் உள்ளதா?
     இலக்கியம், இசை இரண்டின் மீதும் ஆர்வம் உண்டு. ஓவியம் மீது சற்று ஆர்வம் குறைவு. இலக்கியத்தைப் பொறுத்தளவில் சமகாலத்தில் கிரீக்கில் மொழிபெயர்க்கப்படும் கவிதைகள், நாவல்களை வாசித்துவிடுவேன். இப்போது ப்ரெஞ்ச் மொழியிலும் ஓரளவு வாசிக்க கற்று வருகிறேன்.
அவைகளில் உங்களுக்கு பிடித்தமானவை?
     தஸ்தயேவ்ஸ்க்கி. உடல்நலமில்லாது வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்போது தி பிரதர்ஸ் கரமசோவ் நாவல் படிப்பேன். மேலும் டால்ஸ்டாய் , செகாவ் என ரஷ்ய இலக்கியங்களின் மீது தீவிர ஆர்வம் உள்ளது. இது உண்மையான ஆர்வமாக என்று தெரியவில்லை.ஆனால் இவற்றை வாசிப்பது குறித்த எனது ஆர்வம் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. மேலும கூறலாம். லா சார்ட்ரீயுஸ் டி பர்மே, லே ரூஜ் எட்லேநோயர் நெருக்கமாக தோன்றுகிறார். இதன் பின்னர், சார்த்தர், கம்யூஸ் போன்றவர்களைக் கூறலாம்.
     இவர்களில் இப்போதும் உங்களுக்கு பிடித்தமானவர்களாக இருப்பது?
ஸ்டெந்தால் அப்புறம் தஸ்தயேவ்ஸ்கிதான்.
இசையில்..?
     அனைவரும் எளிதில் கேட்டு ரசிக்க முடிகிற மொஸார்டில் தொடங்கி பாச் மற்றும் விவால்தி என இருவரிடமே இறுதியில் வந்து சேர்கிறேன்.
சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர் நீங்கள். ஆனால் அனைத்தையும் திடீரென ஏன் கைவிட்டுவிட்டீர்கள்?
     உண்மைதான். பட்டம் பெற்ற பிறகுதான் நான் வழக்குரைஞர் ஆக வேண்டாம் என்று முடிவு செய்தேன். சந்தேகங்கள் முடிவடைந்து இம்முடிவை எடுத்தபோது என் முழுக்குடும்பமே அதற்கு எதிராக நின்றது. என்னுடைய மாமா வழக்குரைஞராக சொந்தமாக அலுவலகம் ஒன்றினை நடத்திவந்தார். மேலும் அவருக்கு வாரிசுகளும் இல்லை என அனைத்தும் என் விஷயத்தில் தயாராக இருந்தன. ஒரே விஷயம் இவை அனைத்தையும் மாற்றியது. எனது பதினொரு வயதான சகோதரி அப்போது திடீரென இறந்துபோன சம்பவம்தான் அது. அந்நிகழ்வு வரை எனது குடும்பம் இயல்பான ஒன்றாக இருந்தது. அதன்பிறகு எனது வீட்டில் இருள் சூழ்ந்தது. பல மாதங்களுக்கு என் அம்மா அழுதுகொண்டே இருந்தாள். பின் தனக்குத்தானே முணுமுணுத்துக்கொள்ள தொடங்கிவிட்டாள். இந்நேரத்தில்தான் நான் தொடர்ச்சியாக சினிமா பார்க்கத் தொடங்கினேன். எனது நண்பர்கள் எர்ரோல் ஃப்ளைன், டைரோன் பவர், அவர் கார்ட்னர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்களை அதிகமாக பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் எனது கவனமோ அதனை உருவாக்கிய இயக்குநரின் பெயரைக் கவனித்து படங்களை பின்தொடரத் தொடங்கினேன். இது இயல்பான ஒன்றாக எனக்கு அமைந்தது. பார்த்தது அனைத்துமே அமெரிக்க துப்பறியும் படங்கள்தான். அற்புதமான இசையோடு இவற்றை எலியா கஸன் உருவாக்கியிருந்தார்.  அவரின் படங்களைக் குறித்த விவாதம் கிரீசில் தொடங்கியிருக்கிறது.  பெரும்பாலான மக்கள் அவர் சிறந்த இயக்குநர் என்றாலும்.. அவரின் நம்பிக்கைத் துரோகம் நியாயப்படுத்திவிட முடியாது என்று கருதுகிறார்கள். ஆனால் அவர் இந்த குற்றச்சாட்டுகளைத் தாண்டி நிற்கிறார். ஜூலியஸ் ஸின் போன்ற அவரது நடிப்பினால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இயல்பாகவே அவரை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது. இவையெல்லாம் குறிப்பிட்ட காலத்தில் கஸன் உருவாக்கிய படங்ளகளின் தரத்தினை குறைத்துவிடமுடியாது என்பது உண்மை.
நீங்கள் அப்போது சினிமா பிரஸை பின்தொடர்ந்து  கொண்டு இருந்தீர்கள்?
     பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது கிரீசில் சினிமா குறித்த இதழ் ஒன்று அறிமுகமானது. ரெஸ்னைஸ் மற்றும் கோடார்டு ஆகியோரின் படங்கள் புதிய அலையை அந்த நேரத்தில் கொண்டு வருகின்றன. ப்ரீத்லெஸ் படத்தினை சாதாரண வணிக சினிமாவாக மற்றுமொரு போலிஸ் கதை என்றே அப்போது நினைத்தேன். சினிமாவிற்கான அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகளில் செல்லும் அவரது வழி எனக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
     சரியான அர்த்தத்தில் என்னுடைய நிலைமையைக் கூறவேண்டுமென்றால் பல்கலைக்கழகத்தில் எனது படிப்பின் மீதான ஆர்வத்தை மெல்ல இழந்து சினிமாவின் பக்கம் நெருக்கமாக தொடங்கியிருந்தேன். சினிமா குறித்த பயிற்சியில் சேர விரும்பினாலும் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவனாகவும் பயிற்சி வகுப்பிற்கான சூழல் மனதிற்கு ஒவ்வாததாகஇருந்தது. சினிமா குறித்து வெளியாகியிருந்த அனைத்து நூல்களையும் அப்போதே படித்துவிட்டிருந்தேன். உ.தா: ஜார்ஜஸ் சாட்யூஸ் எழுதிய சினிமா வரலாறு தொகுப்பின் கிரீக் மொழிபெயர்ப்பு உட்பட. அப்போது எனது தந்தை உடல்நலம் கெட அதை காரணமாக சொல்லி பல்கலைகழக படிப்பை விட்டு விலகி ராணுவ சேவையில் சேர்ந்தேன். இரண்டு வருடங்கள் ஆற்றிய பணியில் சுவாரசியம் என்னவென்றால், நாடு முழுவதும் செல்ல கிடைத்த வாய்ப்பும் புதிய வாய்ப்புகளை தேட கிடைத்த தருணமும் ஆகும்.
     ராணுவத்தின் பிரிவொன்றில் உதவியாளராக இருந்த காரணத்தினால் கிரீக் நாட்டின் எல்லை வரைசென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பு நான் பிறந்த நகரமான ஏதேன்ஸ் மட்டுமே எனக்குத் தெரியும். எழுத, படிக்க எனது பயணத்திற்கான திட்டங்களை யோசிக்க எனக்கு நேரம் கிடைத்தது.
சட்டத்தை தவிர வேறு என்ன செய்யப்போகிறோம் என்று முன்னமே முடிவு செய்திருந்தீர்களா?
     என்னைப்பொறுத்தவரையில் நான் படங்களைத்தான் உருவாக்கப் போகிறேன் என்று தெளிவாக இருந்தேன். ராணுவத்திலிருந்து விலகிய பின் நண்பர்களோடு உரையாடும்போது பாரீஸ் சென்ற படிக்க விரும்புவதைக் கூறினேன். ஆனால் என்னிடம் அதற்கான பணம் இல்லை. நண்பர்கள் அனைவரும் சிறிய அளவில் சேர்த்து உதவிய பணம் ரயிலில் பயணிக்க உதவியது.  கையில் ஒரு பென்னி கூட இல்லாத நிலையில் ரயிலில் சந்தித்த ஒருவர், அவரின் மாமா வீட்டில் ஒரு நாள் இரவு சந்திக்க அனுமதி அளித்தார். அடுத்தநாள் எனது ஏதேன்ஸில் உள்ள எனது ப்ரெஞ்ச் ஆசிரியர் கொடுத்த முகவரியைத் தேடிச்சென்றேன்.  சுரங்க ரயில் நிலையத்திலிருந்து  பத்து கி.மீ. தள்ளி அமைந்திருந்தது அந்த வீடு. ஆசிரியர் ஏதேன்ஸ் வருவதற்கு முன்னர் வசித்து வந்த வீடாகும். அங்கு வந்து சேர்ந்ததும் அடுத்த வேலையாக ப்ரெஞ்ச் தூதரகம் சென்று எனது ப்ரெஞ்ச் மொழியினை மேம்படுத்திக்கொள்ள முயன்றேன். பிறகு மற்ற மாணவர்களைப் போலவே வேலை தேடத்தொடங்கினேன்.  உணவு விடுதி ஒன்றில் இரவு நேர காவலாளியாகவும், க்ரீக் கிளப் ஒன்றில் பாடல் பாடுபவனாகவும், தரை விரிப்புகளை விற்பவனாகவும் வேலை செய்தேன்.  க்ரீக் நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் எனது கவிதைகளைப் படித்துவிட்டு சிட்டே யுனிவர்சிட்டியில் இலக்கியம் கற்கவும், வேலை செய்வதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உண்மையில் அதிகாரப்பூர்வமாக நான் இலக்கியம் கற்றாலும், திரைப்படம் குறித்து கற்கவேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது.
உலகப்புகழ்பெற்ற ஐடிஹெச்இசி(Institute de hautes etudes cinematogrephiques) கல்வி மையத்தில் படிக்கச் சென்றீர்கள் ஆனால் பட்டம் பெறவில்லையே?
     உண்மைதான். முதலாண்டு இறுதியில் அவர்கள் நான் ஒழுக்கம் போதாமையாக இருக்கிறேன் என்று வெளியேற்றிவிட்டார்கள்.
சற்று விளக்கமாக கூறுங்கள்.
ஐடிஹெச்இசியில்நான்படிக்கஒப்புக்கொண்டதன்காரணம்இயற்பியல்மற்றும்கணிதம்எனஇரண்டுபாடங்களிலும்எனதுமதிப்பெண்கள்குறைவுஎன்பதால்தான். மேலும்வரலாறு, கலை, இலக்கியம்உள்ளிட்டவற்றில்அந்தக்கல்விமையம்பெரும்புகழ்பெற்றிருந்தது.
எங்களதுமுதல்குறும்படமுயற்சிகளின்போதுநான்எடுத்தகுறும்படம்மிகச்சிறப்பாகஇருந்ததுஎன்றுமுழுவகுப்புமேபாராட்டியது. ‘புதியரெஸ்னைஸ்என்பதுபோலானவாழ்த்துகள்என்தலையில்ஏறிக்கொண்டன. இதனால்பட்டம்பெற்றதிரைப்படஇயக்குநர்போலநான்நடந்துகொள்ளத்தொடங்கினேன். எனதுநடத்தைஆசிரியர்களுக்குபிடித்தமானதாகஇல்லை. எங்களதுபணியில்கடைபிடிக்கவேண்டியகட்டாயமானவிதிமுறைகளைநான்மிகையளவானதாககருதினேன். குறிப்பிட்டகருத்தினைஒட்டிபடப்பிடிப்பிற்கானதிரைக்கதைஎழுதச்சொல்லியிருந்தார்கள். அதனைஒப்படைக்கவேண்டியநாளன்றுதாமதமாகவகுப்பிற்குசென்றேன். தாமதத்திற்குஆசிரியரிடம்மன்னிப்புகேட்டுவிட்டு, நண்பர்களிடம்சிகரெட்கேட்டேன். அனைவரும்ஒருகணம்திகைத்துப்போய்விட்டார்கள். ஏனெனில்வகுப்பறையில்சிகரெட்புகைப்பதுதடைசெய்யப்பட்டிருந்தது. தயக்கத்துடன்நண்பரொருவர்நீட்டியசிகரெட்டினைபற்றவைத்துக்கொண்டுசாக்பீஸைக்கையில்எடுத்துக்கொண்டுகரும்பலகையில்வட்டம்ஒன்றைவரைந்தேன்ஆசிரியர்என்னைகடுமையாகஒருமுறைஉற்றுப்பார்த்துவிட்டுஎன்னஇது?என்றார். ‘படப்பிடிப்பிற்கானதிட்டம்என்றேன். ‘இதற்குஎன்னஅர்த்தம்என்றுகேட்டவருக்கு, ‘360 டிகிரிஅகல்பரப்புக்காட்சிஎன்றுவிளக்கினேன்என்னைகடும்சீற்றத்தோடுபார்த்தஅவர், ‘நீஇங்குகற்றுக்கொள்ளத்தான்வந்திருக்கிறாய்என்றுநினைத்தேன்என்றார். ‘அப்படியல்ல. நான்இங்குவந்ததுபரிசோதனைகளைசெய்துபார்க்கத்தான். அவற்றைஇங்குசெய்துபார்க்காவிட்டால்நீங்கள்அதனைவேறுஎங்குசென்றுஅதைசெய்யமுடியும்?என்றேன். ‘அப்படியென்றால்உன்புத்திசாலித்தனத்தைகிரீசில்சென்றுவிற்றுக்கொள்ளலாம்என்றுகடும்கோபத்துடன்கூறினார். பிறகுபள்ளிஇயக்குநரிடம்சென்றஆசிரியர்இங்குநான்அல்லதுஅவன்தான்இருக்கமுடியும்என்றுபயமுறுத்தலைசெய்தார்பிறகுஎனதுஇரண்டாவதுகுறும்படமானதுபள்ளியில்திரையிடப்பட்டபோதுமுழுவகுப்பேஎழுந்துநின்றுஆர்ப்பரித்தது. ஆனால்ஆசிரியர்பிடிவாதமாகஅதைமறுத்தார். ‘நீங்கள்என்னைவெறுப்புகொள்ளவைக்கவேஇப்படிகைதட்டிதகுதியில்லாதஇப்படத்தைபாராட்டுகிறீர்கள்என்றுதெரியும்என்றார்இதன்பின்னர்பள்ளிஇயக்குநர்என்னைஅழைத்துநீஉன்னுடையபடங்களைவேகமாகஉருவாக்கிவிடநினைக்கிறாய். இந்தமுறையில்நீஎங்களோடுஇங்குஇருக்கமுடியாது. நான்உனக்குகூறும்அறிவுரைஇதுதான். முழுநீளத்திரைப்படத்தின்மூன்குறும்படங்களைஇயக்கமுயற்சிசெய்என்றுகூறினார். நான்அங்கிருந்துவெளியேறியபோதுஜார்ஜஸ்சாட்யூல்போன்றஎன்னைசிறந்தமாணவனாககருதியவர்கள்மேலும்என்வகுப்புத்தோழர்கள்இணைந்துநிர்வாகத்திற்குஎதிராகபோராட்டங்களைநடத்தினார்கள். ஆனால்அதற்குபலனேதுமிருக்கவில்லை.
