உள்ளூர் உணவு, உலக உணவு எது சிறப்பானது?

Food, Salad, Raw, Carrots, Sliced And Diced

இன்று நாம் கேஎப்சியில் சிக்கன்களை பக்கெட் ஆபரில் வாங்கி சாப்பிட்டுவிட்டு தாகம் எடுத்தால் கோலா பானங்களை தேடிக்குடிக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அதே சுவையில் இங்கேயும் கோலா பானங்களை தயாரித்து விற்கிறார்கள்., நிலப்பரப்பிற்கான சுவை என்பது இன்று மெல்ல அழிந்துவருகிறது. அதேசமயம் இதற்கு எதிரான உள்ளூர் உணவுகளை சாப்பிட அறிவுறுத்தும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த குழுக்களும் உருவாகி வருகின்றனர்.

 உள்ளூர் உணவுவகைகளை ஏன் சாப்பிடவேண்டும்? காரணம் குறிப்பிட்ட உணவு வகைகளை தேடி சாப்பிடத் தொடங்கினால் அதனை குறிப்பிட்ட இடத்திலிருந்து கொண்டு வர பல்வேறு சிரமங்கள் உண்டு,. மேலும் சூழல் மாசுபாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். திருநெல்வேலி அல்வா என்பது அங்குள்ள நீரில் செய்யப்பட்டு சாப்பிடும்போது அதன் சுவை நன்றாக இருக்கும். அதே சுவையில் இங்கு சாப்பிடவேண்டும் என ஆசைப்படுவது தவறான ஒன்று. அதேபோல நேர்த்தியாக இங்கேயே செய்து சாப்பிடலாம்.

இதுபோல குறிப்பிட்ட உணவுவகைகளுக்கு டிமாண்ட் ஏற்படுவது அங்குள்ள பல்வேறு இயற்கை வள ஆதாரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே உள்ளளூர் வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது. நீங்கள் திருநெல்வேலி போகும்போது சுடச்சுட வாங்கி அல்வா சாப்பிட்டுக்கொள்ளலாம். தவறில்லை.

இன்று அமெரிக்காவில் உண்ணப்படும் 15 சதவீத உணவுகள் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவைதான்.

ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற குறிப்பிட்ட பருவங்களுக்கு கிடைத்த பழங்கள் இன்று ஆண்டு முழுக்க கிடைக்கின்றன. இவை பல மாதங்களுக்கு முன்பே பறிக்கப்பட்டு பழுக்க வைக்கப்பட்டு வணிகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கப்பட்டு இவை விற்கப்படுகின்றன. இவற்றில் எந்த சத்துக்களும் இருக்காது.  அவ்வப்போது பறித்து விற்கப்படும் பழங்களில் மட்டுமே சத்துகள் இருக்கும். இதனை ஃபுட் மைல்ஸ் என்கிறார்கள்.

உலகளவில் அரிசி, பன்றிக்கறி இறைச்சி, இறால், நல்லெண்ணெய், கோதுமை ஆகியவை அதிக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்


பிரபலமான இடுகைகள்