எனதுபடிப்பைம்யூசேடிஎல்ஹோம்மேமையத்தில்ஆவணப்படங்களைஎடுக்ககற்பிக்கும்ஆசிரியரானஜீன்ரூச்சின்கீழ்படித்துக்கொண்டிருந்தேன். இங்குசிலஆவணப்படங்களைஎடுத்திருக்கிறேன். கேமராவினைகையாள்வதுஎப்படி, அக்கருவியோடுபடப்பிடிப்பின்போதுஇயங்குவது, அதனைஎப்படிதொடக்கிஅணைப்பது, முழங்கால்களைவளைத்தபடிஎப்படிநிற்கவேண்டும்என்பதையெல்லாம்முன்உள்ளகண்ணாடிமுன்னால்செய்யச்சொல்லிகவனிக்கவைத்தார். அதன்மூலம்நாமேநம்தவறுகளைசரிசெய்துகொள்ளமுடியும். உண்மையில்செய்தபயிற்சியைவிடஇதுசுவாரசியமாகஇருந்தது. சொந்தமாகநானேபடமெடுக்கதயாரானேன். எனதுஐடிஹெச்இசிகல்விமையநண்பர்களைஅணுகிதொழில்நுட்ப்பிரிவில்சிறப்பானவர்களைஉதவிகேட்டதோடு, படச்சுருள்வாங்குவதற்காகஇன்னொருநண்பரைஅணுகினேன். இந்தமுறையில்உருவானபடம்தான்பிளாக்அண்ட்வொயிட்’.  கருப்புவெள்ளைப்படமானஇது 16 எம்எம்இல்எடுக்கப்பட்டது. பாரீஸ்முழுவதும்ஒருவரைத்தேடிபயணிக்கும்கதையினைக்கொண்டது.
அப்போதுஅதுஒருதுப்பறியும்கதைதானே?
            உண்மைதான். என்னகாரணத்திற்காகஒருகதாபாத்திரம்ஓடுகிறது () யார்அவரைதுரத்துகிறார்கள்என்பதுதெளிவாககூறப்படுவதில்லை. ஒருமனிதன்தனியாகஇருக்கிறான். குறிப்பிட்டஒருவரால் () காரணம்ஒன்றால்அச்சுறுத்தப்படுகிறார். ஆனால்அதுஎன்னவென்பதைநாம்அறிவதில்லை. பாரீஸ்முழுக்கபடப்பிடிப்புநடத்தினோம். எடுத்தவரைகாட்சிகளைதயாரிப்பதற்கானபணம்எங்களிடம்இல்லைஎன்பதைபின்னர்தான்உணர்ந்தோம். பதிவானபடச்சுருளில்என்னஇருந்ததுஎன்பதைநான்அறியவேயில்லை. பலஆண்டுகளுக்குபிறகுஎனதுஇருநண்பர்களைமீண்டும்சந்தித்தேன்நான்எடுத்தபடத்திற்குஒளிப்பதிவாளராகஇருந்தமைக்கேல்ஆண்ட்ரியுஇடைப்பட்டகாலத்தில்திரைப்படஇயக்குநராகமாறிவிட்டிருந்தான். என்னுடையஉதவியாளராகஇருந்துபடச்சுருள்உள்ளிட்டவற்றைவாங்கநிதியளித்தவன்வெளிநாட்டுபடங்களைத்தழுவிஅவற்றைபிரெஞ்ச்சில்உருவாக்கும்பணிகளைச்செய்துவந்தான்அப்போதுதான்யுலிசஸ்கேஸ்படத்தின்வேலைகள்நிறைவுபெற்றிருந்தன. பிளாக்அண்ட்வொயிட்படத்தினைஆண்ட்ரியுதன்வீட்டில்வைத்துதிரையிடும்பிரதியாகதயார்செய்வதாககூறியிருந்தான். தன்வீட்டில்உள்ளகார்நிறுத்துமிடத்தில்வைத்துள்ளசிறியளவுபணத்தின்மூலம்அதைமீட்டிடமுடியும்என்றுகூறியிருந்தான். இதுநூற்றாண்டின்தொடக்கத்தில்படச்சுருளைதேடிஅலையும்யுலிசஸ்கேஸ்படத்தின்கதைபோலவேஇருந்தது. எனதுபடத்திற்கானதொடக்கம்இந்தமுறையிலேயேகிடைத்தது.
நீளமானகாட்சிகளுக்கானகேமராநகர்வுகள்எனமுதலில்தொடங்கும்போதுஉங்களுக்கென்றுதனிப்பட்டதிரைமொழிஒன்றினைக்கொண்டிருந்தீர்கள்என்பதைஅறியமுடிகிறது. இதுசரியானதுதான்என்பதைஎப்போதுஎப்படிஉணர்ந்தீர்கள்?
            எனக்குஉண்மையில்அவைபற்றித்தெரியாது. ப்ரெஞ்ச்சினிமாதீக்கில்வேலைசெய்ததுபணத்திற்காகமட்டுமல்ல; அங்குதிரையிடப்படும்படங்களைக்காணவும்தான். அநேகமாகஅந்தபணியிலிருந்துகாலத்தில்திரையிடப்பட்டஅனைத்துதிரைப்படங்களையும்நான்பார்த்திருக்கிறேன்என்றேகூறுவேன். அங்குகொடுக்கப்பட்டிருந்தபடங்கள்மட்டுமல்லாமல்புதியபடங்களின்முன்னோட்டகாட்சிகளையும்கண்டிருக்கிறேன். குறிப்பாககூறவேண்டுமெனில்சினிமாவின்ஐவரலாறைமுழுவதுமாககாணமுடிந்தது. இதில்முன்னுரிமைஎன்பதுஇயல்பாகநிகழ்ந்தது. இயக்குநரானஐன்ஸ்டீன்பக்கம்செல்லவில்லை; ஆனால்முர்னாவ்ன்திலாஸ்ட்லாஃப்அல்லதுஆர்சன்வெல்ஸ்யின்சன்ரைசில்அர்கேமராவைப்பயன்படுத்தும்விதம்அல்லதுரெனோர்தன்கேமராவைஆழமானபொருளைக்காணும்விதமாகபயன்படுத்துவது, சமமாகபயணிக்கும்கதைகள்மற்றும்இயக்குநர்ட்ரேயரின்ஆர்டெட்இதோடுமிசோடுசியின்உகேட்சுமோனோகட்டாரிஎனஇவற்றைக்குறிப்பிடலாம். நான்பலபடங்களைமொழிக்குறிப்புகள்இல்லாமல்பிம்பங்களாகவேகண்டிருக்கிறேன். அன்டோனியோனிஇன்காட்சிகள்ஆழமாகமூச்சினைஇழுத்துவிட்டுவிட்டுபார்க்கவேண்டியநீளமானகாட்சிகள்கொண்டவை. மற்றபடங்களைகாணுவதைவிடஇவைஎனக்குஅதிகபொருள்கொண்டவையாகதெரிந்தது. நேரத்தைசிறுசிறுதுண்டுகளாகவெட்டஅதனைஇறுதிக்காட்சியில்எப்படிநகர்த்துவதுஎன்றுசெல்லும்படத்தில்காணும்பார்வையில்தொடக்கத்திலும்இறுதியிலும்தான்மூச்சினைவெளியேற்றும்படிஅவர்களைகவரும்விதமாகஇருக்கும்படங்கள்அவை. தர்க்கரீதியானவிளக்கமாகஇவைபின்னர்நான்புரிந்துகொண்டாலும்நான்செயல்பட்டுக்கொண்டிருந்ததும்அம்முறையில்தான். நான்முதலில்எடுத்தவையேதொடர்ச்சியானகாட்சிகள்தான்.
        தொடர்ந்துசிலஇயக்குநர்கள்உதாரணத்திற்குஆர்சென்வெல்ஸ்எடுத்துக்கொள்வோம். அதிகளவிலானமான்டேஜ்காட்சிகளைபயன்படுத்திஉள்ளாரெனகுறிப்பிடுகிறீர்கள்?
            ஆமாம். ஆனால்எப்போதும்அல்ல. திமேக்னிபிசியன்ட்ஆம்பர்சன்ஸ்படம்எனக்குபிடித்திருந்தது. டச்ஆப்ஈவில்படத்தில்தொடக்ககாட்சியைக்கூறலாம். குப்ரிக்போன்றவர்களின்படங்களைசாதாரணபார்வையாளர்களாகபார்ப்பதுவேறு. இயக்குநராகபார்க்கும்அதில்எதிர்பார்க்கின்றமுன்னுரிமைகொடுக்கும்விஷயங்கள்வேறுபட்டவையாகஇருக்கின்றன.
திரைப்படம்எடுக்கும்முறையில்மிக்லோஸ்ஜான்க்ஸோவின்பாணியோடுபலரும்இணைந்திருக்கிறார்களே?
            ஆமாம். ஆனால்அவர்பின்னாளில்லதான்வந்தார். அவர்தொடர்காட்சிமுறையைவேறுமுறையில்பயன்படுத்தியிருப்பார். அவரின்படத்தைமுதலில்சினிமாதீக்கில்தான்பார்த்தேன். பின்னர்பாரீசைவிட்டுவெளியேறிவிட்டேன். ஜான்க்கோஎனக்குப்பிடித்தஇயக்குநர். தொடர்ச்சியானகாட்சிமுறையைபயன்படுத்துவதுஎன்னிலிருந்துமுற்றிலும்மாறுபட்டது.
ப்ரெச்டன்தொடர்பின்மைகுறித்துமுன்புநீங்கள்பேசியுள்ளீர்கள்?
            ஆமாம். குறிப்பிட்டகாலத்தில்அனைவரின்மூலமாக, ஆதாரமாகஅவர்இருந்தார். அரசியல்சினிமாஎன்பதைஅரசியல்ரீதியாகவேஉருவாக்கவேண்டும்தவிரவெறும்அரசியல்என்றபெயரில்அல்லஎன்றுகூறுவார். இந்தமுறையில்படம்ராணுவத்தின்அறிக்கையைவிடசிறிதுமேம்பட்டதாகஇருக்கும். நமதுகருத்தைக்கூறும்அதேவேளையில்குறிப்பிட்டகோணத்தில்அதனைவிமர்சனம்செய்யவும்மறந்துவிடக்கூடாது. இதுமுக்கியமானதாகஇருந்தாலும்எனதுமுதல்படத்தில்இதனைக்காணமுடியாது. இப்படம் தொடங்குவது கதையின் முடிவாகவும், படத்தின் இறுதியில் கதை தொடங்குவது போலவும் அமைக்கப்பட்டு இருக்கும். படத்தில் காவல்துறை கொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்க வழக்கை மீண்டும் கட்டமைக்கிறது. ஆனால் ஊடகங்கள் அதனை தங்களின் விற்பனைக்கான விஷயமாக மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியாக திரைப்பட இயக்குநர் (ஏஞ்சலோ பவுலோஸ் நடித்திருப்பார்) அக்கொலையின் காரணத்தைக் கூறுவார். அதே நேரம் பார்வையாளர்களுக்கு குடியான விவசாயியாக அவர் தெரிய மாட்டார். அவருக்கும் அவர் கூறும் கதாபாத்திரங்களுக்குமிடையே இணைக்கவே முடியாத இடைவெளி இருக்கிறது. நேரத்தினூடே அழுத்தமாக இதனை செய்யவேண்டியதிருக்கிறது. மூன்று கோணங்களில் மூன்று பேரும் கொலையாளி யார் என்று தேடுகிற கதையில் மூன்றுபேரும் ஓர் அறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால் அவ்வறைக்கான சாவி நம்மிடம் இல்லை. தொடக்கத்திலேயே நாம் அறிந்து விடுகிறோம் யார் கொலையாளி என்பதை படம் காட்டுவதில்லை என. கதவிற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று பார்வையாளர்கள் அறிய அனுமதிக்கப்படுவதில்லை. மனதின் நிலை, நாட்டின் உற்சாகம், எழுச்சியை வெளிப்படுத்துகிற தருணத்தில் மறைமுகமாக அரசியல் படமாகவும் உள்ளது.
     36 நாட்களில் படமும் இந்த திசையில் பயணிக்கிறது. இதில் நாயகன் கிடையாது. மைய கதாபாத்திரம் சிறையில் அடைக்கப்பட்டு அதிகமாக காணப்படக்கூடியவராக இருக்கமாட்டார். கதாபாத்திரம் சிறையில் இருப்பதால் கதையானது சிறையை சுற்றியே நிகழும். அனைத்து உரையாடல்களும் தெளிவில்லாததாக முணுமுணுக்கும்படியாக அமைந்திருக்கும். ப்ரெச்டியனின் அரசியல் படம் உருவாக்கும் கொள்கையை பின்பற்றியே தணிக்கை அமைப்பைத் தாண்டி ராணுவ சர்வாதிகாரம் குறித்த அரசியல் படத்தை எடுக்க முடிந்தது. இல்லையெனில் இது சாத்தியமான ஒன்றல்ல. அழகியலான கருத்து, பல விஷயங்களையும் பேசுகிற வட்டமான முறை, மர்மமான உத்திகள் என உருவாக்கினாலும் எளிதாக அனைவரும் புரிந்துகொள்ளும்படியாக படம் அமைந்தது. பயணிக்கும் வீரர்கள் படத்தோடு என்னுடைய ப்ரெச்டியன் காலம் முடிந்துவிட்டது.
நீங்கள் பாரீசிலிருந்து கிரீசுக்குத் திரும்பியது எதனால்? ப்ரான்சில் படம் எடுக்கவேண்டாம் என்று தீர்மானித்திருந்தீர்களா?
     ஜீன் ரூச் படிப்பு முடிவடைந்தபின் என்னுடைய முதல் முடிவடையாத படத்தோடு ஏதேன்ஸில் என் குடும்பத்தைப் பார்க்க வந்துவிட்டேன். ஆனால், ஆஸ்திரியபெண் ஒருத்தியோடு காதல் ஏற்பட்டது அந்த சமயத்தில்தான். அவள் ஜூரிக் பகுதியில் வசித்து வந்தவளான வசப்பட்ட ஒரு தருணத்தில் தூண்டுதலான விசையில் திருமணம் செய்வதாக முடிவு செய்துகொண்டோம். ஏதேன்ஸில் குறிப்பிட்ட நாள் சந்திப்பதாக ஏற்பாடு செய்து கொண்டோம். அவள் நான் இருக்கும் நேரத்தில் வருவாளா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது. நான் சில நண்பர்கள், ஓவியர்களோடு இணைந்து மிகோனாவிற்கு சில நாட்கள் சென்றுவிட்டோம். இதனை நம்புவீர்களோ இல்லையோ அன்று அப்பெண்ணுடன் செய்துகொண்ட சத்தியம், திருமண ஏற்பாடுகள் என அனைத்தையுமே மறந்துவிட்டேன். சிலநாட்கள் கழித்தே அவளும் அந்நாளில் அங்கு வரவில்லை என்று தெரிந்துகொண்டேன்.  திருமணம் செய்வதற்கான அபாயம் என்னை நோக்கி வந்தபோதும் தப்பித்துக்கொண்டது இப்படித்தான்.  இப்போதும் எனக்கு குடும்பம் உருவாகிவிட்டது என்றாலும் இன்னும் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.
     நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. மீதி சில வேளைகளும் பாரீசில் செய்யவேண்டி இருந்தது. படங்களினை உருவாக்கவும், எனது வாழ்க்கையினை அதை நோக்கியதாகவும் மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் இருந்தன. பல படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்து வந்ததால் உதவி இயக்குநர் பணிவாய்ப்பும் எனக்குத் தரப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால் நான் ஏதேன்ஸ் திரும்ப குடும்ப விஷயங்கள்தான் காரணம். நாட்டினை தளபதி முன்னமே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார். அதை எதிர்த்து பல்கலைக்கழகமே பெரும் கொந்தளிப்பாக இருந்தது. விமானநிலையத்திலிருந்து காரில் எனது வீடு நோக்கிச் செல்லும்போது, நகரம் முழுவதுமே கடும்போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்று போயிருந்தது.  காரிலிருந்து இறங்கி நடந்து சென்றவன் விபத்தாக மாணவர்களின் பொது விளக்க கூட்டத்திற்குள் சென்றுவிட்டேன். அங்கு கூட்டத்தை கலைக்க வந்த போலீசார் ஆவேசமாக இடது,வலது என்று என உள்ளே புகுந்த அடித்ததில் கீழே விழுந்துவிட்டேன். அவர்களின் வன்முறைத்தாக்குதலில் எனது மூக்குக்கண்ணாடி சுக்குநூறானது. அடித்த அடியில் ரத்தம் கொட்டி உடை முழுவதும் ரத்தக்கறையோடு குழப்பமான அதிர்ச்சியான மனநிலையுடன் வீட்டுக்கு சென்றேன். அந்நாளின் மாலையில் என்னுடைய நண்பரான திரைப்பட இயக்குநர் டோனியா மார்கெட்டகி என்னை அழைத்தார். ஐடிஹெச்இசியில் படித்து பட்டம் பெற்றவரான அவர் இடதுசாரி சினிமா பத்திரிகையான Demokratiki allaghi (ஜனநாயக மாற்றம்) இல் பணிபுரிந்து வந்தார். எனது எதிர்காலத்திட்டம் என்ன என்று கேட்ட அவர்,  தொடர்ந்து ஏதேன்ஸில் இருந்தால் திரைப்பட விமர்சகராக பத்திரிகையில் பணியாற்ற சம்மதமாக என்று கேட்டார்.நான் அப்போதே ஆம் என்று சொல்லிவிட்டேன்.  நான் எடுத்த முடிவு எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எனது நாட்டில் நிகழ்ந்து வருவது என்ன என்பதை அறிய நான் அங்கேயே தங்க முடிவு செய்தேன்.
     பாரீசில்தான் எனது வாழ்க்கை அமையப்போகிறது என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். கிரீசை மறந்தே விட்டிருந்தேன் எனலாம். நான் இங்கிருந்து போகப்போவதில்லை. 1964 வரை நாளிதழில் பணிபுரிந்து வந்தேன். ராணுவப்புரட்சி ஏற்பட்ட பின்பு தளபதி ராணுவத்தினரை விட்டு எங்கள் அலுவலகத்தை இடித்து தள்ளிவிட்டு அனைவரையும் கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டார். அதிர்ஷ்டவசமாக அப்போது நான் அங்கே இல்லை. அப்போது இசையமைப்பாளர் வாஞ்செலிஸ் (அப்ரோடைட் ன் குழந்தை மற்றும் சாரியட்ஸ் ஆப் ஃபயர் படத்திற்கு இசையமைத்து புகழ்பெற்றவர்) அவரும் அவரது நண்பர்களும் இணைந்து இசை நிகழ்ச்சிகள் செய்த குழு பார்மின்க்ஸ் என்றழைக்கப்பட்டது.  இப்பெயர் ஒரு பழமையான துளையிசைக்கருவியாகும். இவர்களின் இசையினால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர் ஒருவர் இவர்களை அழைத்து நிகழ்ச்சி ஒன்றினை நடத்த திட்டமிட்டார். ஆனால் அதற்கு முன்பு இந்த இசைக்குழு குறித்த படம் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கான சந்தை ஒன்றை அமெரிக்காவில் உருவாக்க அவர் முயற்சித்தார்.  கிரீசில் இக்குழு பெரும் புகழ் பெற்றவர்களாய் இருப்பதால் கிரீக் தயாரிப்பாளர்கள் இத்திட்டத்தில் பங்குபெற்றதோடு இசைக்குழு குறித்து விளம்பரப்படம் ஒன்றை இயக்கித்தர என்னிடம் அணுகினர். என்னுடைய அனுபவத்திற்காக அதனை ஒப்புக்கொண்டேன். துப்பறியும் கதை ஒன்றினை எழுதி அதில் முடிந்தளவு தேவைக்கு சற்று அதிகமாகவே இசைப்பாடல்கள் வருமாறு உருவாக்கினேன்.  நான் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது அமெரிக்கத் தயாரிப்பாளருக்கும், கிரீக் தயாரிப்பாளர்களுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டுவிட உடனே அவர் தயாரிப்பில் இருந்து விலகிக்கொண்டுவிட்டார். இதனால் இசைப்பயணம் செய்யவிருந்த குழுவுக்கு கடும் ஏமாற்றமானது. கிரீக் தயாரிப்பாளர் படம் குறித்து ஆர்வமுடன் இருந்தாலும் நான் எண்ணியதை விட வணிகரீதியான படமாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர்களுக்கு நான் மறுப்பு கூறி வெளியேறிவிடலாம் என்று எண்ணியபோது என் நண்பர்கள் நீ நீக்கப்படும்வரை வேலை செய்யலாமே என்று கூறினார்கள். தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படி எடுத்ததில் ஒரு காட்சியை  நாற்பது முறை திரும்பத் திரும்ப எடுக்கவேண்டியிருந்தது. படம் முடிந்தவுடன் இருவரும் வெவ்வேறு வழிகளில் பயணித்தோம். அந்த தயாரிப்பாளர் எனக்களித்த சம்பளத்தினை கொண்டுதான் பின்னர் நான் எனது முதல் குறும்படம் ஒன்றினை எடுத்தேன்.
கிரீக் இயற்கைக்காட்சிகள் மீது உங்கள் அணுகுமுறை கண்டே ஏதேன்ஸ் திரும்பியது விழிப்புணர்வோடு எடுத்த முடிவா என்று கேட்டேன். இயற்கைக்காட்சி என்பது மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக உங்கள் படங்களில் அமைந்துள்ளது. அவை பற்றிக் குறிப்பிடுவது  பேசுவது என்பதில் மிகவும் தாரளமாக உள்ள நீங்கள், நடைமுறையில் கிரீக் நிலப்பரப்பில் உருவாகாத படங்களை உருவாக்க முடியுமா? அது போன்று உருவாக்க முயன்றுள்ளீர்களா?
     எப்போதும் அப்படி முயற்சித்ததில்லை. அப்படி ஒரு எண்ணம்  எனக்கு தோன்றியதில்லை.. எனது படத்தின் சில காட்சிகளை மற்ற பால்கன் நாடுகளில் எடுத்திருக்கிறேன். ‘மூடுபனிநிலம் படத்தின் இறுதிக்காட்சி இத்தாலிய மலைகளில் எடுக்கப்பட்டதாகும். ப்ரான்ஸ் (அ) இத்தாலியில் படப்பிடிப்பு நடத்த பலர் முன்பு என்னை அணுகியிருந்தாலும் எனது நாட்டில் படப்பிடிப்பு வைத்துக்கொள்ளத்தான் நான் விரும்புகிறேன். எந்த நிலப்பரப்பினையும் விட மிக நெருக்கமாக உள்ளது எனது நாடு மட்டுமே. கடினமான வேலை என்பது போல சில இயக்குநர்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு செய்ய முயற்சிக்கிறார்கள். அன்டோனியோனியும், எனது நண்பருமான விம் வெண்டர்ஸ் வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்தி வெற்றி பெறவில்லை. விம் வெண்டர்ஸ் எப்போதும்போல அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்திவருகிறார். ஆனால் அவரது படங்கள் ஜெர்மனியில் எடுக்கப்படவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். பெலினி மற்றும் பெர்க்மனின் படங்களில் (அரிதான விதிவிலக்குகள் தவிர்த்து) மக்கள் அவர்களை கொண்டாடிய படங்கள் அனைத்துமே அவர்களது நாட்டிலே எல்லையைத் தாண்டாமல் எடுத்த படங்கள்தான் என்பது தற்செயலான ஒன்றல்ல. ரெனேரின் அமெரிக்கப்படங்கள் சிறந்தவை என்று யாரும் நிச்சயம் நம்பிக்கையோடு கூறப்போவதில்லை.
உங்களது தாய்நாட்டில் சிலசமயங்கள் மிகவும் சிக்கலானவராக அறியப்படுகிறீர்களே?
     உண்மைதான். சில சமயங்களில் சிக்கலானவனாக இருப்பது உண்மைதான். ஆனால் தனது குடும்பம் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது என்ற உணர்வு தோன்றாதவரை ஒருவர் தன் குடும்பத்தில் சிக்கலாக குழப்பமாக மாறுவதில்லை. கிரீக் என்பதற்காக அதன் காரணத்தை குறிப்பிடாமலே எனது குடும்பத்தை நான் விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளேன்.
     சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள், கிரீக் இயக்குநர்களில் பலர் உங்களை எதிரியாக கருதுவதாகவும் உங்களது நிழலைக்கூட அவர்கள் இயல்பானதாக கருதவில்லை என்றும் கூறியிருந்தீர்கள். இப்போது நிலைமை மாறியிருக்கிறதா?
     எனக்கும் எனது நாட்டிற்கும் நேசம் – வெறுப்பு என்பது போலான உறவு உள்ளது. சில சமயங்களில் நான் குழப்பமான ஒருவராக மற்ற எனது நாட்டு சக இயக்குநர்களுக்கு வழியை அடைத்துக்கொள்பவராக, மற்றவர்களை எனது ஆளுமையினால் சிறுத்துப்போகச்செய்பவராக, என் ஆளுமையின் வெளிப்பாடு அவர்களை மூச்சுதிணறச் செய்து மரணத்தில் தள்ளுவதாக அவர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக க்ரீக் சினிமா என்பதன் அடையாளமாக நான் இருப்பதால் அது உண்மையாகக் கூட இருக்கலாம். பல்லாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக இயல்பாகவே ஊறி உருவாகிய கசப்புணர்வு அது. திரைப்பட இயக்குநர்களுக்கு மட்டுமல்ல, அதன் விமர்சகர்களுக்கு கூட அந்தக் கசப்பு உள்ளது. இதனை இங்கு மட்டுமல்லாமல் சிறிய நாடுகளிலும் கூட காண முடிகிறது. ‘பயணிக்கும் வீரர்கள் படம் முடிவடைந்த பின் டென்மார்க் சென்றிருந்தபோது அங்கு என் படத்தை விநியோகம் செய்பவர் நான் விரும்பும் டேனிஷ் படங்களை காண ஏற்பாடு செய்வதாகக் கூறினார். ‘ஆர்டெட் படத்தினை மீண்டும் பார்க்கவிரும்புவதாக கூறினேன்.திகைத்துப்போன அவர், ‘என்ன திரும்பவும் பழமையான ட்ரேயர் படமா?’’ என்றார். இதே பாவனைதான் ஸ்வீடனில் பெர்க்மன் படங்கள் குறித்தும் கிடைக்கும். வெகுகாலமாக அவரது படங்கள் வெளிநாட்டினர் காணவே உருவாக்கப்படுகிறது என்ற மனோநிலை அங்கு இருந்தது. ஜெர்மனி இயக்குநர்களை இந்த விஷயத்தில் மறக்கவே முடியாது. உ.தா: வெண்டர்ஸ் இடது ஜெர்மனி இந்து முறையில்தான் இருந்தது. ப்ரெஞ்ச் தேசம் மட்டுமே இந்த முறையில் தேசிய சொத்தாக தனது நாட்டு இயக்குநர்களை பாவிக்கும் ஒரே நாடு என்பேன்.
முன்பு நீங்கள் பேசும்போது இலக்கியப்படைப்புகளை தழுவி படம் இயக்குவதாக கூறியிருந்தீர்கள். ஆனால் இன்றுவரை தாங்கள் அப்படி ஒரு படத்தினை உருவாக்கவில்லை. உங்களுடைய அனைத்து கதைகளுமே உங்களது சுய வாழ்க்கை சார்ந்தே அமைந்துள்ளதே?
     பலமுறை இலக்கியப்படைப்புகளை தழுவி கதையினை உருவாக்கும்போதும் அவரை நடுவில் தொடரமுடியாதபடி நின்றுவிடுகின்றன. நீங்கள் விரும்பும் ஒரு கலை, அதன் தன்மை கெடாமல் தரம் குறையாமல் தழுவி படம் உருவாக்குவது என்பது மிகவும் சிக்கலான செயல்முறையாகும். மிகச்சிறந்த நாவலுக்கான வெற்றிகரமான தழுவல் ஒன்றினை என்னால் சிந்திக்கவே முடியவில்லை. சிறந்த நாவல்களை திரைப்படமாக உருவாக்கும்போது அவை திகில் படங்களாக (அ) இரண்டாம் தர இலக்கியங்களாக மாறிவிடுகின்றன. ஆர்சென் வெல்ஸ் ன் சிறந்த நாவல்கள்  சாதாரணக் குற்றக்கதைகளாகவே இருப்பவை. ஆனால் அக்கதை திரைப்படமாக மாறும்போது ‘டச் ஆப் ஈவில்  என சிறந்த படமாக உருவாகியுள்ளது. இந்த முறையில் நிறைய படங்களை எடுத்துக்காட்டுகளை காண முடியும். உ.தா: கோடார்டின் படங்களை எடுத்துக்கொள்ளலாம். மால்ராக்ஸ் ன் ஹியூமன் கண்டிஷன் நாவல் எனக்கு பிடித்திருந்தாலும் அதனை ஒரு குற்றக்கதையாக உருவாக்க விரும்பவில்லை. இதனையே நான் திரையில் உருவாக்கும்போது அந்த மாறுதலில் ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றுகிறது.
முன்பு உங்களுடைய ஒவ்வொரு படமும் அதற்கு முந்தைய படத்தின் தொடர்ச்சி என்று கூறியிருந்தீர்கள் – இப்போதும் அதனை சரியென்று கூறுவீர்களா?
     ஆம். அது உண்மைதான். இதே காரணத்தினால்தான் எனது படத்தில் ‘இறுதி என்ற வார்த்தையை எங்கும் காண முடியாது. இவையெல்லாம் ஒன்றின் அத்தியாயமே ஆகும். அப்படமானது எப்போதும் நிறைவு பெறுவதில்லை. அவை அவ்வாறு எந்த வார்த்தையையும் கொண்டிருப்பதில்லை. நாம் விரும்பிய சில விஷயங்களை அதன் கூறுகளைக் கூட நாம் மேலாண்மையாக செய்திருக்க முடியாது என்பதை நான் நம்புகிறேன். ‘முடிவின்மையும் மற்றும் ஒரு நாளும் படத்தின் கவிதையில் ஒருவரி, இருவரி என பயன்படுத்தப்பட்டாலும், முழுக்கவிதையும் படத்தில் இடம் பெறாது நிறைவு பெறாமலேதான் இருக்கும்.
உங்கள் படங்கள் மிகவும் அந்தரங்கமானதாக உள்ளதோடல்லாமல் படத்தினை உருவாக்கும் முறையும் மற்றவர்களை விட வேறுபட்டதாக இருக்கிறது. ஆனால் படம் முழுவதும் உண்மையாகவே உங்களைப் பற்றியே பேசுகிறது. நடிக்கும் நாயகனின் கதாபாத்திர சித்தரிப்பு, அவரின் பிரதிபலிப்பு குறிப்பிட அம்சங்கள் உள்ளடக்கம் கொண்ட உங்களுடைய வாழ்க்கையைப்போலவே எனக்குத் தோன்றுகிறது. மேலும் நீங்களே ஒருமுறை  கதையின் ஒரு பகுதியில் நடிக்க தயாராகி வருகிறேன் என்று கூறியிருந்தீர்கள்?
     ஆமாம், அது உண்மைதான்.  இயக்குநர்கள் தங்களுடைய படத்திலேயே நடித்து இருக்கிறார்கள் உதா. ஆர்சன் வெல்ஸ். சில சமயங்களில் படமானது நமது வாழ்க்கையினை மிகவும் நெருங்கியதாக இருக்கும்போது வேறெந்த நடிகரும் அப்பகுதியினை நம்மைக்காட்டிலும் சரியாக திருப்தியாக நடித்துவிடமுடியாது.  அப்படி நடிக்கத்தூண்டும் உணர்வினை எளிதில் நாம் தவிர்த்துவிடவும் முடியாது.  எனக்கு இந்த சிக்கலான நிலைதான் ‘முடிவின்மையும் மற்றும் ஒரு நாளும் படத்தின் உருவாக்கத்தின்போதுஏற்பட்டது. உண்மையில் அப்பகுதி காட்சியில் என்னுடைய அடையாளங்கள் இருந்ததால் எந்த ஒரு நடிகரும் எனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்விதமாக நடித்துவிட முடியும் என்பதை நான் நம்பவில்லை. எனவே படப்பிடிப்பை உடனே நிறுத்திவிட்டேன். கதையில் இருந்து என்னை குறிப்பிட்ட தொலைவில் நிறுத்திக்கொள்ள கதாபாத்திரங்களுக்கு வேறொருவரின் அடையாளங்களை பொருத்தவேண்டியிருந்தது. இதேபோல்தான் சிதெராவிற்குப் பயணம் (அ) யுலிசஸ் கேஸ் படத்திற்ம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்தப்படத்தின் கதாபாத்திரங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குணாம்சங்கள் கொண்டவர்கள் ஆவர். சிறிய அல்லது பெரிய அளவு அதில் உங்களது பகுதியும் இருக்கலாம். ஆனால் இதோடு நீங்கள் அறிந்த மனிதர்களின் பகுதிகளும் இருக்கும். இது முற்றிலும் உங்களை தள்ளி நிறுத்தாது ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் நீங்கள் அருகே இருக்கிறீர்கள்.  கதாபாத்திரங்களின் உள்ளே ஆழமாக சென்றால் அவை உள்ளே உங்கள் சுயத்திற்கு மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.
மற்றுமொரு தொடர்ச்சியாக உங்களது படங்களில் வரும் தந்தை – மகன் உறவு தொடர்பை பேசுவோம்.
     என்னுடைய குழந்தைப்பருவம் குறித்து நான் ஏற்கனவே பேசியுள்ளபடி தந்தையின் உருவம் என்பது எனது இறந்தகால நிகழ்வுகளில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. என் தந்தை திடீரென காணாமல் வேறிடம் நோக்கி கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எழுப்பும் நினைவுகளே எங்களுக்கு பெரும் பாரமாகி போயின. இந்த வகையில் என்னுடைய முதல்படமான ‘மறுகட்டமைப்பு முக்கியமான படமாகும். ‘மறுகட்டமைப்பு என் தொடக்க காட்சியே தந்தை திரும்ப வருவது குறித்துத்தான். இதன் பிந்தைய படங்கள் உண்மையாக (அ)புனைவாக தந்தை எனும் பாத்திரமான ஒருவரை தேடிக்கொண்டிருப்பதாக கதை நகரும். முழுப்படமும் இத்தகைய பயணத்திலேயே இருக்கும்.
இன்னொரு அம்சத்தையும் இதில் குறிப்பிட வேண்டும். இவை அனைத்தும் பயணம் குறித்த திரைப்படங்களாக உள்ளன.
     ஆமாம். ஆனால் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. பொதுவாக பயணம் குறித்த படங்களில் குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எந்தவொரு காரணமும் இல்லாமல் செல்வதாக அமைந்திருக்கும். ஆனால் எனது படங்களில் வரும் பயணங்களுக்கு நிச்சயமான ஒரு இலக்கு உண்டு. உ.தா: ‘சிதெராவிற்கு பயணம் படத்தில் ஒருவரின் கனவில் வரும் தீவு ஒன்றிற்குச் செல்வதாக கதை அமைந்திருக்கும். அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் தீவாக அது கூறப்படுகிறது. ‘மூடுபனிநிலம் படத்தில் குழந்தைகள் தங்கள் தந்தையைத் தேடி பயணிப்பார்கள். ‘தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில் காணாமல் போகும் அரசியல்வாதி ஒருவர் குறித்த மர்மங்களை அறியும் விதமான பயணம் சித்தரிக்கப்பட்டிருக்கும். ‘யுலிசஸ் கேஸ் படத்தில் தொலைந்து போன சில துண்டு படங்களைத் தேடி பால்கன் நாடுகளுக்கு பயணிக்கும் விதமாக கதை பின்னப்பட்டிருக்கும்.
சில படங்கள் இதயத்திலிருந்தும் சில படங்கள் மூளையிலிருந்தும் உருவாகின்றன என்று கூறியிருந்தீர்கள். இது உங்களது படங்களிலும் பிரதிபலித்துள்ளதா?
     சில படங்கள் அறிவுசார்ந்த தன்மையினை மூலமாக கொண்டவை. மற்றவை உணர்ச்சிகரமான நிகழ்வுகள் காரணமாக உருவாகுபவை. ‘வேட்டைக்காரர்கள், ‘சிதெராவிற்குப் பயணம் உள்ளிட்ட படங்கள் முழுக்க சிந்தனை சார்ந்த கருத்துக்களின் மூலமாக உருவானதாகும். ‘தேனீக்காவலர்படம் இதயத்திலிருந்து உருவானது. என்னுடைய அனைத்து படங்களுமே இவை இரண்டும் அல்லது இரண்டிற்கும் இடைப்பட்டதாகவே அமையும்.
உங்களது படங்கள் இதயத்திலிருந்து (அ) மூளையிலிருந்து உருவாக்கப்படுவதாக கொள்வோம் என்றாலும் சில அற்புதமான காட்சிகளை அப்படங்களில் என்னால் மறக்கவே முடியாது. ‘பயணிக்கும் வீரர்கள் படத்தில் நிகழும் விருந்து, ‘சிதெராவிற்குப் பயணம் படத்தில் முதிய தம்பதிகள் கட்டுமரத்தில் பயணிக்கும் காட்சி, ‘தடைசெய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில் வரும் திருமணக்காட்சி, யுலிசஸ் கேஸ் படத்தில் வரும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு, லெனின் சிலையை படகில் கொண்டு செல்லும் காட்சி, ‘முடிவின்மையும் மற்றும் ஒரு நாளும் படத்தில் வரும் பேருந்துப்பயணம் என சில உதாரணங்களைக் கூறலாம். இவற்றை ஒவ்வொர முறை காணும்போதும் அந்த காட்சிக்கான கற்பனையும் திரைமொழியும் என்னை பெரிதும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இவை நீங்கள் படப்பிடிப்பு நடத்தும்போது நடைபெறுபவையா? (அ) முன்னரே தீர்மானித்து உருவாக்கப்படுபவையா?
     இரண்டு முறையிலும்தான். பேருந்துப்பயணம் என்பது இந்த முறையில் எழுதப்படவில்லை. அக்காட்சியில் எழுத்தாளரும் சிறுவனும் பயணிப்பது போலான காட்சி. காலியான பேருந்தில் இருவரும் மழை பெய்து கொண்டிருக்கும் போது நகரின் உள்ளே நுழைகின்றனர். ஆனால் இதில் ஏதோ போதாமை இருப்பது போல உணர்ந்தேன். எனவேதான் அக்காட்சியை அதிகநேரம் எடுத்து படமாக்க முயன்றேன். கதையினை படப்பிடிப்பின்போது மாற்றிவிடுவேன். அதனை இருவிதமாக படம் பிடித்தோம், ஒன்று, திரைக்கதையில் உள்ளபடி எடுக்கும் காட்சிகள், இரண்டாவது அதனை புறக்கணித்து விட்டு எடுக்கும் காட்சிகள் என்றாகும். ‘பயணிக்கும் வீரர்கள் படத்தின் காட்சி சில வசனங்களோடு டாங்கோ நடனமாடுவதாக இருந்தது. 1946 ல் மக்கள் அணிந்த கருப்புநிறத் தொப்பி, வரி உடைகள் என நடனமாடும் நடிகர்கள் அணிந்திருந்தனர். ஒத்திகை இடைவெளியின்போது அந்த உடைகளுடன் இருவர் அருகருகே நின்றிருந்தனர். பியானோ இசைக்கத்தொடங்கியதும் அதில் ஒருவர் மற்றொருவரை நடனமாட அழைத்து ஆடத்தொடங்கினார். அது உண்மையிலேயே எதிர்பாராமல் நடந்தது. உண்மையில் அங்கே நிகழ்ந்த காட்சி குறித்து நான் சிந்திக்கவோ எழுதக்கூட இல்லை.  ஆனால் அக்காட்சி என் கண் முன்னால் நடந்தது. இது போன்ற மேம்படுத்தல்கள் படப்பிடிப்புத்தளத்தில்தான் நிகழும்.  நீங்கள் செய்யும் விஷயங்கள் குறித்து சிலநாட்கள் கழித்துத்தான் அறிந்துகொள்ள முடியும். ‘மூடுபனி நிலம் படத்தில் அப்படித்தான் வன்புணர்வுக்காட்சி உருவானது. ‘தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில் வரும் திருமணக்காட்சியில் மணமகள் ஆற்றின் ஒரு புறமும், மணமகன் ஒரு புறமும் நிற்பது என்பதை  நான் வேறு மாதிரி எழுதியிருந்தேன். ஆனால் அதில் ஏதோ குறைவது போல மனதிற்கு பட்டது. நியூயார்க்கில் இருந்தபோது ஹர்லேமுக்கு ப்ரான்க்ஸ் வழியாக பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில் தெருவின் ஒரு முனையில் கருப்பினச்சிறுவன் தன் நடனத்தில் மாறுதல்களை செய்துகாட்டியபடி இருந்தான். எதிர்ப்புறம் இருந்த மற்றொரு கருப்பினச் சிறுவன் அவனுக்கு பதிலளிக்கும் விதமாக நடன அசைவுகளை நிகழ்த்தியபடி இருந்தான். படமாக்கும்போது இதில் அவர்களுக்கிடையில் நதி ஒன்றினை கற்பனையாக வைத்தேன்.
     1958ல் கிரேட்டே அருகிலுள்ள தீவு ஒன்றில்  நதி பனிக்காலத்தில் முழுவதும் உறைந்து போய் விடும் என்பதை ஏதோ ஒரு இதழில் படித்தேன். இந்த காலத்தில் மக்கள் சைகை மொழி பேசியே ஒருவருக்கொருவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்களாம். யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கான இறுதிச்சடங்கு மறுகரையில் பாதிரியார் செய்ய அதனை இவர்கள் பின்பற்றுவார்களாம். இவ்விரண்டு நிகழ்ச்சிகள்தான் ‘தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தின் திருமணக்காட்சியை உருவாக்க அடிப்படையாக அமைந்தவையாகும். ‘யுலிசஸ் கேஸ் படத்தில் வரும் விருந்து நிகழ்வும் இம்முறையில் உருவான ஒன்றே. முதலில் அக்காட்சியை எழுதிவிட்டு பின் ஒத்திகை பார்க்கும்போது அது எனக்கு திருப்தி தரவில்லை. சில காட்சிகளை திரும்ப மாற்றியமைத்து எழுதினேன். லெனின் சிலையை படகில் கொண்டு செல்வது என்னைப் பொறுத்தவரை குறிப்பிட்ட யுகம் முடிந்துவிட்டது என்பதைக் கூறும் அடையாளமேயாகும்.  கருங்கடலில் ரோமானியன் துறைமுகமான கான்ஸ்டன்சாவில் குடியானவர்கள் படகின் மூலம் கடப்பதைப் பார்த்த பின்னரே அக்காட்சியை நான் எழுதினேன். மீன்பிடிக்கும் படகு ஒன்றில் உள்ள லெனினின் பெரிய தலை ஒன்றினை கிரேன் தூக்கிச்செல்கிறது. அப்படகில் உள்ள ஆண் பெண் என இருவரும் இதனை திகைப்போடு பார்க்கிறார்கள். இப்படியாக லெனின் அவர்களது வாழ்க்கைக்குள் வருகிறார். அப்பெண் ஆணின் கண்களை மூடி சிலுவைக்குறி இடுகிறாள். இந்தக் காட்சிகளை வேறுபட்ட சிக்க்கலானதானதாக எழுதும்போது இருக்கலாம். இப்படிப்பட்ட காட்சிகளை அனைவரும் ரசிக்கும் வண்ணம்  எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. படத்தில் உள்ள வேறு முக்கியமான காட்சிகள் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா என்று எனக்கு தெரியவில்லை.
உங்களின் படங்களில் இசையின் இடம் என்னவாக இருக்கிறது?
     இசையோடான எனது தொடர்பு என்பது நீண்ட வரலாறு என்றே கூறுவேன். நான் முதலில் எந்த விதமான பின்னணி இசையையும் மறுத்தே வந்தேன். ‘மறுகட்டமைப்பு படத்தில் வரும் நாட்டுப்புறப்பாட்டு போல இயற்கையான மூலத்திலிருந்து வரும் இசையை மட்டுமே ஏற்றுக்கொண்டேன். அப்பாடல் படத்தில் பின்னணியாக மட்டுமல்லாமல் படத்தின் தன்மையை விளக்குகின்றதாயும் இருக்கும். இந்த வகையிலான இசையானது எனது படத்திற்கு அவசியம் என்று கருதுகிறேன் உ.தா: மழை. 36 நாட்களில் படத்தில் வரும் இசையானது விபத்து போல வானொலியிலிருந்து  கிடைத்ததைக் காட்சிக்குப் பயன்படுத்தினோம்.  ‘பயணிக்கும் வீரர்கள் படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன என்றால் அவை பார்வையாளர்களை கவருவதற்காக நடிகர்கள் மேடையில் பாடும் பாடல்களாகும். ‘வேட்டைக்காரர்கள் படத்திலும் இதே விதிகளைப் பயன்படுத்தியுள்ளேன் என்றாலும் ‘மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் இதனை மாற்ற முயற்சித்தேன். படமானது பைஸன்டைன் லிட்டர்ஜிகல் இசையினை அடிப்படையாக கொண்டுள்ளதால் தொன்மையான இசைக்கருவிகளை பயன்படுத்தியும் மிகவும் பழமையான பாடல்களை தனி மறமறும் ஒருங்கிணைந்த கருவிகள் என்பதற்கு மாற்றாக பயன்படுத்த முடிவெடுத்தேன்.  இப்படத்தில் இருவகையான இசை முறைமைகள் உள்ளன. ஒன்று பைஸன்டைன் மற்றும் இத்தாலிய சார்பற்ற சுதந்திர இசை வடிவமாகும். இவ்விரண்டையும் அருகருகே வைத்து பார்ப்பது திடீரென நடந்த நிகழ்ச்சியாகும். இதில் கிரீஸ் நடுவிலுள்ளது. ‘சிதெராவிற்குப் பயணம் என்று அணுகுமுறையை மாற்றியமைத்த படமாகும். அப்படத்தில் இருந்து இப்போது வரை இசைக்கோர்ப்புப் பணிகள் செய்து வருபவர் லென் கரைன்ட்ரோவ்தான்.
     இசையைப் பொறுத்தவரையில் என் படத்தில் அது கதாபாத்திரம் போலவே முக்கியமான ஒன்றாக உள்ளது. ‘சிதெராவிற்குப் பயணம் படத்தில் நாயகன் காலையில் எழுந்ததும் வானொலியை முடுக்கி இசை கேட்கிறான். அப்போது நான் விவால்தியின் மாண்டலின்கள் இரண்டைக் கொண்டு இசைக்கும் இசையினை கேட்டிருந்தேன். சிறந்த இசை என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு என்பேன். எனவே எலினியிடம் அதைப்போல துள்ளலான் உற்சாகம் மிகுந்த விவால்தி போலவேயான இசைப்பாடலைக் கேட்டேன். பின் அவர் அந்த இசைப்பாடல் அந்த கதாபாத்திரம் கேட்கும்படி காட்சி அமைந்து இருந்தது. பின் அவ்விசை ஜாஸ் வடிவத்திற்கு மாறி வயலின் மட்டும் ஒலிக்கும் புகழ்பெற்ற பாடலாக குறிப்பிட்ட கதாபாத்திரத்தினைக் குறிப்பதாக மாறியது. படத்தின் நெடுக வரும் இசைகளில் இது ஒன்று. மற்றொன்று தந்தை ஏழை குடியானவர்கள் மற்றும் காம்ரேட்டுகளோடு அங்கிருந்து புறப்படுவதற்கு முன் ஆடும் நடனத்தின் போதான இசையாகும். இறுதியில் இவ்விரண்டு இசைத்துண்டுகளும் ஒன்றிணைந்து ஒலிப்பது தந்தையும் மகனும் ஒன்றாக இருக்கும் சமயமாகும். வயலின் இசை முதியவர் தன் மனைவியுடன் கட்டுமரத்தில் கடலுக்குள் செல்லும்போது ஒலிக்கிறது.
இசையமைப்பாளரான எலினியுடன் எப்போதிருந்து ஒன்றாக பணிபுரிகிறீர்கள்?
     நாங்கள் மிகவும் நெருங்கிய நட்புடையவர்களாகவே இருந்தோம். ஒருபடத்தின்கதையைக்கூறும்போதுஅவள்அதனைபதிவுசெய்துகொள்வாள். பின்கதையைஅவருக்குபடிக்கும்அவசியம்ஏற்பட்டதேயில்லை. என்னுடையகுரலில்கதைகூறும்முறையினைஅவர்நன்குஉள்வாங்கிக்கொள்வார். மோசமானதாக, நான்கதைகூறுவதுஎப்போதும்ஒரேமாதிரியாகத்தான்இருந்துவந்திருக்கிறது. இதன்அர்த்தம்காட்சிகள்ஒன்றுபோலஇருக்கும்என்பதல்ல. அவற்றைகூறிவிளக்கும்முறையைக்குறிப்பிடுகிறேன். தர்க்கரீதியாக, நேரானமுறையில்எனதுகதைகூறல்இருக்காது. குறிப்பிட்டசூழலைஉருவாக்கவேநான்முயற்சிசெய்கிறேன். எனதுகருத்தைவெளிப்படுத்தக்கூடியவார்த்தைகளை, மௌனத்தை, குறிப்பிடசொற்கள்எனபார்வையாளர்களுக்கும்எனக்குமானநேரடித்தொடர்பைஉருவாக்கிக்கொள்ளும்வகையில்கதைகூறுவதுஇருக்கும்; கதையமைப்பைவாசிப்பதுபோல்அல்ல.
இசையமைப்பாளரானஎலினி,படமானதுஉருவாகிமுடிவடைவதற்குள்இசையமைத்துவிடுவாரா?
            நிச்சயமாக. அவர்என்னுடையகுரலைபதிவுசெய்துதன்னுடையவீட்டுக்குஎடுத்துச்சென்றுஅதைகவனித்துகேட்டுவிட்டுகூறியிருக்கும்கருத்துக்களைசிறிதுமேம்படுத்தல்செய்தபின்மீண்டும்சந்திப்போம். பியானோவின்முன்அமர்ந்துபல்வேறுவிதஇசைப்பாடல்களைவாசித்துக்காட்டுவார்கவனித்துகேட்பதில்ஏதாவதுபிடித்திருந்தால்அதனைவிரிவாக்கிவாசிக்கக்கூறுவேன். அவர்அதில்சிறியபெரியமாற்றங்கள்செய்துவாசித்துக்காட்டுவாள். நாங்கள்தேவையானஆதாரமானஇசையைஅடையாளம்கண்டுவிட்டால்சரியானபாதையில்செல்கிறோம்என்றுஅர்த்தமாகும். ‘முடிவின்மையும்மற்றும்ஒருநாளும் படத்திற்கு நான் சோகமான இசைப்பாடலை உருவாக்க கூறவில்லை. படத்தில் மையப்பாத்திரம் தனித்துவமான இறப்பு குறித்த நிலையை சந்திக்க நேருகிறது என்பது உண்மைதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைக்கான ஒரு அழைப்பிதழ்தான் அப்படம் என்று நம்புகிறேன்.  எலினி படத்திற்காக உருவாக்கி வைத்திருந்த இசையானது கடும் துயரமானதாக இருந்தது. அதற்குகாரணம், அண்மையில்அவரதுதந்தைஇறந்துபோயிருந்தார். நான்அவரிடம்அந்தஇசைநன்றாகஇருந்தாலும்அதுஎனக்கானதுஅல்லஎன்றுதிட்டமாககூறிவிட்டேன். அவர்பலவழிகளில்என்னைஒப்புக்கொள்ளவைக்கமுயற்சித்தார். நான்ஒப்புக்கொள்ளவேஇல்லை. அந்தஇசையினைமாற்றியமைக்கிறேன்என்றுஅவர்கூறினாலும்அதில்என்னைஈர்க்கும்படிசுவாரசியமாகஎதையும்அவர்செய்யவில்லை. பியானோவில்அவர்வாசித்தஇசைஒன்றுஎனக்குபிடித்திருக்க, இதுதான்படத்திற்குத்தேவையானஆதாரஇசைஎன்றுஅப்போதேகூறிவிட்டேன். ஆதாரஇசையில்சிலமாற்றங்கள்செய்துமுன்னமேசரிபார்த்துவிடுவோம். ‘யுலிசஸ்கேஸ்படத்தில்வரும்இசையில்அக்கார்டியனைபயன்படுத்தஎலினிக்குபரிந்துரைத்தேன். அக்கருவிகுறிப்பிட்டசூழலைஉருவாக்குவதாகஉணர்ந்ததால்கூறியதுஅது. இசையமைப்பாளர்எலினிதேனீக்காவலர்படத்திற்குசாக்ஸபோன்கலைஞரானஜான்கார்பாரெக்மற்றும்கீத்ஜாரெட்மற்றும்பிறரின்துணையுடன்ஜாஸ்இசையினைவாசிக்கச்செய்துஇணைத்தார். கிரீக்நாட்டுப்புறஇசைக்குமிகநெருக்கமாகஅமைந்தஇசைஇது. ஒன்றோஇரண்டுமுறையோவரும்இசைப்பாடல்எனக்குபிடித்திருந்தது. படத்திற்குஏற்பஇசைசரியாகபயன்படுத்தப்பட்டதாஎன்பதுஇன்றுவரையும்எனக்குகுழப்பானஒன்றாகவேஇருந்துவருகிறது.
படம்உருவாக்குவதில்எலின்கரைன்ட்ரோவ்உங்களதுவழக்கமானஉண்மையானபங்குதாரராகவேஉள்ளார். டோனினோவைஅடுத்ததாகசேர்க்கலாம். அவர்இத்தாலிமொழிபேசுபவர்; உங்களுக்கோஅம்மொழிதெரியாது. ஆனால்இன்றுவரைஅவர்தான்உங்களதுபடங்களுக்குகதையினைஎழுதுகிறார்எப்படி?
            அதுஉண்மைதான். இருவரும்ஒரேமொழிபேசுபவர்களல்லஎன்றாலும்நாங்கள்இருவரும்தென்பகுதியைச்சேர்ந்தவர்கள். நடுநிலக்கடல்சார்ந்தமக்கள்அனைவருக்குமேஉண்டானபொதுத்தன்மையைக்கொண்டவர்கள். தொன்மையான தொடர்பு மட்டுமல்லாமல் அவர்களுடனான பழக்கம் ஆயிரம் ஆண்டுகளாக அறிந்துள்ளோம். கடலின் நெருக்கமான நிலை மற்றும் சூழலின் மாறுபாடு இவற்றை பாதிக்கிறது. நான் இத்தாலியில் இருக்கும்போது அந்த தேசம் அந்நியமாகவே எனக்குத் தோன்றவில்லை. டோனினோவுடனான நட்பும் அப்படித்தான். அவரோடு நான் செலவிடும் நேரம் ஆண்ட்ரேய் தர்க்கோவ்ஸ்கி நாஸ்டாலஜிக்காக ரோமில் இருந்தது போல்தான். நானும் ஆந்த்ரேயும் சிலவாரங்கள் ஒன்றாக தங்கியிருந்த வீடு, மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் என்னுடைய உதவியாளராகவும், அப்போது தர்க்கோவ்ஸ்கியின் நாஸ்டாலஜியா படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த ஒருவரின் வீடாகும். டோனினோ பெலினி மற்றும் அன்டோனியோனி ஆகியோருடன் பணிபுரிந்துள்ளதை மட்டுமே அப்போது அறிந்திருந்தேன். ஆந்த்ரேய் அவருடன் பணிபுரிவது குறித்து பெரும் மகிழ்ச்சி கொண்டிருந்தார். வீட்டின் உரிமையாளரும் என்னுடைய உதவியாளருமாக இருந்தவரிடம் டோனினோவை அறிமுகப்படுத்தி வைக்குமாறு கேட்க அவர் டோனினோவின் இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவரை சந்திக்கும் முன் எனக்கு இருந்த எண்ணம் அவரைச் சந்தித்து அவரைப்பற்றித் தெரிந்துகொண்டபின் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்று பார்ப்பதுதான். ஐந்து நிமிடங்கள் கழித்து அவரை சந்தித்து பேசியபோது, நாங்களு இருவருமே ஏதோ ஒரு வேலையில் இணைந்து ஒருங்கிணைப்பாக அதனை செய்வது போலவே பட்டது.  அவர் இத்தாலிய மொழியில் பேசினாலும், அவை திரைப்படம் குறித்தவையாக இருந்ததால் ஒரே மொழி பேசுபவர்கள் போல இருவரும் எளிமையாக புரிந்துகொண்டோம். பல்வேறு விஷயங்களில் இருவரும் ஒன்றுபோலவே ஈர்ப்பும் காதலும் கொண்டிருப்பதை அறிந்தோம். டோனினோ ஒரு கவிஞராக எனக்கு பிடித்திருக்கிறதைக் காட்டிலும் எளிமையானவராக, குடியான விவசாயி போன்ற அவரது தன்மை எனக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது.
கதை குறித்த விவாதங்களில் எப்படி செயல்படுவீர்கள்?
     முதலில் ஒன்றை விளக்கமாக கூறிவிடுகிறேன். என்னுடைய கதைகளை எழுதுபவன் நான்தான் என்றாலும் என் மனதில் உள்ள விஷயங்களை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து தெளிய உளவியல் ஆய்வாளர் ஒருவர் தேவைப்படுகிறார்.  வடிவம் பெறாத தெளிவில்லாத எனது சிந்தனைகளை முதலில் கேட்கும் மனிதரான டோனினோ என்னை சரியான திசை நோக்கி செலுத்துபவராக உள்ளார். உளவியல் ஆய்வாளர் போல என்னுடைய விஷயத்தில் டோனினோ செயல்படுகிறார் என்றே கூறுவேன். பெரும்பாலோர் இந்த முறையில் செயல்படுவதை விரும்புவார்களா என்று எனக்கு தெரியவில்லை.
     நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் படம் முடிந்தவுடன் அடுத்த படத்தினை உருவாக்க மலைகள் நிறைந்த டோனினோவின் கிராமத்திற்கு செல்வேன். வீட்டில் அமர்ந்து பல்வேறு விஷயங்களை தேநீர் குடித்துக்கொண்டும் இடையறதாது பல விஷயங்களை உணவு வேளை வரை பேசுவோம். உணவு முடிந்தவுடன் இளைப்பாறல் பெற்று சிறிது நேரம் கழிந்து என் மனதில் உருவாக்க வேண்டிய படம் குறித்த சிந்தனைகள் ஏதாவது இருக்கிறதா என்று டோனினோ கேட்பார். எனக்கு இந்த இடம் குறித்துத்தான் சிறிது சந்தேகமாக உள்ளது. பல்வேறுவிதமான ஒழுங்குபடுத்தப்படாத எனது யோசனைகளை கதைகளை பிடித்த படங்களைக் கூறுவேன். பின் சிறிது நேரம் நடந்துவிட்டு வந்து மீண்டும் மேற்கூறியவற்றை தொடருவேன். அமர்ந்தபடி நான் கூறுவதை டோனினோ கவனித்து கேட்பார். முக்கியமானதாக கருதுகின்ற விஷயங்களை என் பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டு உடனே எழுதிக்கொள்வார்.
எலின் கரையான்ட்ரோவ் உடன் பணிபுரிவது போல்தான்..
     அப்படித்தான். அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகளை படித்து  அதில் தெளிவான கருத்துகள் உள்ளனவா என்று பார்ப்போம். அப்படி இருந்தால் நான் அதை குறிப்பெடுத்துக்கொள்வேன். அறைக்குச் சென்று குறிப்பிட்ட கருத்துக்களை சிந்தனைகளை ஆழ்ந்து படித்துவிட்டு பிறகு என்ன செய்வது என்பதை அவர் கூறுவார். காபி குடிக்கச் செல்லும்போது என்ன முறையில் கதை சொல்லவேண்டும் என்பதை நான் அவரிடம் கூறுவேன். தனக்கு அந்த சிந்தனைகள் பிடித்திருக்கிறதா இல்லையா மேலும் அதில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து பிற்பகல் எனது அறைக்கு வந்து டோனினோ கூறுவார். நாங்கள் கூறும் விதமாக, ஒரு கதையமைப்பு, மேம்படுத்திய கதையமைப்பு என மூன்று (அ) நான்கு நாட்கள் நாங்கள் கதையின் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசி முடிவு செய்வோம். காலையிலிருந்து இரவு வரை இவை மட்டுமே செய்து கொண்டிருக்க மாட்டோம். சாப்பிடுவது, நீண்ட தூரம் இருவரும் நடப்பது, மக்களை சந்திப்பது என்பதோடு திரைக்கதை குறித்தும் உரையாடுவோம்.  அங்கிருந்து கிளம்பும் போது கதைக்கான முதல் பிரதி என் மனதில் தெளிவாகி இருக்கும். இது குறித்து அவரிடம் நான் பேசுவேன் அல்லது எழுதி அவருக்கு அனுப்பிவைப்பேன்.  அவர் படிப்பதை விட எனது குரலில் கேட்பதைத்தான் விரும்புவார். அவர் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தவுடன் நான் இரண்டாவது ஒரு மனிதரோடு சேர்ந்து பணிபுரியத்தொடங்கிவிடுவேன். டோனினோ மூலமான கதைக்கு பங்களிப்பவர் என்றாலும் படத்தில் தரவுகளிலும் சில சமயங்களில் பங்களிக்க மெனக்கெடுவார்.  கிரீசில் நான் இருக்கும்போது ஒருமுறை தொலைபேசியில் அழைத்த டோனினோ, ‘‘கவனி தியோ, நாம் படத்தில் நிச்சயமாக ஒரு கோழியை வைக்கவேண்டும்’’ என்று கூறினார். ‘‘அதை எங்கே நான் வைக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டேன். ‘‘அதை எங்கே வைக்கவேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் எங்காவது ஓரிடத்தில் அதை வைக்கவேண்டும்’’ என்று கூறினார். அவர் கூறியபடி படத்தின் காட்சிகளில் ஒன்று கோழியுடன்தான் தொடங்கும்.
     இரண்டாவதாக நான் பணிபுரிவது என்னுடைய முதல் வாசகருடன்தான். முன்பு இந்த இடத்தில் இருந்தவர் தனாசிஸ் வல்டினோஸ்; இப்போது பீட்ரோஸ் மார்கரிஸ் இருக்கிறார். என்னுடைய கதை குறித்த பதிலை முதலில் இவரிடமிருந்தே பெறுகிறேன். ‘முடிவின்மையும் மற்றும் ஒரு நாளும் படத்தைக்குறித்து நான் கூறிய குறிப்புகளைக் கொண்டு ஒரு புத்தகம் அளவு எழுதிவிட்டிருந்தார் மார்கரிஸ். நாங்கள் இருவரும் பேசிய உரையாடல்கள், விவாதங்கள் என எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் ஆவணப்படுத்தி வைத்திருந்தார் மார்கரிஸ். ஆனால் இது குறித்து எதையும் என்னிடம் கூறவேயில்லை. கதையினை கணினியில் தட்டச்சு செய்வதும் அவர் பணிகளில் ஒன்று. எனக்கு இன்றுவரை கணினியிலும், தட்டச்சு இயந்திரத்திலும் தட்டச்சு செய்யத்தெரியாது. கதையினை பிரதி எடுத்து மார்கரிஸ் அனுப்ப, அதில் திருத்தங்கள் செய்து அவருக்கு அனுப்புவேன். இவை இல்லாமல் நாங்கள் நேரில் சந்திக்கும்போது கதை குறித்த தாள்களை மேம்படுத்தல் செய்தவற்றை பகிர்ந்துகொள்வோம். குறிப்பிட்ட நிலையான மேம்படுத்தல்கள் போதுமென்று நான் கருதும் வரை தொடரும். படப்பிடிப்பிற்காகதைப்பிரதிஎன்பதைபடப்பிடிப்புமுடிந்தபின்தான்நீங்கள்பார்க்கவேண்டும். நான்படப்பிடிப்புதொடங்கியவுடன்கதைப்பிரதியினைநீங்கள்ஒப்பிட்டுப்பார்த்தால்அவற்றிடையேஎந்தபொருத்தமும்இருக்காது.
தொடக்கத்திலிருந்துஉங்களுடன்பணிபுரிந்துவரும்ஒளிப்பதிவாளரானஜியோர்கோஸ்அர்வானிட்டிஸ்உடன்பணிபுரிந்ததுஎப்படி? உங்களதுபடங்களில்வரும்சிக்கலானமுக்கியமானகாட்சிகளைபடம்பிடித்தவர்அவர்தான்இல்லையா?
            முதலில்ஒன்றைக்கூறவிரும்புகிறேன். எனதுகடைசிமூன்றுபடங்களுக்குஒளிப்பதிவாளராகபணிபுரிந்தஅர்வானிடிஸ், படத்தின்அரைப்பகுதியையும்மீதிப்பகுதியைஆண்ட்ரியஸ்சினானோஸ்எனும்ஒளிப்பதிவாளரும்ஒளிப்பதிவுசெய்தனர். அவர்களின்வேலைநேர்த்திமிக்கது. சினானோஸ்அர்வானிடிஸின்உதவியாளர்என்பதால்அவருடையவேலைமுறை, மற்றும்என்னுடையபடப்பிடிப்புதன்மையையும்அறிந்திருந்ததோடு, முன்னமேமெக்அலெக்ஸாண்ட்ரோஸ்படத்திலும்அவர்பணிபுரிந்திருந்தார். இயக்குநர்ஒளிப்பதிவாளருக்குபின்னால்தான்இருப்பார்என்றாலும்ஒளிப்பதிவாளரின்பின்னணியில்இருந்துபல்வேறுஆலோசனைகளைநான்கூறுவேன்.எனதுபெரும்பாலானபடங்களுக்குஒளிப்பதிவுசெய்தஅர்வானிடிஸ்என்னைநன்குஅறிந்தவரும்கூட. மேலும்அவரின்வேலைசெய்யும்முறைக்குஎன்னளவுவேறுயாரும்அவருடன்இணைந்துபணிபுரியமுடியுமாஎன்றுதெரியவில்லை. பிறர்அவரோடுஇணைந்துபணிபுரிந்துள்ளார்கள்எனினும்அதுஅவ்வளவுஇனியதாகஇருந்ததாஎன்றுஎனக்குத்தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரையில்நாங்கள்நெடுங்காலம்ஒருவரைஒருவர்அறிந்திருந்தால்எனதுபடப்பிடிப்புமுறையைஅறிந்திருந்ததால்எந்தசிக்கலும்இல்லாமல்பணிபுரியமுடிந்தது. இதுஒருதிருமணம்போன்றதுதான்என்பேன். 30 வருடங்கள்நாங்களிருவரும்ஒன்றாகப்பணிபுரிந்துள்ளோம். ஏறத்தாழவாழ்நாள்பணிஎன்றுகூடசொல்லலாம். பெரும்பாலானநேரங்களில்அவரிடம்நான்ஏதும்கூறவேண்டியதேவைஇருந்ததில்லை. என்னசெய்யவேண்டும்எப்படிசெய்யவேண்டும்என்றுஅவருக்குதெரியும். சினனோஸ்வேலைசெய்வதுபொறுத்தவரையில்ஒவ்வொருகாட்சியையும்நான்சோதிக்கவேண்டியுள்ளது.
உங்களுக்கு என்ன தேவை என்பதை உதவியாளர்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? காட்சிகளை வரைந்து காட்டுவீர்களா?
     இல்லை. நான் அவர்களிடம் எனக்கு என்ன தேவை என்பதை கூறுவேன். அவர்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள். திரையில் எனக்கு என்ன வேண்டும்; என்ன எதிர்பார்க்கிறேன் என்று தெளிவாக நான் அறிந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய உதவியாளர்களுக்கு ஸ்டோரிபோர்டு வரைந்து காட்டியிருக்கிறேன். ஆனால் இன்று அவர்கள் ஏதேன்ஸ் திரைப்படப்பள்ளியில் தொடக்க கல்வியைக் கற்றுவிட்டு வருவதால், 20 ஆண்டுகளுக்கு மேலாக என்னுடன் இருப்பதாலும் அவர்களுக்கு நான் படங்கள் வரைந்து காட்டி புரியவைக்க வேண்டியதில்லை. என்னுடைய தேவைகள் குறித்து வேகமாக அறிந்துகொள்கிறார்கள். பல ஆண்டுகளாக என்னுடன் இருப்பதால் என்னுடைய படங்களில் அவர்களுக்கு எந்த சிக்கலுமில்லை. ஆனாலும் கூட இதில் மற்றொரு அபாயம் உண்டு. தேஜாவூ நினைவுகளுக்கு எளிதில் ஆட்படுவதுதான் அது.
இந்த ஆபத்தை தவிர்க்க உங்கள் குழுவை மாற்றிவிடுவீர்களா?
     இல்லை. இதற்கான பொறுப்பு என்பது அவர்களுடையதல்ல. இந்த வழக்கமான ஆபத்தை சமாளிக்கும் விதமாக என்னையே நான் திருப்புதல்கள் செய்துகொள்கிறேன். படத்தில் செய்யவேண்டிய சிறு சிறு திருத்தங்கள் முதல் படத்தின் முழு மூல அடையாளமாக இருக்கும் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். பட அரங்கு செயல்பாடுகளை ‘கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் என்று குறிப்பிட்டு கூற விரும்புகிறேன். அங்கிருக்கும் அனைவரிடமும் காட்சி குறித்து விவாதிப்பேன். அவர்களுடைய கருத்துக்களைக் கேட்பேன். அவர்களுடைய கருத்து சரியென்றால் அந்தக்கருத்துக்களை பயன்படுத்தியுமிருக்கிறேன். அர்வானிட்டிஸ்பல்வேறு புதிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட காட்சிக்கான கூடுதல் பரிமாணங்களையும் அளித்தவர் ஆவார். திரைப்படங்கள், ஆவணம்படங்கள் என்று தொடர்ச்சியாக குழுவோடு பயணிக்கிறேன்.
நான் உங்களிடம் படத்தொகுப்பு குறித்து கேட்கப்போவதில்லை. படத்தினை உருவாக்குவதே அதனை ஆதாரமாக கொண்டுதான். ஆனால் படத்துடன் நீங்கள் கொண்டிருக்கும் உறவு குறித்து விவாதிப்போம். உடல்ரீதியான தொடர்பை குறித்து முன்னமே கூறியிருக்கிறீர்கள். நவீன டிஜிட்டல் முறையிலான தொழில்நுட்பத்திற்கான ஆதரவாளர் தாங்கள் அல்ல. ஆனால் ஏவிட் எனும் தொழில்நுட்பத்தை படத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று கூறப்படுகிறதே?
     உண்மைதான். அந்தமுறையில் படங்களை எளிமையாக தொகுக்க முடிந்தது. இசை என்பது இதில் சிக்கலான ஒன்று. எனது அண்மைய படங்களில் நான் ஏவிட் முறையை பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் என் அடுத்த படத்திற்கு திரும்ப மூவியோலாவைப் பயன்படுத்தப்போகிறேன். படத்தில் காட்சிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியும் உங்களிடம் குறிப்பிட்ட இழப்பை ஏற்படுத்துகிறது. அதில் குறிப்பிட்ட ஓர் தன்மையை உள்ளீடு செய்கிறீர்கள். வலுவான ஒரு தன்மை இதில் தேவைப்படுகிறது. திருப்தி அடைவது என்பதை குறிப்பிட்ட அளவில் நீங்கள் பெற முடியாவிட்டால் அப்படத்தினால் எந்தப்பயனும் இல்லை. மூவியோலா முன் (அ) படத்தொகுப்பு மேஜையில் அமர்ந்திருக்கும் போது என்னால் திரைப்படத்தை உணர முடிகிறது. லேபிற்கு செல்லும் முன் ஒவ்வொரு பிரதியையும் என்னால் சோதிக்க முடிகிறது. படத்தின் வாசனையை என்னால் நுகர முடிகிறது. அதன் என் கையால் தொட முடிகிறது. படத்துடன் நான் கொண்டிருக்கும் இவ்விதமான உறவு என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.  இதில் நான் மட்டுமே ஒருவனல்ல. பல பிரிட்டிஷ் படங்களை இதில் குறிப்பிட முடியும். அவர்களின் படம் முடிந்தபின் வரும் நன்றி குறிப்புகளை படத்தொகுப்பு மேஜையில் தயாரித்திருப்பார்கள். இம்முறையில்தான் ஒளிப்பதிவு செய்வதும். டிஜிட்டல் முறையில் படங்களை நாம் மேம்படுத்திக்கொள்வது எளிமையானது என்பது உண்மைதான். படத்தின் தரம் பொறுத்தவரையில் முன்னமே கூறியுள்ளது போல, தொழில்நுட்பங்களின் தோல்வி படத்திற்கு உதவி செய்கின்றன என்பதை நான் நம்புகிறேன். ஹாலிவுட்டில் சிலர் படத்தில் உள்ள குறைபாடுகளை அப்படியே விட்டுவிட எண்ணுகிறார்கள் என்பதை ஒரு இதழில் வாசித்தேன். அது அவர்களது படத்தை மிகவும் மென்மையாக சரியாக இருப்பதை தடுக்கிறது.
உங்களது படத்தின் நடிகர்கள் குறித்துப்பேசுவோம். தொடர்ந்து நீங்கள் மீண்டும் மீண்டும் கிரீக் அல்லாத நடிகர்களையே படத்தில் பயன்படுத்துகிறீர்களே?
     உண்மையில் இந்நாட்டின் நடிகர்கள் என்னை பெரிய அளவு பொருட்படுத்துவதில்லை. எனது படத்திற்கு பொருத்தமான நடிகர்களை நான் எங்கிருந்தும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன்.
அவர்கள் கிரீக் மொழி பேசத்தெரியாதவர்கள் அல்லவா? எப்படி அவர்களைக் கொண்டு படப்பிடிப்பை நடத்துகிறீர்கள்?
     ஒருவரின் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து என்னோடு பணிபுரிந்து உ.தா: பெர்லூச்சி உட்பட பலரோடு விவாதித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தளவில் மொழி என்பது நமது அடையாளம் தொடர்பானது. அதனை நம்மிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. நீங்கள் பிறந்தபோது கேட்கும் முதல் ஒலி அது. நாங்கள் உருவாக்கும் படத்தின் முக்கியமான பகுதியாக மொழி உள்ளது. இவை தீர்வு காண முடியாத சிக்கல்கள் அல்ல.  ‘யுலிசஸ் கேஸ் படத்தில் கெய்டெல் ன் கதாபாத்திரம் அமெரிக்காவில் இருந்து வருவதால் ஆங்கிலத்தில் பேசுவதாக காட்சி இருக்கும். மார்செலோ மாஸ்ட்ரோயன்னி கிரீக் மொழியை கற்றுக்கொண்டவர் ஆவார். படப்பிடிப்பு முடிந்த பின்னர் வசனங்கள் அவற்றின் உச்சரிப்புகள் குறித்து அவருக்கு சொல்லிக்கொடுப்பேன். அதன் பின்னரே அவர் தனது பகுதிக்கான பின்னணி பேச செல்வார்.  வார்த்தைகளின் உச்சரிப்பு, அதன் ஏற்றத்தாழ்வுகள், ஒலி முறைகள் என அனைத்தும் இத்தாலிய மொழியில் கிடையாது.எனவே அவர் தான் பேசிய உரையாடல் பகுதியினைப் பெற்று பயிற்சி செய்து பேசினார். இது விதிவிலக்கானதே. கிரீக் மொழி பேசுவதற்கு சிக்கலானது ஆகும். அதுவும் முன்னதாகவே அறிந்திருக்காத நிலையில் மிகவும் கடினமானதாக தோன்றும். ஒப்பீட்டளவில் இத்தாலிய மொழி பண்பொற்றுமை அடிப்படையில் எளிதானது ஆகும். இவ்விரண்டு மொழிகளுக்கும் சில ஒற்றுமைகள்உள்ளன. கெய்டெல் கிரீக் மொழியில் சில வார்த்தைகளே பேசத் தெரிந்தவர் என்பதால் உரையாடல் பகுதி மிகுந்த சிக்கலானதாகவே இருந்தது. அவரை பின்னணி பேச வைக்க முடியாது என்ற நடைமுறை உண்மை தெரிந்ததும் ப்ரூனோ கான்ஸ் எனும் பின்னணி பேசுபவரின் மூலம் அவருக்கு பேசவைத்தோம் என்றாலும் எனக்கு இதில் சிறிதும் மகிழ்ச்சியில்லை. நடிகரின் குரல் என்பது அவரது ஆளுமையின் ஒரு பகுதி. ஒரு நடிகரின் குரலுக்கு இன்னொருவர் பேசி அதை கேட்பதையே மோசமானதாக கருதுகிறேன். மேலும் நான் வாய்ப்பளித்து நடிக்கின்ற நடிகர்களே என் திரைப்பட வாழ்க்கையை அடையாளப்படுத்துகிறார்கள். உண்மையைக் கூற வேண்டுமெனில் மாஸ்ட்ரோயன்னி (அ) ஜென்னே மொரியு போன்ற நடிகர்களுடன் பணிபுரிவேன் என்று நான் நினைத்தே பார்த்ததில்லை.
     மாஸ்ட்ரோயன்னியோடு பணிபுரிந்தது என்பது முற்றிலும் அதிர்ஷ்டம் என்றே கூறுவேன். ‘தேனீக்காவலர் படத்தில் முதலில்நான் நடிக்கவைக்க நினைத்தது ஜியன் மரியா வாலன்டேவைத்தான். மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்திற்கு அவரைத்தான் முதலில் நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால் அவரது மேலாளர் கேட்ட சம்பளத்தொகை எங்களுக்கு கட்டுப்படியாகாததால் அவரோடு பணிபுரிய முடியாது போனது. பின் அந்த கதாபாத்திரத்திற்கு ஓமெரோ அன்டோனட்டியைத் தேர்வு செய்ய நேரிட்டது. ஆனாலும் அவரோடு பணிபுரிய வேண்டும் என்ற ஆசை குறையாது எனக்குள்ளாக இருந்தது. ‘தேனீக்காவலர் படத்தின் கதை முடிவு செய்யப்பட்டபின், டோனினோ குயுரா ஏதாவது நடிகர் குறித்து கருத்தினை மனதில் கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டார். நான் வாலன்டே பெயரைக் கூறினேன். ‘ஆனால் அவர்தான்நோயுற்றிருக்கிறாரே? என்றார் டோனினோ. அப்போது வாலன்டே நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு நுரையீரலோடு வாழ்ந்து வருகிறார் என்று வலுவான செய்தி எங்கும் பரவியிருந்தது. ‘‘ஏன் இதற்கு மார்செலோ மாஸ்ட்ரோயன்னியை நீங்கள் பரிசீலிக்கக் கூடாது?’’ என்று கேட்டார் டோனினோ. ‘‘இல்லை, மிகவும் அழகானவரான அவர் இருக்கிறார்’’ என்று பதிலுரைத்தேன். ‘‘இல்லை. முதலில் அவரை அழைக்கலாம், அவர் இங்கு வரட்டும் சந்தித்தால் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்’’ என்று கூறினார் டோனினோ. இருபது நிமிடங்களுகுக பிறுக் மார்செலோ அங்கு வந்தார். அவரை அதற்கு முன் நான் சந்தித்தது இல்லை.
     நான் அவரை ஒரு சினிமாவின் முக்கியமான நட்சத்திர நடிகராகவே  அடையாளம் கண்டேன். ஆனால் நேரில் அவர் வேறொன்றாக இருந்தார். எனவே அவர் பெலினியின் 8½படத்தின் கதாபாத்திரம் போல நடிப்பவர் என்று நம்பியிருந்தேன். ‘தேனீக்காவலர் படத்திற்கு, நான் தேடிய நபராக அவர் தெரியவில்லை. அவர் தவறான தேர்வாகவே எனது கதைக்கு இருப்பார் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே கதையினை கூறத்தொடங்கினேன். இயல்பாகவே முழு வீச்சுடன் எனது பாணியிலான கதை கூறலைக் கடைப்பிடித்தேன்.  கதையின் முக்கியமான நிகழ்வுகள், தகவல்களை கூறிவிட்டு அவரின் முகத்தை கவனித்தேன். அவரது முகம் ஆச்சர்யப்படும் விதத்தில் மாறியிருந்தது. கதையின் சில நிகழ்வுகளின் போது அவரது கண்கள் ஈரமாகிவிட்டன. உண்மையிலே அத்தருணத்தில் பேசவே இயலாதவனாக, நான் தேடிய அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரு நபராக நடிகராக அவரையே நான் அடையாளம் கண்டேன். நான் பணிபுரிந்த நடிகர்களிலேயே மார்செலோ மட்டும்தான் வெளிநாட்டைச் சேர்ந்த நடிகராவார். எந்த முன் தயாரிப்பும் இன்றி, மனப்பாடங்களும் இல்லாமல் படத்தின் முதல் காட்சியிலிருந்தே நடிக்கத்தொடங்கிய அவரிடம் எளிதாக தொடர்பு கொள்ளத்தொடங்கிவிட்டேன்.
வரலாறு மற்றும் அரசியல் ஆகிய இரண்டும் நீங்கள் உருவாக்குகிற படங்களில் முன்னே இடம்பெற்றிருக்கும். இன்றும் அவை இருக்கின்றன என்றாலும் படத்தின் பின்னணியாய் அவை இருக்கின்றன. ‘தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில் ஒரு உரையாடல் வருகிறது: அரசியலை விட வாழ்க்கை முக்கியம் என்று. நீங்கள் முன்பு ஒரு இடதுசாரி என்று கூறியிருந்தீர்கள். இப்போது அப்பாதையிலிருந்து விலகிவிட்டீர்களா என்ன?
     நான் படங்களை உருவாக்கிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டன. மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் எப்படி சர்வாதிகார ஆட்சி செய்யும் கொடுங்கோலராக மாறுகிறார் என்பதை சித்தரிக்க முயற்சி செய்தேன். அதிகாரம் ஒன்றைத் தொடும்போது அனைத்து விஷயங்களுமே மாற்றமடைவதாக எனக்குத் தோன்றுகிறது. படமானது இரு விஷயங்களை முக்கியத்துவப்படுத்துகிறது. ஒன்று, அதிகாரம், மற்றொன்று சொத்து ஆகும். உறுதியான கருத்தியல் சமதர்மம் என்பதிலிருந்து அனைத்து ஊழல்களும் மெல்லத் தோன்றி வருகின்றன. சமதர்ம ஆட்சிமுறை என்னும் பெயரில்தான் அனைத்தும் என்னைச் சுற்றி நிகழ்கின்றன.  மே 68 போராட்டத்தில் இணைந்த மக்களிடம் நிகழ்ந்த மாற்றங்களை முழுக்க கவனித்து உதவ முடியவில்லை. அனைத்து கருத்தியல்களுமே திருகலானவையாக மாறி மெல்ல மறைந்து போய்விட்டன. ‘சிதெராவிற்குப் பயணம் படத்தில் எனது முதல் படத்தில் முன்னே இருந்த வரலாறை இதில் பின்னணியில் செயல்படுமாறு மாற்றியிருப்பேன்.
     இப்படமானது மக்கள் தங்களுடைய நடைமுறையான நலன்களை புரட்சிக்காக முழுக்க 30 ஆண்டுகள் தியாகம் செய்து அரசியல் வரலாற்று மாற்றங்களுக்காக உழைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் மெல்ல ஒருவர் பின் ஒருவராக அனைவருமே அரசினால் புறக்கணிக்கப்படுவதைத்தான் படம் சித்தரிக்கிறது. அரசியல் பயணமானது நிறைவு பெறும் வகையில் இதில் நாயகனான முதியவர் முன்பு உலகத்தின் மாற்றங்களை கனவு கண்டுவந்தவர்தான். இதில் அவர் மனைவி மட்டுமே அவரின் பக்கம் இறுதிவரை நிற்பாள். மெல்ல இருவரும்  கட்டுமரத்தில் ஏறி கடலுக்குள் செல்வார்கள். ‘யுலிசஸ் கேஸ் படத்தில் லெனினின் உடைக்கப்பட்ட சிலையை எடுத்துக்கொண்டு படகில் டனுபே யில் செல்வது நவீன வரலாறின் அத்தியாயம் ஒன்று முடிவுக்கு வருகிறது என்பதை சுட்டிக்காட்டுவதாக நான் கருதுகிறேன். பல்லாண்டுகளாக உலகமானது சிறந்ததாக மாறிவிடும் என்ற வலுவான நம்பிக்கை இருந்து வருகிறது. இதற்கு எதிராக திரளும் வன்முறை கருத்துகள் பல்வேறு முயற்சிகளின் வழியாக இதனை சிதைக்க முயலுகிறது.  இடதுசாரிகள் பல ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நாடுகளில் இன்றும் இயல்பாக நடைபெறுபவையாக உள்ளன. எனது தலைமுறையினர் இந்த வன்முறையிலான முரண்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கிரீசில் நிகழ்ந்த குடிமைப்போர் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார மற்றும் ஆன்மிக ரீதியான ஆற்றல்களை முழுக்க வீணாக்கிவிட்டது.
பால்கன் நாடுகளின் எதிர்காலம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளவர் நீங்கள். நேட்டோ படைகள் பெல்கிரேட் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது தீவிரமான பிரச்சனையாக மாறியுள்ளதே?
     நாம் துயரமான நூற்றாண்டின் இறுதி நாட்களின் அழகை கண்டுகொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். இவை தொடங்கும்போது  சிறந்த உலகம், நியாயமானது, உலகிடையே உள்ள மக்களின் தெளிவான புரிந்துணர்வு, நம்பிக்கைகள், கனவுகள் இருந்தன. ஆனால் இன்று பல புறங்களிலும் தடைகள், எல்லைக்கோடுகள், எங்குமே புரிந்துணர்வை ஒற்றுமையைக் காண முடியவில்லை. தொழில்நுட்பத்தை பொறுத்தளவில் பேரளவிலான வளர்ச்சியை நாமந் அடைந்திருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் நாம் புனைந்துருவாக்கப்பட்ட கருத்துக்களோ என்று கூட நான் சந்தேகப்படுகிறேன். உண்மையான தகவல் தொடர்பு என்பது இங்கு உயிர்பிழைத்திருப்பது மிக கடினமான ஒன்றே.
‘தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில் அதிகாரி ஒருவர் எல்லைக்கோடு மீது தன் காலை மேலே தூக்கியபடி காலை கீழே வைத்தால் நான் இறந்துவிடுவேன் என்று கூறுகிறார். அவருக்கும் நமக்குமான சரியான தீர்வாக என்ன கூறுவீர்கள்? எல்லைகளை அழித்துவிட வேண்டுமா?
     என்னைப்பொறுத்தவரை அதன் உண்மையான அர்த்தம் ஒருங்கிணைந்த ஐரோப்பாதான். ஒருங்கிணைந்ந ஐரோப்பா மட்டுமே நாங்கள் சர்வாதிகாரம் போர் ஆகியவற்றிலிருந்து தப்பி வாழ ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. ஐரோப்பா பொருளாதார ரீதியாக தனித்துவமான அடையாளம் பெற்றுள்ளது. ஆனால் ஒருங்கிணைந்த அரசியல் தனித்துவம் என்பது மிகவும் தொலைவிலேயே உள்ளது. இது இல்லாமல் பொருளாதார ரீதியான ஒற்றுமை என்பது மிகவும் சந்தேகத்துக்குரிய ஒன்றே ஆகும்.
மனிதனின் இயற்கையான குணங்களை அறிந்துள்ள நீங்கள் எல்லைக்கோடுகள் இல்லாத உலகத்தை காண முடியும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?
     அது உண்மையில் கற்பனையான உலகுதான். மேலும் நான் கனவு காண்பவன். ஆனால் கனவுகளின் தாக்கத்தினால்தான் உலகமே முன்னே பயணிக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
இறுதியாக உலக சினிமா குறித்து உரையாடுவோம். இளமைக்காலத்தில் ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் பார்த்ததாககூறினீர்கள். இன்றும் தொடர்ந்து அதுபோல இப்போதும் பார்க்கிறீர்களா?
     இல்லை. இன்று எனக்கு அதற்கு நேரமில்லை. படம் பார்க்க இன்று சென்றாலும் படத்தினை சரியானதாக முன்பே தீர்மானிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. படத்தினை வீடியோ வடிவில் பார்ப்பது படம் பார்க்கும் அனுபவத்தை எனக்கு துயரமான அனுபவமாக மாற்றிவிடுகிறது. இருந்தாலும் என்னை சமாதானப்படுத்திக்கொண்டு இதனைச் செய்யக்காரணம் இளைஞர்களின் உலகோடு தொடர்புகொள்ளவும், இணைந்திருக்கவும்தான். சில படங்களை ஆர்வம், வேட்கை காரணமாகவும் நான் தேர்வு செய்து காண்கிறேன்.
இன்று சினிமா உருவாக்கப்படுவதை குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்களைப் போன்ற இயக்குநர்களுக்கு படங்களை வெளியிட மிகச்சில விநியோகஸ்தர்கள் மட்டுமே உள்ளனர். மற்றபடி அனைத்தும் பெரும் ஹாலிவுட் நிறுவனங்கள்தான் இங்கு சந்தையை கையகப்படுத்தி உள்ளன.
     இந்த சூழ்நிலை எனக்கு பரவாயில்லை என்றே கூறுவேன். கிரீசில் மட்டுமல்லாது ப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இதே நிலைமைதான். 100 பிரதிகள் என்று என்னுடைய படங்கள் உருவாக்கப்படாவிட்டாலும் குறிப்பிட்ட அளவு வழக்கமான வணிக அளவில் அவை உருவாக்கப்படுகின்றன. இங்கிலாந்திலும் இது கூடுதலாக (அ) குறைவாக இருக்க முடியும். ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளான தைவான், ஹாங்காங், ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வெளியீடு வழக்கமானதாக உள்ளது.
     ஆனால் இதே நிலை தொடர்ந்து நீடிக்குமா என்று எனக்கு தெரியவில்லை. நான் கீழ்நிலையில் விற்பனை உள்ள இயக்குநரா என்று தெரியவில்லை. கலைப்படங்களைப் பொறுத்தளவில் அதன் தொடக்கத்தில்தான் நின்று கொண்டிருக்கிறேன். சினிமா வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். சினிமாத்துறையில் இன்று ஒரு திரைப்படம் ஒரே நேரத்தில் பல்வேறு காட்சிகள் திரையிடப்படுகிறது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பிரத்தியேகமான அணுகுமுறையா என்று தெரியவில்லை. வெல்ஸ் மற்றும் ட்ரேயர் போன்றவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் நினைவுகூரப்படுவதில்லை. ஆனால் இவர்கள் சினிமாவின் வரலாற்றை ஒருமுறை எழுதி இருக்கிறார்கள். தனிப்பட்டமுறையில் இங்கு நிகழும் மாற்றங்கள் பெருமளவு மக்களை முன்னிட்டு நிகழுவதில்லை. சிறிய அளவிலான குழு மக்களுக்காகவே நிகழுகின்றன. விதிவிலக்கான மக்கள்.
அந்த விதிவிலக்கான மக்கள் தங்களுக்கான விற்பனை இடத்தை கொண்டிருக்கிறார்களா?
     இன்று இல்லையென்றால் நாளை; நாளை அல்லது நாளை மறுநாள் அவை உருவாகும். பல மக்கள் நினைப்பது போல் நான் நம்பிக்கையற்றவன் அல்ல. ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே நான் பார்க்கிறேன்.
சிலர் நீங்கள் வெறும் நம்பிக்கையற்ற மனிதர் அவ்வளவுதான் என்று கூறுகிறார்களே?
     இல்லை. நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் துயரார்ந்த நிலையைக் கொண்டவன் துயரார்ந்த நிலை என்பது படைப்பாற்றலின் முக்கியமான ஆதாரம் என்று அரிஸ்டாடில் கூறியிருக்கிறார். பல்வேறு சாதனைகளை முறியடித்து ஒன்றை ஒன்று முந்திச்செல்லும் படங்கள் குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை. சில படங்கள் மிகப் பிரம்மாண்டமான வெற்றி பெற்று பின்னர் மறக்கப்பட்டுவிடும்; சில படங்கள் குறைவான மக்களால் காணப்பட்டாலும் சினிமா வரலாற்றில் தனது தடத்தை வலுவாக பதித்துச்செல்வதுமுண்டு.
அப்படி மறக்கமுடியாத தன்மை கொண்ட படங்களைக் கண்டு இருக்கிறீர்களா?
     அப்படி பார்க்காதது எனக்கு பயமாகவே இருக்கிறது. ஆனால் எனது நம்பிக்கையின்படி விரைவில் (அ) பின்னர் அவை நிச்சயம் உருவாகி வரும்.
ஆனால் அப்படி ஒரு திரைப்படம் வரும்போது யாராவது ஒருவர் அதனை குறித்து பாராட்டி எழுதுவார்கள். சினிமா விமர்சகராகவும் நீங்கள் பணிபுரிந்திருக்கிறீர்கள். உங்களது படங்களை பெருமளவு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விமர்சகர்களின் பங்கும் முக்கியமானது. இன்றைய காலத்தில் சினிமா விமர்சனம் குறித்து உங்களது கருத்து என்ன?
     இன்று ஊடகங்களின் பிரதிபலிப்பு அதிகம் இருப்பதால் பல்வேறு விமர்சனங்களைப் படித்தாலும் அவற்றில் உண்மையான விமர்சனம் என்பது மிக குறைந்தளவே இருக்கிறது என்று கூறுவேன். இன்று பதிப்பிக்கப்படும் விமர்சனக்கட்டுரைகள் மிகையளவானதாகவும், வசீகரம் மிக்கதாகவும் உள்ளதே தவிர கருத்தாழமோ, உண்மையின் பிரதிபலிப்போ இல்லை. தனிப்பட்ட முறையில் விமர்சனம் என்பது படைப்பாற்றலும் சவாலும் மிக்க ஒரு பணியாகும். ஆனால் இன்று அந்த முறையில் அவை இல்லை. பொதுமைப்படுத்தப்பட்ட முறையில் கூற விரும்பவில்லை என்றாலும் பொதுவாக விமர்சகர்கள் படத்திற்கு ஏதோ பட்டம் தருவது போல தரமதிப்பீட்டு சான்றிதழ்களை அளித்து வருகின்றனர். இவற்றை ஒருவர் வாசிப்பதால் என்ன கிடைக்கும்? முன்பு என்னுடைய படங்களில் ஒன்றிற்கு விமர்சனம் எழுதப்பட்டிருந்தது:  பிடித்திருக்கிறதா இல்லையா, பொழுதுபோக்கிற்கு காணலாம், ஆழமானது. இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இவற்றின் தாக்கம் நீடிக்காது. படங்களின் தரம் அதிகரிக்கும்போது விமர்சகர்கள் அதனை பின்தொடர்ந்து செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
     சில சமயங்களில் நான் எனது தனிப்பட்ட பிரச்சனைகளைப் பேசுவது போலவும் தோன்றுகிறது. இது எனது தலைமுறையின் பிரச்சனைகளாக இருக்கக்கூடும். நான் உருவாக்கியதைப் போல பலரும் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கிடையிலான காலத்தில் படங்களை உருவாக்கிவருகிறார்கள். அவர்களின் படங்கள் என்னுடைய படங்களிலிருந்து வேறுபட்டவை; ஆனால் நாங்கள் உண்மையான ஒன்றினை உயிர்ப்பான தன்மையை உணருவதற்கு, புத்திசாலித்தனத்தை பெறுவதற்கு நாளைய எதிர்காலம் குறித்த கனவைக் காண்பதற்கு பயிற்றுவிக்கிறோம். இது இங்கே முடிந்துவிடாது என்ற நம்பிக்கை உள்ளது.

                           -நிறைவு-
தகவல்களுக்கு: theoangelopoulos.com
நன்றி: பாதரசம் சரவணன், வடிவமைப்பாளர் மெய்யருள், உதவி இயக்குநர் ராம் முரளி, ஆசிரியர் புனிதக்குருதி, மற்றும் என் கொழுந்தியாவுக்கு.




     

பிரபலமான இடுகைகள்